Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Wednesday, August 8, 2018

ஜெயலலிதா இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்: சசிகலா உறவினர் கிருஷ்ணப்ரியா பரபரப்பு டுவீட்

ஜெயலலிதா இருந்திருந்தால் கருணாநிதிக்கு மெரினாவில் நிச்சயம் இடம் ஒதுக்கியிருப்பார் என்று சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.

கருணாநிதி உடல்நல குறைபாடுகளால் இன்று மறைந்தார். அவரது உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் அண்ணாவின் நினைவிடத்துக்கு பக்கத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுகவினர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தது.

இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மாறாக சட்ட ரீதியான காரணங்களை தெரிவித்தது. இதையடுத்து திமுக நீதிமன்றத்தை நாடியுள்ளது. தமிழக அரசின் செயலை அனைத்து கட்சியினரும் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா டுவிட்டரில் இரு பதிவுகளை இட்டுள்ளார்.

அதில் அம்மா உயிருடன் இருந்திருந்தால், கண்டிப்பாக , திரு கலைஞர் அவர்களுக்கு அறிஞர் அண்ணாவிற்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம்.

அம்மாவை அரசியல்வாதியாக மட்டுமே, தள்ளி நின்று பார்த்தோர்க்கு இது தெரியவும் வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Monday, May 18, 2015

கமலுக்குத் தெரிந்தது ரஜினிக்குத் தெரியவில்லையா?

கமல் தன்னுடைய அடுத்தபடமான தூங்காவனம் பற்றி காணொளி மூலம் மக்களுக்குச் சொல்லிவிட்டார். அவருடைய உதவியாளர் ராஜேஷ்தான் அந்தப்படத்தை இயக்கப்போகிறார் என்றும் அறிவித்துவிட்டார். அடுத்தபட அறிவிப்பை அவர் இப்படி வெளியிடக் காரணம் என்ன?

கமல் வெளியிடுவதற்கு முன்பே கமலின் அடுத்தபடம் ஓர்இரவு என்றும் அந்தப்படத்தில் கமல் காவல்துறைஅதிகாரியாக நடிக்கிறார் என்றும் செய்திகள் வலம்வரத்தொடங்கிவிட்டன. இது இப்படியே போனால் பெரியசிக்கலாகிவிடும் என்று எண்ணித்தான் அவரே நேரடியாகப் பேசி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்கிறார்கள்.

ஏற்கெனவே 2003 இல் விருமாண்டி படம் தொடங்குகிற நேரத்திலும் இதுபோன்று நடந்தது. அப்போது ரஜினியின் பாபா படம் பற்றி ஊடகங்கள் ஏகத்துக்கும் எழுதிவிட அதனாலேயே அந்தப்படம் தோல்வியடைய நேர்ந்ததென்று சொல்லப்படும். அந்தச்சமயத்தில் கமல் விருமாண்டி படத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில் அந்தப்படத்துக்கு சண்டியர் என்று பெயர் வைத்து அதனால் பல எதிர்ப்புகள் வந்தன. அதன்பின் விருமாண்டி என்று மாற்றினார்.

அப்போதும் அந்தப்படம் பற்றி ஏகத்துக்கும் எழுதத் தொடங்கினார்கள். அப்போது பத்திரிகையாளர்களைத் தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்துச் சந்தித்தார் கமல். தயவுசெய்து விருமாண்டி படம் பற்றி நீங்களாக எதுவும் எழுதாதீர்கள். நாங்களே படம் பற்றி அவ்வப்போது செய்திகளைக் கொடுத்துவிடுகிறோம் என்று சொன்னார். அதுபோலவே நடந்தது.

இப்போதும் அப்படியே நடந்திருக்கிறது. அதனாலேயே கமல் பேசும்போது, நீங்களே பல கதைகளைச் சொல்கிறீர்கள் அது நன்றாகவும் இருக்கிறது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படம் பற்றிய செய்திகள் என்றால் வாசகர்கள் விரும்பிப்படிக்கிறார்கள் என்பதாலேயே நிறையச் செய்திகள் எழுதப்படுகின்றன. இதைப் புரிந்துகொண்ட கமல் இதைத் தடுக்க வேண்டுமானால் நாமே பேசுவதுதான் சரி என்று நினைத்துப் பேசிவிட்டார்.

இப்போது ரஜினி படம் பற்றியும் இதேபோல செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் ரஜினி தரப்பிலிருந்து இதுபோல் எந்த அறிவிப்பையும் அவர்கள் கொடுக்கவில்லை. அவர்களே சொல்லிவிட்டால் யூகங்கள் செய்திகளாகாது என்பதை ரஜினி படக்குழுவினர் புரிந்துகொள்ள மறுப்பது ஏனோ?

படத்தை சீக்கிரமா கண்ணுல காட்டுங்கப்பா.. வயசாயிடும் போல...!சூப்பர் ஸ்டார்

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாகுபலி படம் இறுதிக் கட்ட பணிகளை எட்டியுள்ளது. இதன் இசை வெளியீடானது இந்த மாதம் 31ம் தேதியன்றுஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

படத்தின் இசை வெளியீட்டிற்கே கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கின்றனர்.

சரித்திரப் படமாக எடுக்கப்பட்டு வரும் பாகுபாலியில் நடிகைகள் அனுஷ்கா, நித்யா மேனன், ஸ்ரீதேவி நடிகர்கள் பிரபாஸ், ராணா, சுதீப், சத்யராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர்.


ஜூலை மாதம் வெளியாகவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருக்கிறார்.

படத்தை சீக்கிரமா கண்ணுல காட்டுங்கப்பா.. வயசாயிடும் போல...!

Sunday, May 17, 2015

இரவு சாப்பிட்ட பின் இதெல்லாம் செய்யாதீங்க!

நம் உடலை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் நமக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை.

வாக்கிங் செல்வது

இரவு உணவை முடித்துக் கொண்டு நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் நல்லது என பலர் அறிவுரை கூறுவதுண்டு. ஆனால் அது முற்றிலுமாக கேடு விளைவிக்கும் செயல் என்றே கூறலாம்.
ஏனெனில் சாப்பிட்ட உடன் நடக்கும் போது கைகளுக்கும், கால்களுக்கும் இரத்தம் வேகமாகப் பாய்வதால் செரிமானம் தாமதமாகவே நடைபெறுகிறது.

மேலும், சாப்பிட்ட பின் நடப்பதால் சிலருக்கு வயிற்று வலியோ, தலைச்சுற்றலோ ஏற்படும்.

ப்ரஷ் செய்வது

இரவு உணவுக்குப் பின் உடனடியாக பல் துலக்க கூடாது.
ஏனெனில் உணவுகளை மென்று சாப்பிடுவதற்காக, பற்களுக்கு நிறைய வேலைகள் கொடுப்பதால், அது மீண்டும் வலுப்பெற சிறிது நேரமாகும்.

எனவே குறைந்தது 30 நிமிடங்கள் கழித்தே பல் துலக்க வேண்டும்.

ஷவர் குளியல் கூடாது

சாப்பாட்டிற்கு பிறகு நன்றாக குளித்துவிட்டால் தூக்கம் நன்கு வரும் என சிலர் ஷவர் குளியல் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறு செய்வதன் மூலம் குறிப்பாக வயிற்றுக்குப் போக வேண்டிய இரத்தம் குறைந்து விடுவதால், செரிமானம் பாதிக்கப்படுகிறது.

லாங் ட்ரைவ்

பொதுவாக சில வாகன பிரியர்கள் இரவு உணவை முடித்துவிட்டு நீண்ட தூரம் வண்டியில் பயணித்துவிட்டு வர வேண்டும் என விரும்புவர்.

ஆனால் இரவு உணவுக்குப் பின் வண்டி ஓட்டுவதும் நல்லதல்ல. மேலும் வயிறு முழுக்க சாப்பாடு நிரம்பி இருப்பதால், ஓட்டுவதில் முழுமையாக கவனம் செலுத்த முடியாது.
எனவே சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பின் வண்டி ஓட்டலாம்.

உடனடியாக தூங்குவது

இரவு சாப்பிட்ட பின் உடனடியாகத் தூங்கச் செல்வதால், செரிமானப் பிரச்சனைகள் மட்டுமல்ல, பல வாயுத் தொந்தரவுகளும் ஏற்படக் கூடும்.

இதனால் உடல் எடையும் தாறுமாறாக அதிகரிக்கும். எனவே, இரவு உணவுக்கும் தூக்கத்துக்கும் இடையே குறைந்தது ஒரு மணி நேர இடைவெளியாவது இருக்க வேண்டும்

Saturday, May 16, 2015

ருத்ராட்சத்தின் நாம் அறியா மருத்துவ குணங்கள்!

ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.

ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் துõக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை தூளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும்.

தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் ஆகும். ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது. ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும். பிறர், வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம். ருத்ராட்சத்தைக் கழுத்தில் மாலையாக 32ம், கை மணிக்கட்டில் 12ம், மேல் கையில் 16ம், மார்பில் 108ம் ஆக தரிக்கலாம்.

ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும். மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும். ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.

ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும். எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.

ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.
பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும். பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.
.
ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்.

சுக்கிரீவனுக்காக வாலி கொல்லப்பட்டானா?

இராமாயணத்தில் இராமபிரானே பாட்டுடைத் தலைவன். தசரதனின் தலைமகன் என்பதற்கப்பால் இராமபிரானிடம் எண்ணிறைந்த நற்குணங்களும் அறக் கொள்கைகளும் இருந்துள்ளன.

இதன் காரணமாக இராமர் இருக்கும் இடமெல்லாம் அயோத்தி என அந்நாட்டு மக்கள் நினைத்தனர்.
இத்துணை சிறப்பு மிக்க இராமன் வாலி வதையில் நடந்து கொண்ட முறை பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது.
வாலியை இராமர் மறைந்திருந்து தாக்கியமை யுத்த தர்மமன்று என்பதே வாதப்பொருள்.

தர்மம் உணர்ந்த இராமர் அவ்வாறு நடந்து கொண்டமை தவறிலும் தவறு என்பதே வாதம் புரிவோரின் கருத்து.
வாலியை மறைந்திருந்து தாக்கியமை ஒரு புறமிருக்க வாலியை வதம் செய்ய வேண்டிய தேவை இராமருக்கு ஏற்பட்டது ஏன்? என்று ஆராய்ந்தால், அந்த வதம் சுக்கிரீவனுக்காக நடந்ததன்று.

சுக்கிரீவனின் மனைவியை வாலி கவர்ந்து சென்றான் என்பதாலும், தன் அண்ணனான வாலியை எதிர்க்கும் வல்லமை தனக்கில்லாத காரணத்தாலும் சுக்கிரீவன் இராமனைத் தஞ்சமடைந்தான்.

மிகப்பெரும் பராக்கிரமசாலியாகிய வாலி இலங்கை வேந்தன் இராவணனின் ஆருயிர் நண்பன். அதேநேரம் இராம பக்தன்.

இந்த இருபெரும் நிலைமைகளும் இராம - இராவண யுத்தத்திற்கு பெருந் தடையாக இருக்கும்மென்பது இராமருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

வாலியை வதம் செய்வது என்ற இராமரின் முடிவு சுக்கிரீவனூடாக நடந்தேறுகிறது.
அதாவது சுக்கிரீவன் மனைவியை வாலி கவர்ந்தான் என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி, இராவணனுக்கு நெருங்கிய நண்பனாகிய வாலியை இராமர் மறைந்திருந்து தாக்கினார்.

இராமர் நினைத்திருந்தால் சுக்கிரீவனையும் வாலியையும் ஒற்றுமைப்படுத்தியிருக்க முடியும்.
எல்லா அறமும் தெரிந்த இராமர் சகோதரர்களை ஒற்றுமைப்படுத்தியிருக்க வேண்டும் அல்லவா? அதை ஏன் அவர் செய்யவில்லை.

வாலி உயிரோடு இருந்தால் இராவணனை வதம் செய்ய ஒருபோதும் விடமாட்டான்.
இராமருக்கும் இராவணனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் ஒற்றுமைப்படுத்தியிருப்பான்.
பேச்சுவார்த்தையின் முதற்கட்டத்தில் சீதை விடுதலை பெற்றிருப்பாள்.

எனவே இராம - இராவண யுத்தம் நடக்காமல் போகக்கூடிய வாய்ப்பு உண்டென்பதாலேயே இராமர் வாலியை மறைந்திருந்து தாக்கினார்.

வாலி வதம் சுக்கிரீவனுக்காக இராமர் செய்தது போல் இருந்தாலும், இராமர் தன் சுயநலனுக்காகவே வாலியை கொன்றார்.

இந்த உண்மையை எங்கள் நாட்டிலும் நாம் அனுபவ ரீதியாகக் காண்கிறோம் சிலருக்கு சமாதானம் பிடிப்பதேயில்லை.

இது ஒருபுறமிருக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் சூடு கடுமையாகக் கிளம்பியுள்ளது.

அதிலும் ஐ.தே.க வின் பிரதித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி காலஞ் சென்ற பிரேமதாஸவின் மகனுமாகிய சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை சந்தித்தது தேர்தல் களத்தை மேலும் சூடேற்றியுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிக்க வேண்டுமானால் சஜித் பிரேமதாஸவை தனது பக்கம் இழுத்தாக வேண்டுமென்பதே ஜனாதிபதி மகிந்தவின் இராஜதந்திரம்.

மகனே! சஜித்! ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஐ.தே.கவில் யாருமேயில்லையா? ரணில் இல்லை என்றால் பிரேமதாஸவின் மகனாகிய நீரன்றோ ஜனாதிபதி வேட்பாளர்.

நீர்தான் ஜனாதிபதி வேட்பாளராக வருவீரென்று நான் நம்பியிருந்தேன். எனது நண்பர் பிரேமதாஸவின் மகனாகிய தாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்வடைந்திருப்பேன்,
ஆனால் மைத்திரிபாலவை பொதுவேட்பாளராக்கி ஐ.தே.கவேயே கருவறுத்து விட்டனர் என்று சஜித்திடம் ஜனாதிபதி மகிந்த சொல்லியிருந்தால் சுக்கிரீவனுக்காக வாலி வதம் நடந்த கதையாகவே நிலைமை முடியும்.

சிமெண்ட் சுவற்றில் அல்லது தளத்தில் விரிசல் விழுந்தால் எப்படி சரிசெய்வது..


சிமெண்ட் சுவற்றில் அல்லது சிமெண்ட் தளத்தில் விரிசல் விழுந்தால் சரிசெய்வது எப்படி..?

சுவர் விரிசல் கீழ் மட்டத்தில் மட்டும் இருக்கிறதா அல்லது தளம் மொத்தத்திலும் விரிசல் விட்டிருக்கிறதா என பார்க்கவேண்டும் கீழ் மட்டத்தில் மட்டுமென்றால் காற்று விரிசலாகவோ, கலவை சரியாக கலக்காததாலோ ஏற்ப்பட்டு இருக்கலாம்.

சுவர் விரிசலின் இருபுறமும் 3 இன்ச் அளவு காரையை பெயர்த்துவிட்டு 'கிராக் பில்லர்' (Crack Fillar) என்ற கெமிக்கலை  சிமெண்ட்டுடன் கலந்து பூசினால் விரிசல் மறைந்து விடும்.

மொத்தமாக தளத்தில் விரிசல் ஏற்ப்பட்டிருந்தால் சீலிங் மேர்ப்பகுதியிலிருந்து நீர்க்கசிவு இருக்கும். 20 ஆண்டுகளுக்கும் மேலான வீடுகளில் இந்த பிரச்னை ஏற்ப்படலாம். அதற்க்கு தளத்திற்கு கீழே தாங்கும் கட்டைகளை வைத்து 'கனைட்டிங் கருவி(cunniting)' மூலம் கான்கிரீட் கலவையை விரிசல் பகுதியில் பீய்ச்சியடித்தல் விரிசல், ஓட்டை அடைபடும்.

மழைக்காலத்தில் சன்சைடில் தண்ணீர் தேங்கினாலோ சுவர்களின் உட்புறம் வரும் தண்ணீர் குழாய்களில் துவாரம் இருந்தாலோ விரிசல் வழியாக ஈரக்கசிவு இருக்கும். அதிக அளவு ஈரமிருக்கும் பகுதியில் சில இன்ச் சுவற்றை உடைத்து பைப்பை சரிபடுத்திவிட்டு சிமெண்ட் கலவை பூசலாம்.

அன்பே சிவம் கூட்டணியை மறுபடியும் உருவாக்கும் கமல் - தூங்காவனம் படத்திற்கு..?

அன்பே சிவம் படம் பார்த்தவர்களுக்கு, கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோயின் எனும் அளவுக்கு கமலை ஒருதலையாய் காதலிக்கும் உமா ரியாஸை மறந்திருக்க முடியாது.

அதுவும், கமல் வேறு பெண்ணை காதலிப்பது தெரிந்து, உமா பொறுமும் அந்தக் காட்சி அத்தனை இயற்கையாக அமைந்திருக்கும். ஆனால் அதன் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்குப் பெரிய பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.

இப்போது மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அடுத்து தான் நடிக்கும் தூங்கா வனம் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உமா ரியாஸை அழைத்துள்ளாராம் கமல்.

கமலின் தீவிர ரசிகைகளுள் ஒருவர் உமா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்க, த்ரிஷா, அனைகா, மனீஷா கொய்ராலா, பிரகாஷ் ராஜ் உடன் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஜூனில் படம் தொடங்குகிறது.

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை - ஆர்யா பெயருக்கு கிடைக்காத கைத்தட்டல் விஜய் சேதுபதிக்குக் கிடைத்தது.

'இயற்கை', 'ஈ', 'பேராண்மை' படங்களின் இயக்குநர் ஜனநாதனின் நான்காவது படம் 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'. ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி என மூவரும் இணைந்திருக்கும் படம் எந்த மாதிரியான அனுபவத்தைக் கொடுத்தது?

டைட்டில் கார்டில் ஆர்யா பெயருக்கு கிடைக்காத கைத்தட்டல் விஜய் சேதுபதிக்குக் கிடைத்தது.

கைதியாக இருக்கும் ஆர்யாவுக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிடுகிறார். ஆனால், ஆர்யா அதுகுறித்த எந்த சலனமும் இல்லாமல் நீதிமன்றத்தில் ஜாலியாக உட்கார்ந்து கடலை சாப்பிடுகிறார். நீதிபதி தீர்ப்பு கூறியதும், என்னை போர்க்குற்றவாளியாகக் கருதி சுடுங்கள் என்று ஆர்யா கேட்கிறார். அப்போதே ரசிகர்கள் சத்தமில்லாமல் படம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

ஆர்யாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் பொறுப்பு சிறைச்சாலை அதிகாரி ஷாமிடம் ஒப்படைக்கப்படுகிறது. தூக்கில் போடும் அனுபவம்மிக்க ஊழியர் விஜய் சேதுபதியை ஷாம் தேடிப் பிடிக்கிறார். இதற்கிடையில், போராளி கார்த்திகா, ஆர்யாவை தப்பிக்க வைக்க முயற்சிக்கிறார். இதில் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

பாலு என்கிற பாலுச்சாமியாக தீவிரமான கம்யூனிஸ்ட் போராளியாக ஆர்யா கச்சிதமாக நடித்திருக்கிறார். அளவான வசனம், தீர்க்கமான பார்வை, நம்பிக்கையோடு இயங்குதல் என எல்லா தளங்களிலும் தன்னை செதுக்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், மிகப்பெரிய ரயில் கொள்ளையை நடத்திய ஆர்யா எந்த இடத்திலும் புத்திசாலியாகவே காட்டப்படவில்லை.

ஷாம் சிறைச்சாலை அதிகாரி மெக்காலே கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம். சட்டப்படிதான் எதையும் செய்வேன். சட்டம் தான் குற்றங்களைத் தடுக்கும். ''செஞ்ச தப்புக்கு ஏத்த மாதிரி கையை வெட்டணும், காலை வெட்டணும், தலையை வெட்டணும், தப்பு பண்ணவனை நடுரோட்டுல நிக்க வெச்சு கல்லாலயே அடிச்சு கொல்லணும்'' என்கிற ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக தீவிரமாக நடித்திருக்கிறார். நிதானமான, உறுதியான ஷாமின் நடவடிக்கைகள்தான் படத்தை நகர்த்தவே உதவுகின்றன.

தூக்கில் போடும் ஹேங்மேன் எமலிங்கம் கேரக்டரில் விஜய் சேதுபதி பக்கா ஃபிட். சென்னை பாஷை பேசிக்கொண்டு, சரக்கடித்துவிட்டு சலம்புவதும், எமோஷனில் கரைவதுமாக மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். படம் முழுக்க ஃபெர்பாமன்ஸில் கவனம் ஈர்ப்பது விஜய் சேதுபதிதான்.

போராளியாக கார்த்திகா, குயிலி கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார். காதல், கிளாமர், டூயட் என்று இல்லாத அழுத்தமான பாத்திரத்தில் நடித்ததற்காக கார்த்திகாவைப் பாராட்டலாம்.

ஜனாதிபதி தேர்தலில் நின்றதற்கான காரணத்தை விஜய் சேதுபதி சொல்வது, கைதி பல வருடங்களுக்குப் பிறகு நிரபராதி என்று தெரிந்ததும் விடுதலை செய்யப்படுவதும், அந்தக் கைதி குடும்பத்தை இழந்து கண்ணீரில் கரைவதும் என சமகால சூழலை கொஞ்சம் நையப் புடைத்திருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.

விஜய் சேதுபதி அறிமுகப் படலத்தில் அப்படி ஒரு பாடல் அவசியம்தானா சாரே?

படத்தின் முக்கிய மையமாக இருக்கும் ஆர்யாவின் பின்புலம் என்னவென்றே தெரியவில்லை. கார்த்திகாவுக்கும் அப்படியே.

விஜய் சேதுபதியின் பின்புலமும், கதாபாத்திர வடிவமைப்பும் நேர்த்தியாகவும், இயல்பாகவும் உள்ளது.

எல்லோரையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும், ரகசியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஷாம் எப்படி விஜய் சேதுபதியை மட்டும் கண்காணிக்காமலேயே இருக்கிறார்?

ஷாம் நினைத்திருந்தால் விஜய் சேதுபதிக்குப் பின்னால் இருக்கும் அந்த கூட்டத்தையே பிடித்திருக்கலாமே?

வெள்ளை பேப்பரில் பாலில் எழுதுவது, சமஸ்கிருதத்தில் துப்பு கொடுப்பது, சட்டையில் க்யுஆர் கோடு (QR code) எல்லாம் நல்ல ஐடியா தான். ஆனால், எதுவும் அடடே என ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு க்ளிக் ஆகவில்லை.

உலகக் கழிவுகளை இந்தியாவில் கொட்டுவதைக் குறித்து உரக்கப் பேசுகிறார் ஆர்யா. அதற்குப் பிறகு யாருமே அதை கண்டுகொள்வதில்லையே. மரண தண்டனையின் நீட்சியாகவே படம் நீள்கிறதே?

ஷாமும்- ஆர்யாவும் தனியாக பேசும் காட்சி எந்த அளவுக்கு காத்திரமாக இருந்திருக்க வேண்டும்? எதைப்பற்றியும் தெளிவுபடுத்தாமல் காமா சோமோவென்று நகர்வது எந்த விதத்தில் நியாயம்? படத்தின் மொத்த பலமும் அங்கே புஸ்ஸாகிப் போய்விடுகிறது.

செல்வகுமாரின் சிறைச்சாலை செட் 'ரியல்' உணர்வைத் தருகிறது. சிறைச்சாலை குறித்த விதிமுறைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் இம்மி பிசகாமல் அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால், அதே போல படத்தின் திரைக்கதையை ஜம்ப் ஆகாமல் இருக்கும்படி கவனம் செலுத்தி இருந்தால், வசன ரீதியான பிரச்சாரத்தைத் குறைத்திருந்தால் 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக பட்டா போட்டு அமர்ந்திருக்கும்.

ஆனாலும், அசுத்தம், மரணதண்டனை , கருணை மனு ஆகியவற்றைப் பேசிய விதத்தில் புறம்போக்கு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம்.

பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல் !!!

கலிலியோ…இன்றைய அறிவியல்
புரட்சிக்கு 15ம்
நூற்றாண்டிலேயே வித்திட்டவர். நவீன
வானியலின் தந்தை எனக்
குறிப்பிடப்படுகின்றார். இத்தாலியில்
பிறந்து, சூரியக் குடும்பம் பற்றிய பல
உண்மைகளை உலகுக்கு உணர்த்தியவர்.
விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மானசீக
குருவான கலிலியோ பற்றிய
சுவாரஸியமான தகவல்கள் இதோ…
பெண்டுலம் கடிகாரத்தை உருவாக்க
பெரும்பாடுபட்டார் கலிலியோ.
ஆனால் அந்த ஆராய்ச்சியில்
அவருக்கு தோல்வியே கிடைத்தது.
ஆயினும் அவரது ஆய்வுக் குறிப்புகள்
தான், பின்னாளில் வந்த இயற்பியல்
விஞ்ஞானிகளுக்கு வேத
பாடமாகியது.

இத்தாலியிலுள்ள பைசா நகர பல்கலைக்
கழகத்தில் கலிலியோவுக்கு கணித
பேராசிரியராக வேலை கிடைத்தது.
ஆனால் தனது ஆராய்ச்சிகளின்
காரணமாக மாணவர்கள் மீது கவனம்
செலுத்தாமல் இருந்ததால், அவர
பல்கலைக்
கழகத்திலிருந்து நீக்கி விட்டனர்.
கண்ணாடி பிம்பம் -
மெழுகுவர்த்தி மூலம் ஒலியைப்
பிரதிபலிக்கும் தொழில்நுட்பம்,
பாக்கெட்டில் வைக்கும் சீப்பு, ரீஃபில்
பேனா போன்ற
கண்டுபிடிப்புகளுக்கு கலிலியோவின்
ஆய்வுகள் தான் அடிப்படை ஆதாரம்.
தனது சூரிய மண்டலம் பற்றிய
கருத்துகளால் வாட்டிக்கான்
சிட்டி கத்தோலிக்க நிர்வாகத்தால்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
கடுமையான மன
உளைச்சலுக்கு ஆளான கலிலியோ,
1633ம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்க
உத்தவிடப்பட்டார். 1638ம்
ஆண்டு அவருக்கு இரு கண்களும்
பாதிக்கப்பட்டு, பார்வை இழந்தார். 1642ம்
ஆண்டு தனது வீட்டில் உயிரிழந்தார்.
கலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த
பின், 1737ம் ஆண்டு அவரது உடலின்
எஞ்சிய பாகங்கள் அனைத்தும்,
கல்லறையிலிருந்து மீண்டும்
வெளியே எடுக்கப்பட்டு,
சாண்டா குரோஸ் தேவாலயத்தில்
அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில்
மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது ஆண்டன்
பிரான்செஸ்கோ என்பவர்
கலிலியோவின்
வலது கை நடுவிரலை எடுத்து
பத்திரப்படுத்தினார். அந்த விரல்
தற்போது பதப்படுத்தப்பட்டு,
இத்தாலியின் புளோரன்ஸ்
அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டுள்ளது.

பாராட்டுகளைக் குவிக்கும் புறம்போக்கு எனும் பொதுவுடைமை.. மகிழ்ச்சியில் ஜனநாதன்

எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் புறம்போக்கு எனும் பொதுவுடையமை அனைத்துத் தரப்பினரிடையேயும் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இயக்குநர் ஜனநாதனுக்கு மிகுந்த நிறைவைத் தந்துள்ளது இந்த வரவேற்பு.

ஒரு மரணதண்டனைக் கைதி, அவரைத் தூக்கில் தொங்கவிடும் கடமையை ஏற்றுக்கொண்ட காவல்அதிகாரி, தூக்குப்போடுகிற வேலையைச் செய்கிற ஊழியர் ஆகிய மூவருக்கிடையிலான நிகழ்வுகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அரசியல் படம் மக்களுக்கான படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாக பாராட்டுகள் குவிந்துள்ளன.

குறிப்பாக நக்ஸலைட்டுகள் எனும் மாவோயிஸ்டுகள் பற்றி தமிழில் அழுத்தமான படம் ஒன்று வந்ததே இல்லை. முன்பு ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன்தான் அப்படி வந்த படம். ஆனால் அது வணிக ரீதியான ஒருதலைப்பட்சமான பார்வையாகவே அமைந்துவிட்டது.

வெறும் சினிமாவுக்கான கதையாக இல்லாமல், படத்தின் காட்சிகளில் இன்றைய அரசியல் அவலங்களைச் சொன்னது, குரலற்றவர்களுக்கான குரலாய் சில காட்சிகள் வைத்திருப்பது.. என படம் தமிழ் சினிமாவின் புதிய முகமாகத் தெரிவதாக நேற்று படம் பார்த்த மூத்த அரசியல் தலைவவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

படத்தில் நடித்துள்ள ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் ஆகியோருக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

சிறுநீரகத்தில் வீக்கமா? இதோ சூப்பர் மருந்து !

பொதுவாக பழங்கள் என்பது நம் ஆரோக்கியத்தில் அதிக பங்கை வகிக்கின்றன.
பழங்களில் பல வகை இருந்தாலும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது பரங்கிக்காய் மட்டும் தான், இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல்கிறோம்.
மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக்காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும்.
பரங்கிக்காயில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் “ஈ”, வைட்டமின் “பி” மற்றும் இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், நியாஸின், ஃபோலிக் அமிலம், கொழுப்பற்ற அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன.
பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பரங்கிக்காயின் மகத்துவங்கள்
பித்தம் போகும், பசியை தூண்டும், சிறுநீர் பெருகும், இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது.
மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும்.
உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது.
பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும்.
பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும்.
பரங்கிக்காய் தொக்கு
முதலில் பரங்கிக்காயை தோல் சீவி, துருவிக் கொள்ளவும்.
வாணலியில் வெந்தயத்தை வறுத்து பொடித்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகை பொரிய விடவும்.
இதில் கொஞ்சம் பெருங்காயமும், துருவி வைத்த பரங்கிக்காயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு பொடிகளான மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.
சூடு ஆறியதும் வெந்தயப் பொடியைச் சேர்த்து கிளறி விட்டால் சுவையான பரங்கிக்காய் தொக்கு தயார்.
பயன்கள்
உடலில் கட்டி இருந்தால் அதன் மீது இந்த தொக்கை பூசுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்
இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வயிற்று கோளாறுகள் மற்றும் சிறுநீர் கோளாறு பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
பரங்கிக்காய் சூப்
பரங்கிக்காயை தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். இதோடு வெங்காயம் மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி மற்றும் பரங்கிக்காயை சேர்த்து போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆற வைத்து அரைத்து கொள்ள‌வும்.
பிறகு அரைத்ததை வேறு பாத்திரத்தில் போட்டு பால் ஊற்றி கொதிக்க வைத்து மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவினால் ஆரோக்கியமான “பரங்கிக்காய் சூப்” தயார்.
பயன்கள்
இதை வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் நீர்ப்பை கோளாறுகள் மற்றும் குடல் புழுக்கள் நீங்கும்.
வாத நோய், தீக்காயங்கள் சிறுநீரக வீக்கம் மற்றும் சிறுநீர் எரிச்சல் ஆகிய கோளாறுகளை இந்த சூப் குறைக்க வல்லது.

விடை கிடைக்காத இரகசியங்கள், அதிசயங்கள்

உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத இரகசியத்தை கொண்டுள்ளது.

பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் இரகசியத்திற்கு இன்னும் விடைகிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான "கிஸா" பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது. இந்த அளவுக்கு கற்களை தோண்டி எடுத்தால் பிரமாண்டமான பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல் சுற்றளவிற்கு எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை.

இதைப் போலவே 1947 -க்கும் 1956-க்கும்இடைபட்ட காலத்தில் பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியில் உள்ள கும்ராம் மலைக்குகையில் இருந்து 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 900 ஆவணங்கள் கிடைத்தன.
மெல்லிய செப்பு தகடுகளில் எழுதப்பட்ட இவை சாக்கடல் சுருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட இந்த சுருள்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகசியம். தங்கப்புதையலுக்கான தகவல்கள். புதையல் கரிசிம் மலையில் இருக்கிறது என்கிறது ஒரு சுருள். ஆனால் கரிசிம் மலை எது என்பதுதான் யாருக்கும் விடைதெரியாத வினா.

இலக்கியமும், சினிமா பாடல்களும், வரலாறும் அலசி காயப்போட்ட Ôபாபிலோனின் தொங்கும் தோட்டம்Õ எங்கே இருக்கிறது? என்பதே ஒரு ரகசியம்தான். கி.மு. 4 00- ல் பெரோசஸ் என்பவர்தான் முதன்முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றி எழுதினார். பாக்தாத்துக்கு பக்கத்தில் கி.மு.6 00-ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரை கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கையாக தெரிவிக்கிறார்கள்.

உலகில் உள்ள மலைகளிலேயே மிகவும் பணக்கார மலை எதுவென்றால் அது ஆல்ப்ஸ் மலைதான். காரணம் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின் போது எதிரிகளுக்கு பயந்து, தான் வைத்திருந்த பிளாட்டினம், தங்கம், வெள்ளி முதலியவற்றை அள்ளி ஆல்ப்ஸ் மலையில் ஒளித்து வைத்திருப்பதாக நம்பி மலையெங்கும் அலைந்து திரிந்தது அமெரிக்கப்படை. கடைசியாக ஒரு புதையலை கண்டுபிடித்தது. அதுவே பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானம் கொண்டது. அன்றிலிருந்து மக்கள் கூட்டம் எப்போதும் ஆல்ப்ஸ் மலையில் புதையல் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது.

இயேசு கிறிஸ்து இறுதியாக திராட்சை ரசம் குடித்த கோப்பை ஒன்று ஐஸ்லாந்தில் இருப்பதாக கூறுகிறார்கள். திஹோலி கிரெயில் என்று அழைக்கப்படும் இந்த கோப்பை பூமிக்கு அடியில் 15 அடி ஆழத்தில் ஒரு இரகசிய அறையில் இருப்பதாக கதைகள் உலவுகின்றன. கோப்பை இருக்கிறதா? இல்லையா? என்று மக்கள் கூட்டம் ஐஸ்லாந்து பகுதியில் பூமியை தோண்டிக்கொண்டே இருக்கிறது. இப்படி விடை கிடைக்காத இரகசியங்கள், அதிசயங்கள் பூமியில் நிறைய இருக்கின்றன.

சித்ராவை அறிமுகம்படுத்த இளையராஜா பட்டப்பாடு தெரியுமா..?

சிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.

அவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்த படங்கள்:-

1. சிந்து பைரவி

2. சாகர சங்கமம் ("சலங்கை ஒலி'')

3. ருத்ரவீணை.

இதில், "சிந்து பைரவி'' 11-11-1985-ல் வெளியானது. கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். சங்கீதத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் திருப்பம் அவன் வாழ்வையே புரட்டிப்போட்டு விடுகிறது. `இசை' பற்றி பாலபாடம் கூட தெரியாத அன்பே வடிவான மனைவி, இசை மூலம் ஈர்க்கப்பட்டு, இசைக் கலைஞராலும் ஈர்க்கப்படும் இளம் பெண் என இந்த மூவர் பின்னணியில் பாலசந்தர் காட்சிகளை உருவாக்கியிருந்தார். 25 வாரம் ஓடி `இசை'க்கு மரியாதை ஏற்படுத்திக் கொடுத்த படம்.

இதில் "ஜே.கே.பி'' என்ற இசைக் கலைஞராக சிவகுமார் வாழ்ந்து காட்டியிருந்தார். பாசத்தைக் கொட்டும் அப்பாவி மனைவியாக வந்து, கணவரின் இன்னொரு காதலில் வெந்து, அப்புறமாய் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும் அப்பாவிப் பெண் கேரக்டரில் சுலக்ஷனா வெளுத்துக் கட்டியிருந்தார்.

ஜே.கே.பி.யின் இசையை நேசித்து பிறகு அவரையும் நேசிக்கும் கேரக்டரில் சுஹாசினி நடிப்பில் சிகரம் தொட்டிருந்தார். இந்த நடிப்புக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவரைத் தேடிவந்தது என்பது படத்துக்கு கிடைத்த இன்னொரு சிறப்பு.

இந்தப் படத்தில்தான் பின்னணி பாடகியாக சித்ராவை இளையராஜா அறிமுகம் செய்தார்.

சித்ரா பாடிய "பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக்கூடம் தானறியேன்'' பாடல் அவருக்கு பெரும் புகழ் தேடிக்கொடுத்து, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அதோடு தமிழில் நிலையான பாடகியாகவும் நிலை நிறுத்தியது.

தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத், பரத நாட்டிய கலைஞரின் வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கிய படம் "சாகர சங்கமம்.'' "சங்கராபரணம்'' என்ற தெலுங்குப்படம் மூலம் மிகப்பிரபலமான இந்த இயக்குனரின் சாகர சங்கமமும் வெற்றிப்படமே. நடனக் கலைஞராக, நடிப்பின் சிகரத்தைத் தொட்டார், கமலஹாசன். அவருடன் இணைந்து நடித்தார், ஜெயப்பிரதா.

தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் இந்தப்படம் "சலங்கை ஒலி'' என்ற பெயரில் மொழி மாற்று செய்து வெளியிடப்பட்டது. `மவுனமான நேரம்', `ஓம் நமச்சிவாய', `ததித ததித தந்தானா' போன்றவை, இளையராஜா இசையில் மிகவும் பிரபலமான

பாடல்கள்."ருத்ரவீணை'' இளையராஜாவின் இசைக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மூன்றாவது படம். கே.பாலசந்தர் இயக்கினார்.

தேசிய விருது பெற்றது குறித்து இளையராஜா கூறியதாவது:-

"ஒரு படத்துக்கு எந்த மாதிரி தேவையோ அதை சரியாக கொடுப்பது ஒரு இசையமைப்பாளரின் கடமை. நானும் அதைத்தான் செய்தேன். சில பாடல்கள் ரெக்கார்டிங்கின்போதே அதன் தனித்தன்மை தெரிந்து விடும். "சிந்து பைரவி'' படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்'' பாடல் பதிவாகும்போது, என்னுடன் இருந்த டைரக்டர் கே.பாலசந்தரிடம், "இந்தப் பாடல் மட்டும் உரிய வரவேற்பைப் பெறாவிட்டால் நான் இசையமைப்பாளரே அல்ல'' என்றேன். விருது கொடுத்தது, இசை மீதான என் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.''

இவ்வாறு இளையராஜா கூறினார்.

36 வயதினிலே - 36 வயதை ஏதோ 86 வயதுபோல சித்தரிப்பதும் நல்லாவாயிருக்கு...?

கல்லூரி காலத்தில் மற்றவர்களுக்கு எல்லாம் முன்னுதாரண மாணவியாக இருந்தவள், திருமணத்துக்குப் பிறகு கணவன், குழந்தை, குடும்பத்துக்காக தன்னையே தொலைத்துவிட்டு, 36 வயதில் தன்னை மீட்டெடுக்கும் கதைதான் – 36 வயதினிலே.

ஜோதிகாவின் மறு பிரவேசத்துக்கு இதைவிட சிறந்த கதை அமையுமா என்பது சந்தேகம்தான்.

ஜோதிகாவுக்காகவே எழுதப்பட்டதோ என்கிற அளவுக்கு  அப்படியொரு பொருத்தமான கதை, அதைவிட…. வசந்தி கதாபாத்திரம்.

கணவன், மகளால் புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் வலியை, வேதனையை இதைவிட அழுத்தமாக..  ஆழமாக வெளிப்படுத்த முடியுமா?

வசந்தி தமிழ்செல்வன் என்கிற வருவாய்த்துறை ஊழியராக, நடுத்தர வர்க்கத்துப் பெண்ணின் வாழ்க்கையை வாழ்ந்து காட்டி இருக்கிறார் ஜோதிகா.

தன் மீது கட்டமைக்கப்பட்ட கதை என்ற கடமையை உணர்ந்து.. புரிந்து.. வெகு யதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

ஜனாதிபதியை சந்திக்கப்போவதற்கு முன் அவர் காட்டும் கெத்து… நச்.

சந்திப்பு சொதப்பியதும் அவமானத்தில் பதுங்குவதும்… ஒடுங்குவதும்…பின்னர் அதிலிருந்து மீண்டு சாதனை மனுஷியாக உருவெடுப்பதும்….

ஜோதிகா என்கிற அசாதாரண நடிகைக்கு படம் முழுக்க ஏகப்பட்ட தீனிகள்.

படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லை என்றாலும், வசனகர்த்தா விஜியை கதாநாயகன் என கௌரவிக்கலாம்.

மிக அண்மையில் இப்படியொரு கருத்துச்செறிவான வசனத்தை கேட்டதாக நினைவில்லை.

பெண்ணை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்களை வரவேற்பது என்பது தமிழ்சினிமாவை புனரமைக்கும் காரியங்களில் ஒன்று.

அந்த வகையில் நாம் அனைவரும் வரவேற்க வேண்டிய படம் – 36 வயதினிலே.

ஜோதிகா? வாடி ராசாத்தி….

 

’36 வயதினிலே- எங்க காலத்துல ஒண்ணு ரெண்டு பிஞ்சில பழுத்தது… இப்போ எல்லாம் இண்டர்நெட்டுலேயே பழுத்துருது..!

30 வயதைத் தாண்டி விட்டாலே நமக்கு வயதாகி விட்டதோ என்கிற எண்ணம் பெண்களின் மனதை ஆக்கிரமித்து விடும். அதிலும் தலையில் ஒரே ஒரு நரையைப் பார்த்து விட்டால் அவ்ளோதான். கணவர், குழந்தை, குடும்பம் என்று ஒரு வட்டத்துக்குள் தங்களை அடக்கிக் கொண்டு அதுவே வாழ்க்கை என்கிற எண்ணத்தோடு இருக்கும் பெண்களுக்கு அது மட்டும் தான் வாழ்க்கையா? அதையும் தாண்டி அவர்களுக்கும் சில கனவுகள் இருக்கும்.

அந்தக்கனவுகள் நிறைவேற ஒரு கணவனாக ஆண்கள் எந்த விதத்தில் மனைவிக்கு உதவுகிறார்கள். 36 வயதை நெருங்கும் எல்லாப் பெண்களுக்கும் இப்படி நிறைய கனவுகள் இருக்கும். அந்தக் கனவுகளை சிதைக்க விடாமல் அவர்களையும் அதை நிறைவேற்றிக்கொள்ள உதவி செய்யுங்கள் அல்லது வழி விடுங்கள் என்று பெண் இனத்துக்கு பெருமை சேர்க்கும் படமாகவும், பெண்கள் என்றாலே இந்தந்த வேலைகளுக்கு மட்டும் தான் லாயக்கு என்கிற அடிமை மனோபாவத்தில் இருக்கும் ஆண்களுக்கு பாடமாகவும் ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ’36 வயதினிலே.’

சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு ஜோதிகா ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் இப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஹவ் வோல்ட் ஆர் யூ’ படத்தின் ரீமேக். மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூவே தமிழ் வெர்ஷனையும் இயக்கியிருக்கிறார்.

சரி கதை என்ன..?

36 வயதாகும் வசந்தி தாலுகா ஆபீசில் கிளார்க்காக வேலை பார்க்கிறார். அவரது கணவர் ரகுமான் மத்திய அரசின் வானொலி நிலையத்தில் அறிவிப்பாளராக வேலை செய்கிறார். என்னதான் அரசாங்க வேலையாக இருந்தாலும் ரகுமானுக்கு வெளிநாட்டில் வேலைவாங்கி அங்கு தனது குடும்பத்துடன் செட்டிலாக வேண்டும் என்பது தான் லட்சியம். இவர்களுக்கு 8 வயதில் மகள் இருக்கிறாள். அவளுக்கு வெளிநாட்டில் படிக்க ஆசை. ரகுமானின் முயற்சியால் அயர்லாந்த்தில் நல்ல வேலை கிடைக்கிறது. கூடவே படிப்பதற்காக மகளையும் தன்னுடன் கூட்டிச் செல்கிறார்.

குடும்பத்தோடு அயர்லாந்து செல்ல திட்டமிடும்போது வசந்திக்கு மட்டும் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட ரகுமான், மகளுடன் வெளிநாடு சென்று விடுகிறார். மகளைப் பிரிந்து தனிமையில் இருக்கும் வசந்தி மன உளைச்சலுக்கு ஆளாகிறார். அவர் படிக்கிற காலத்தில் எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் முதல் ஆளாக வரும் வசந்தியா இது? என்று ஆச்சரியப்படுகிறார் அவரோடு கல்லூரியில் ஒன்றாகப் படித்த அபிராமி.

”என்னோட இன்ஸ்ப்ரேஷனே நீங்க தான். நான் அப்போ பார்த்த வசந்தியை எங்கே..?” அவங்களை நான் மறுபடியும் பார்க்கணும்” என்று உசுப்பேத்தி விடுகிறார்.

அதன் பிறகு அவருடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக ஆகிறது. எந்தக் கணவன் நீ எதுக்குமே லாயக்கு இல்லை என்று திட்டித் தீர்த்தானோ? அதே கணவன் வசந்தியை காரில் ஏறிப்போக பெருமையோடு கதவை திறந்து விடுகிறான். அந்தளவுக்கு வசந்தி தன் வாழ்க்கையில் என்ன பெரிதாக சாதித்தாள்? என்பதே கிளைமாக்ஸ்.

8 வருடங்களுக்குப் பிறகு வசந்தியாக வரும் ஜோதிகாவை சின்னச் சின்ன முக பாவனைகளில் கூட அதே துறுதுறு குறும்புத்தனங்களுடன் ரசிக்க முடிகிறது. கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறார். 36 வயதில் ஒரு அம்மாவின் மனநிலை எப்படி இருக்கும். ‘மொழி’ படத்தில் பேசாமல் உடல் மொழிகளாலே தன் கேரக்டரை பேச வைத்த ஜோதிகா இப்படத்தில் தைரியமாக மேடையில் எல்லாம் ஏறி ஆர்கானிக் உணவுகளைப் பற்றி விளக்கும் போது அப்படி ஒரு கம்பீரமான பார்வை.

இன்னும் சில வருடங்களுக்கு முன்பாகவே ஜோவுக்கு ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கலாமே சூர்யா?

ஜோதிகாவின் கணவராக மாஜி நடிகர் ரகுமான். மிகச்சிறந்த கதாபாத்திரம் அவருடையது. மனைவி என்பவள் எப்போதுமே தனக்கு கீழ் தான் இருக்க வேண்டும். தான் சொல்வதைக் கேட்பது, குழந்தை, குடும்பத்தை கவனித்துக் கொள்வது, மாமனார், மாமியாரை கவனிப்பது என மனைவிமார்களை ஒரு இயந்திர மனோபாவத்தோடு பார்க்கும் கணவர்மார்களுக்கு அவருடைய கேரக்டர் ஒரு சரியான பாடம்.

ஒரு சிறிய விபத்தால் சிக்கி அது போலீஸ், விசாரணை என்று போனால் தனது அயர்லாந்து வேலைக்கு விசா பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்து அந்த விபத்துக்கான பழியை மனைவியை ஏற்கச் சொல்வதும், பிறகு அதுவே அவருக்கும் பெரும் பிரச்சனையாகும் போது “நீ எதைத்தான் உருப்படியாச் செஞ்சிருக்கே..” ‘‘எதுக்குமே லாயக்கில்லே’’ என்று கிடைக்கிற கேப்புகளில் எல்லாம் மனைவிகளை மட்டம் தட்டும் ஆண் வர்க்கத்தின் நிஜ மனோபாவத்தை மிக அழகாக வெளிக்காட்டியிருக்கிறார்.

டெல்லி கணேஷ், நாசர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷிணி என படத்தில் வருகின்ற மற்ற கேரக்டர்கள் எல்லாமே எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

புரணி பேசுவதும், மற்ற பெண்கள் மத்தியில் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசுவதும் பெண்களுக்கே உரிய கலை. அதை தேவதர்ஷிணி – ஜோதிகா காம்பினேஷன் காட்சிகளில் அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ரோஸன் ஆண்ட்ரூஸ்.

சந்தோஷ் நாராயணின் இசையில் ‘வாடி ராசாத்தி’ பாடல் ஆடியோ ரிலீஸ் அன்றே ரசிகர்களின் பேவரைட்டாகி விட்டது. மீதமிருக்கிற பாடல்களான ஹேப்பி, போகிறேன் ஆகிய ட்யூன்களும் மனதை மயக்கும் மெல்லிசையாக ஒலிக்கிறது.

படத்தின் எக்கச்சக்க கைத்தட்டல்களுக்குரியவர் வசனகர்த்தா விஜி. எங்க காலத்துல ஒண்ணு ரெண்டு பிஞ்சில பழுத்தது… இப்போ எல்லாம் இண்டர்நெட்டுலேயே பழுத்துருது..! விமர்சனம் பண்ணிப் பண்ணியே கடந்த ரெண்டு தலைமுறை வீணாப்போச்சு… மாதிரியான நறுக் வசனங்கள் படத்துக்கு மிகப்பெரிய பலம். அவை தான் படத்தை தாங்கிப் பிடிக்கின்றன.

கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரோஸன் ஆண்ட்ரூஸ்.

பெண்களின் உலகை நன்கு அறிந்தவராய் அதிலும் திருமணத்துக்குப் பிறகு 36 வயதைத் தாண்டி விடும் பெண்களின் ஏக்கங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும். கட்டிய கணவருக்காகவும், குழந்தைகளுக்காகவும் அவர்கள் எப்படியெல்லாம் தங்கள் கனவுகளை மனசுக்குள்ளேயே பூட்டி வைத்து ஒரு சிறைப்பறவை போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை மிக வெளிப்படையாக காட்டியிருக்கிறார்.

என்றாலும் பெண்களின் சுதந்திரமான வாழ்க்கை வெறும் 36 வயதுவரை என்று வயதைச் சுறுக்கி அவர்களின் ஆசைகளுக்கு அணை போட்டிருப்பது மட்டும் தான் மனசுக்கு கொஞ்சம் நெருடல். மற்றபடி 6 லிருந்து 60 வரை எல்லா வயதினரும் கண்டு ரசிக்கக் கூடிய படம் தான் இந்த ’36 வயதினிலே.

Friday, May 15, 2015

மனைவியை தேர்ந்தெடுப்பது இ(எ)ப்படி !!?

கவியரசு கண்ணதாசன்
மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண் டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகி றது. அவசரத்தில் கல்யாணம் பண் ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள் ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மா வின் ராகம் அல்ல; சரீரத்தின் தாள மே! உடல் இச்சையால் உந்தித் தள்ள ப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவ றிவிடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிற து. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட் டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபல த்தை, அகங்காரத்தை, மோச த்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடு கிறது.

ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவ ளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதி லும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உரு வம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவ ர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசி யை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகா லட் சுமியை போலவும், மன்னிப் பதில் பூமாதேவியை போலவும், அன் போடு ஊட்டுவதில் அன்னை யை போலவும், மஞ்சத்தில் கணிகை யை போலவும் உள்ள பெண் ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கி றது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.
எந்தவொரு ஆடவனின் அழ கும் ஒரு பெண்ணின் பார் வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகா லட்சுமி போன்ற குலப் பெண் கள் அந்த அதிர்ச்சிக்கு பலி யாகி விடுவதில்லை. இடி தாங்கி, இடியை இழுத்து பூமி க்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்” என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டு ம். மாறாக, அவனது கோபத் தில் எண்ணெய் ஊற்றி குடும் பத்தை இரண்டாக்கி விடக் கூடாது.அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவ ள் தாய்போல் இருக்க வேண் டும்.

பள்ளியறையில் அவள் கணி கையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும்.
மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வே ண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப்போ வதில்லை; வாழ்க்கையில் தோல்விய டைவ தும் இல்லை என்கிறார் கண்ணதாச ன்.

நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனா கி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகா சமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாச ன், தவறான பெண்ணை ஒருவன் மனைவி யாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இரு ந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முக த்தில் ஒளி மங்கிவிடுகிறது என்றும்கூறுகிறா ர் கண்ணதாசன்..

ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திரும ணங்கள், 100க்கு 90 தோ ல்வியே அடைந்திருக்கின்றன.
‘தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது.
பூவே பூச்சூட வா !

தூக்கு மேடையின் கருப்புப் பக்கங்கள்! - ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’

இயற்கை, ஈ, பேராண்மை என தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது சமூகக் கருத்தை அழுத்தமாக சொல்லிவரும் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இந்த முறை ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’யோடு வந்திருக்கிறார்.

கதைக்களம்

பல தேச துரோக செயல்களைச் செய்த காம்ரேடான பாலுச்சாமிக்கு (ஆர்யா) தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. பாலுவை தூக்கில் போடும் பொறுப்பு சென்னை மத்திய சிறைச்சாலைக்கு புதிதாக பொறுப்பேற்கும் அதிகாரி மெக்காலே (ஷாம்) வசம் ஒப்படைக்கப்படுகிறது. அனுபவம் வாய்ந்த ஒருவரால்தான் பாலு தூக்கில் போடப்பட வேண்டும் என்பதால் ஏற்கெனவே அந்த வேலையைச் செய்த எமலிங்கத்திடம் (விஜய் சேதுபதி) அந்த வேலை கொடுக்கப்படுகிறது. அதேநேரம் பாலுவை தப்பிக்க வைக்க திட்டம் போடும் இன்னொரு காம்ரேடான குயிலி (கார்த்திகா) விஜய் சேதுபதியின் மனதை மாற்றி தன் டீமுடன் சேர்த்துக் கொள்கிறார். குயிலியும், எமலிங்கமும் பாலுவை தப்பிக்க வைக்கத் திட்டம்போட, மெக்காலே பாலுவை தூக்கில் போடுவதில் குறியாய் இருக்க, இறுதியில் பாலு தப்பித்தாரா இல்லையா என்பதே க்ளைமேக்ஸ்!

படம் பற்றிய அலசல்

உலகநாடுகளில் குவியும் எலக்ட்ரானிக் மற்றும் ஆயுதக் கழிவுகளை இந்தியாவில் கொண்டுவந்து கொட்டுகிறார்கள் என்ற கருத்தோடு ஆரம்பிக்கும் இப்படம் அதன்பிறகு வேறொரு பாதையில் பயணிக்கிறது. புறம்போக்கு என்பது தனிவுடமை அல்ல அது பொதுவுடமை என்பதை தலைப்பில் வைத்திருந்தாலும் உண்மையில் இப்படம் தூக்கு தண்டனைக் கைதியின் மனநிலையையும், அதைச் செய்பவரின் மனஉளைச்சலையும் மையப்படுத்தும் விதமாக இருக்கிறது.

இப்படத்திலும் நல்ல பல கருத்துகளை சினிமாத்தனத்துடன் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். காட்சிகளில் கொஞ்சம் அமெச்சூர்தனமும், லாஜிக் ஓட்டைகளும் இருந்தாலும் அவர் சொல்ல வந்த விஷயமும், அதற்கான மெனக்கெடல்களும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை. குறிப்பாக தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத ஒரு பக்கத்தை இப்படத்தின் மூலம் பகீரங்கப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். சமீபகால தமிழ்சினிமாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்திய க்ளைமேக்ஸ் இதுவாகத்தான் இருக்கும். அதற்கு ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. இப்படத்திற்கு மிகப்பெரிய பலம் பின்னி மில்லில் போடப்பட்ட ஜெயில் செட்! நிஜமாகவே ஒரு ஜெயிலுக்குள் சில நாட்கள் தங்கியிருந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கலை இயக்கத்திற்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே!

ஷாம், விஜய்சேதுபதியின் கேரக்டரை சரியாக வடிவமைத்த எஸ்.பி.ஜனநாதன் ஆர்யாவுக்கான பின்னணியை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். அதேபோல் ஆர்யாவை தப்பிக்க வைப்பதற்காக கார்த்திகா அன்ட் கோ எடுக்கும் முயற்சிகளும், அது சம்பந்தப்பட்ட காட்சிகளும் கொஞ்சம் அபத்தமாகவே இருக்கிறது. அதோடு தேவையில்லாத இரண்டு பாடல்கள் வேறு. இதையெல்லாம் கொஞ்சம் தவிர்த்திருந்தால் எஸ்.பி.ஜனநதான் சொல்ல வந்த கருத்து இன்னும் ஆழமாக ரசிகனின் நெஞ்சில் இறங்கியிருக்கும்.

நடிகர்களின் பங்களிப்பு

ஆர்யா, ஷாம், விஜய்சேதுபதி ஆகிய 3 ஹீரோக்களுக்கும் சமமான கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தாலும், மூன்று பேரில் அதிகம் ஸ்கோர் செய்திருப்பது விஜய்சேதுபதிதான். எமலிங்கமாக சாதாரணமாக அறிமுகமாகி, கடைசியில் கண்கலங்க வைத்திருக்கிறார். ‘தில்லாலங்கடி’ படத்திற்குப் பிறகு ஷாம் மீண்டும் போலீஸாக கலக்கியிருக்கும் படம் இது. நேர்மையான அதிகாரியாக நம் மனதில் எளிதாக இடம் பிடித்துவிடுகிறார். க்ளைமேக்ஸுக்காகவே ஆர்யாவின் நடிப்பு பெரிதாக பேசப்படும். இப்படத்தின் கதைக்களத்திற்கு நாயகியின் தேவையில்லாததால் கார்த்திகாவின் கேரக்டர் கொஞ்சம் அந்நியப்பட்டே நிற்கிறது. இருந்தாலும் தன் வேலையை சரியாகத்தான் செய்திருக்கிறார் கார்த்திகா.

பலம்

1. விஜய்சேதுபதி, ஷாம், ஆர்யா ஆகியோரின் பங்களிப்பு
2. இதுவரை தமிழில் சொல்லப்படாத கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருப்பது
3. அழுத்தமான க்ளைமேக்ஸ்.
4. பின்னணி இசை

பலவீனம்

1. அமெச்சூர்த்தனமான சில காட்சிகளும் லாஜிக் ஓட்டைகளும்
2. தேவையில்லாத பாடல்கள்
3. படத்தின் நீளம்.

மொத்தத்தில்...

ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தை அதன் க்ளைமேக்ஸ் தரும் ஆழமான உணர்வுகளுக்காக இருகரம் நீட்டி வரவேற்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : தூக்கு மேடையின் கருப்புப் பக்கங்கள்!

செயற்கையாக திணிக்கப்பட்ட ஒரு சில காட்சிகள் - 36 வயதினிலே’

கிட்டத்தட்ட 8 வருடங்கள் கழித்து, ஜோதிகாவின் அழகான எக்ஸ்பிரஷன்ஸை மீண்டும் வெண்திரையில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த 36 வயதினிலும் சாதித்திருக்கிறாரா ஜோதிகா?

கதைக்களம்

கல்லூரிப் பெண்ணாக சுதந்திரமாகவும், தைரியமாகவும் சுற்றித் திரிந்த வசந்தி (ஜோதிகா), திருமணத்திற்குப் பிறகு கணவன், மகள், மாமனார், மாமியார் ஆகியோருக்காக முழுநேர குடும்பத்தலைவியாக மாறிப்போகிறார். இப்படியே 13 வருட வாழ்க்கையை கழிக்கும் வசந்தியை ஒரு கட்டத்தில் கணவனும், மகளும் மட்டம் தட்டுவதுபோல் நடந்து கொள்கிறார்கள். இத்தனை வருடம் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லாமல் போனதே என நினைத்து சோகத்திலிருக்கும் நேரத்தில், தன் கல்லூரித் தோழி அபிராமியை சந்திக்கிறாள் வசந்தி. பழைய வசந்தியை அபிராமி மீண்டும் மீட்டெடுக்க, அதன் பிறகு வசந்தி ஒரு ஆச்சரிய முடிவெடுக்கிறாள். அது என்ன முடிவு? அதனால் நடந்தவை என்ன என்பதே இந்த ‘36 வயதினிலே’.

படம் பற்றிய அலசல்

தன் மனைவி என்பதையும் தாண்டி, ஜோதிகாவின் நடிப்பாற்றல் மீதிருக்கும் அதீத காதலே, ஒரு தயாரிப்பாளராக சூர்யா, இந்தக் கதையை ஜோதிகாவுக்காக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அதற்காகவே ஸபெஷல் சல்யூட் சூர்யா! டெக்னாலஜி எவ்வளவுதான் வளர்ந்தாலும் ஒரு பெண்ணின் கனவு, ஆசை என்பது திருமணத்திற்கு முந்தைய காலகட்டத்தோடு சரி, திருமணத்திற்குப் பிறகு அவள் தன் புகுந்த வீட்டிற்காக மட்டுமே வாழ்கிறாள் என்ற நிதர்சனத்தை ஆணித்தரமாக சுட்டிக்காட்டியிருக்கிறது இப்படம். அதோடு பெண் நினைத்தால் அவளால் எந்த வயதிலும் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் வசந்தி கேரக்டர் மூலம் நிரூபித்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு அழுத்தம் திருத்தமான சமூகக் கருத்தோடு, நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவோடு எவ்வளவு விஷம் நமக்கே தெரியாமல் நம் உடம்புக்குள் போகிறது என்பதையும் விவரித்து ‘பகீர்’ ஆக்கியிருக்கிறார் இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ். நாம் குடியிருக்கும் வீட்டின் மொட்டை மாடியிலேயே நமக்கான காய்கறிகளை நாமே பயிர்செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் விளக்குகிறது. கொஞ்சம் அசந்தாலும் டாகுமென்ட்ரிபோல் ஆகிவிடும் ஒரு கதையில் சின்ன சின்ன சுவாரஸ்யங்களைப் புகுத்தி ரசிக்க வைத்திருக்கிறது இந்த ‘36 வயதினிலே’.

படம் கொஞ்சம் மெதுவாக பயணிப்பது போன்ற உணர்வைத் தருவதையும், ஒரு சில காட்சிகள் கொஞ்சம் செயற்கையாக புகுத்தப்பட்டுள்ளதையும் தவிர்த்தால் பெரிய குறையொன்றுமில்லை இப்படத்தில். அளவான பாடல்கள், ரசனையான பின்னணி இசை, தரமான ஒளிப்பதிவு என டெக்னிக்கலாகவும் கவனம் பெறுகிறது இப்படம்.

நடிகர்களின் பங்களிப்பு

இப்படத்தின் வசந்தி கேரக்டரில் நடிக்க, தமிழ் சினிமாவில் ஜோதிகாவைத் தவிர்த்து வேறு யாரையுமே கற்பனை செய்து பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு கேரக்டரை தன் அற்புதமான நடிப்பின் மூலம் சாதாரணமாக செய்து அசத்தியிருக்கிறார் ஜோதிகா. ஆங்காங்கே கிடைத்த சின்ன சின்ன இடங்களில் தனது வழக்கமான ‘எக்ஸ்பிரஷன்ஸ்’ மூலம் மீண்டும் பழைய ஜோதிகாவை கண்முன் நிறுத்தியிருக்கிறார். அதிலும் இடைவேளைக்கு முன்பு தன் மகளிடம் ஜோதிகா பேசும் காட்சியில் புல்லரிக்க வைத்திருக்கிறார். வெல்கம் பேக் ஜோதிகா!

ஜோதிகாவைத் தவிர்த்து இப்படத்தில் அதிகம் கவர்வது அவரின் மகளாக நடித்திருக்கும் அம்ரிதா. ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்துபோனாலும் ‘நச்’ ரகம்! இவர்களைத் தவிர்த்து ஜோதிகாவின் கணவராக ரகுமான், மாமனாராக டெல்லி கணேஷ், தோழியாக அபிராமி, உடன் வேலை செய்யும் பெண்ணாக தேவதர்ஷினி என அந்தந்த கேரக்டரில் அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.

பலம்

1. முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கும் ஜோதிகா
2. இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கும் ஆழமான கருத்துக்கள்
3. ‘எமோஷனல்’ டச்சோடு பயணிக்கும் படத்தின் முதல் பாதி

பலவீனம்

1. கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதைப் போன்ற உணர்வைத் தருவது
2. செயற்கையாக திணிக்கப்பட்ட ஒரு சில காட்சிகள்

மொத்தத்தில்...

‘குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்’ என்ற அடைமொழியோடு பல தமிழ்ப் படங்கள் வெளிவந்தாலும், உண்மையில் இதுபோன்ற படங்களே அதற்கு முழுத்தகுதியானவை. ‘36 வயதினிலே’ படத்தை கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட!

ஒரு வரி பஞ்ச் : பெண்களுக்கான படம்... அனைவருக்குமான பாடம்!

உண்மையில் ஆண்கள் ரொம்ப ரொம்ப நல்லவர்கள்..!

ஏனென்றால்....

1 ) ஆயாவா இருந்தாலும்..ஆன்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர் வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோப படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு.. பொறுமையா சொல்லிடுவோம்..!

2 ) பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..!

3 ) மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..!

4 ) சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..!

5 ) லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..!

6 ) எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. " மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா.."
என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!

7 ) படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை..!

8 ) சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..!

9 ) காதலியை லூசு'னு.. விளையாட்டுக்கு கூட சொன்னது கிடையாது..!

10 ) தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ச் செய்து கொள்வோம்..!

11 ) முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திகாக நிப்பாட்டி விடுவோம்..!

12 ) பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை'னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..!

13 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..!

14 ) அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..!


இப்படி பசங்கள பத்தி சொல்லிட்டே இருக்கலாம்...