பல கோடி ரூபாய்கள் செலவு செய்து அன்னியன், தசாவதாரம், ஐ என மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்களைத் தயாரித்ததன் மூலம் தமிழில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது ஆஸ்கார் பிலிம்ஸ்!
யார் கண்பட்டதோ…. தற்போது சிரமதிசையில் சிக்கித் தவிக்கிறது ஆஸ்கார் பிலிம்ஸ் பட நிறுவனம்.
அடிப்படையில் திரைப்பட விநியோகஸ்தரான ஆஸ்கார் ரவிசந்திரன், ‘வானத்தைப்போல’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்தவர்.
தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களை… இயக்குநர்களை வைத்துப் படங்களைத் தயாரித்தார்.
அவர் தொட்டதெல்லாம் பொன்னாக…. பணம் கொட்டோ கொட்டு என கொட்டியது.
சில கோடி பட்ஜெட்களில் படங்களைத் தயாரித்து வந்த ஆஸ்கார் ரவி, அன்னியன், தசாவதா£ரம் படங்களை 30 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து மெகாபட்ஜெட்டில் தயாரித்தார்.
அடுத்து, ஐ படத்தை 75 கோடி பட்ஜெட்டில் தயாரித்தார்.
அதுமட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல படங்களையும் தயாரித்து வந்தார்.
அதாவது சுமார் 100 கோடி ரூபாயை ஒரே நேரத்தில் படத்தயாரிப்பில் முதலீடு செய்தார் ஆஸ்கார் ரவி.
இப்படி அகலக்கால் வைத்ததுதான் ஆஸ்கார் ரவிக்கு ஆபத்தாகிவிட்டது.
சில வருடங்களுக்கு முன்புவரை சாதாரண விநியோகஸ்தராக இருந்த ஆஸ்கார் ரவிக்கு ஏது இவ்வளவு பணம் என திரையுலகினர் பொறாமையில் பொசுங்கிப்போயினர்.
திமுக ஆட்சி இருந்தபோது… சன் டிவியின் பினாமிதான் ஆஸ்கார் ரவி என்று சொல்லப்பட்டது.
அதிமுக ஆட்சி மாறியதும்…சசிகலாவின் பினாமி என்றனர்.
உண்மையில் ஆஸ்கார் ரவி, ஐடிபிஐ, ஐஓபி போன்ற வங்கிகளில்தான் பல கோடி கடன்களை வாங்கி படங்களைத் தயாரித்திருக்கிறார்.
குறிப்பாக ஐ படத்துக்காக மட்டுமே சுமார் 80 கோடிக்கு மேல் கடன் வாங்கி இருக்கிறார்.
ஐ படத்தின் பேரில் பல கோடி கடன் பெற்ற ஆஸ்கார் ரவி, கடனை அடைக்காமலே சாமர்த்தியமாக படத்தை வெளியிட்டார்.
இது தொடர்பாக ஐஓபி வங்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஐஓபி வங்கியில் வாங்கிய சுமார் 84 கோடி ரூபாய் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 97 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாதினால், சென்னை அசோக் நகரில் உள்ள ஆஸ்கார் ரவியின் அலுவலகம், அபிராமபுரத்தில் அவர் வசிக்கும் வீடு, மற்றும் வேலூரில் உள்ள அவரது சந்தோஷ், சப்னா, சாந்தம் என மூன்று தியேட்டர்கள் ஆகிய சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது ஐஓபி வங்கி.
இது குறித்த சொத்து சுவாதீன அறிவிப்பை முன்னணி நாளிதழ்களில் வெளியிட்டிருக்கிறது ஐஓபி வங்கி.
அகலக்கால் வைக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஆஸ்கார் ரவிக்கு ஏற்பட்ட நிலைமை சரியான பாடமாக இருக்கும்.

No comments:
Post a Comment