Thursday, May 14, 2015

தினமும் 4 கப் காபி குடிக்கிறீங்களா? ஏற்படும் விளைவுகள் !

தினமும் நான்கு கப் காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனால் பெண்களுக்கு 25% குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைகிறது.

காஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு ரசாயனப் பொருள் ஆகும். இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து இரத்தஅழுத்தத்தையும் அதிகரிக்கிறது.

இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.
குழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர்கள் பட்டியலிடும் புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் எடை என்னும் அதி முக்கிய மூன்று காரணிகளுடன் இப்போது காஃபைன் எனும் விஷப் பொருளும் இணைந்துள்ளது.

கருவுறுதலில் மட்டுமல்ல, தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் காபி குடித்தால் அந்த நச்சுத் தன்மை கருவில் இருக்கும் குழந்தையைக் கூட சென்று தாக்குகிறது.

காபி குடித்துக் கொண்டே தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைக்கும் பெண்கள், வாரம் தோறும் மூன்று கப் மதுவும் அருந்தினால் அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு வெறும் 5 விழுக்காடு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment