Tuesday, April 28, 2015

இப்போதைக்கு அந்த காரை அஜித் வெச்சுக்கல…???

பைக் ரேஸையும் அஜித்தையும் எப்படி பிரிக்க முடியாதோ அப்படித்தான் ஆரம்பர கார்களையும் அஜித்தையும் பிரிக்க முடியாது.

பைஸ் ரேஸில் கிங்கான அஜித் அவ்வப்போது கார் ரேஸ்களிலும் கலந்து கொண்டு வந்தார்.

இதனால் மார்க்கெட்டில் புதிதாக எந்த ஒரு நவீன பைக்குகள், கார்கள் வந்தாலும் அதை வாங்கி ஒட்டிப்பார்த்து விடும் அஜித் இப்போது புதிதாக பி.எம்.டபுள்யு ஹைபிரிட் ஐ8 ரக ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியானது. இதன் மதிப்பு சுமார் மூன்றரை கோடி என்றும் இதுதான் அஜித் பயன்படுத்தும் லேஸ்ட்டஸ்ட் கார் என்றும் செய்திகள் கசிந்தன.

ஆனால் அஜித் அவர் புதிதாக எந்த காரும் வாங்கவில்லை. அப்படி வாங்கியிருப்பதாக வந்த செய்திகள் எல்லாமே வெறும் வதந்தி தான் என்றும் அந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார் அவரது மேனேஜர்.

ஆக இப்போதைக்கு அஜித் பி.எம்.டபிள்யு காரை வெச்சுக்கல…??? அப்படித்தானே…?

No comments:

Post a Comment