இது எழுத்தாளர்கள் நடிகர் ஆகும் காலம், கும்கி படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பு கேட்டு போன ஜோமல்லூரி அந்தப் படத்தின் மூலம் நடிகரானார். இன்றைக்கு பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். விழா படத்தில் அறிமுகமான எழுத்தாளம் பூவராகவன் கொம்பன் படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக நடித்துள்ளார்.
தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். கிடா மீசைக்காவும், பெருத்த உருவத்துக்காவும் ஆடுகளத்தில் அறிமுகமான ஜெயபாலன் இப்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர். இப்படி பல எழுத்தாளர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கமலஹாசனின் உத்தம வில்லன் படத்திலும் சில எழுத்தாளர்கள் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள். இந்த நிலையில் எழுத்தாளரும், கவிஞருமான மனுஷ்யபுத்ரனும் நடிக்க வந்து விட்டார்.
கழுகு படத்தை இயக்கிய சத்யசிவாவின் சிவப்பு படத்தில் நீதிபதியாக நடித்துள்ளார். திரைப்படங்களுக்கு பாடல் எழுத தொடங்கியுள்ள மனுஷ்யபுத்ரன் இப்போது நடிகராகவும் ஆகிவிட்டார். இனி அவரையும் தொடர்ந்து படங்களில் பார்க்கலாம்.

No comments:
Post a Comment