லிங்குசாமி மற்றும் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் உத்தம வில்லன். இப்படம் கமல்ஹாசன் மற்றும் கிரேசி மோகனின் வசனத்தில் உருவாகியுள்ளது. கமல்ஹாசன் இப்படத்தை எழுதி இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். ஜிப்ரான் இசையில் பாடல்கள் வெளிவந்தது முதல் இன்று வரை பலதரப்பட்ட ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. டிரைலரைப் பார்த்தால் படம் நகைச்சுவைப் படமாக இருக்குமா என்று சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் கமலும் கிரேசி மோகனும் இணைந்தால் காமெடிக்குக் குறைவிருக்காது என நம்பி பார்க்கலாம்.
உத்தம வில்லன் ரிலீஸ் கார்னர்
படக்குழு
கமல்ஹாசன் உத்தமன் மற்றும் மனோரஞ்சன் வேடங்களில் நடித்துள்ளார், அவருடன் மறைந்த இயக்குனர் சிகரமான கே. பாலச்சந்தர் மார்கதரசி வேடத்தில் நடித்துள்ளனர். ஊர்வசி மனோரஞ்சனின் மனைவியாகவும், கே. விஸ்வநாத் மனோரஞ்சனின் மாமனாராகவும், ஆண்ட்ரியா மனோரஞ்சனின் ரகசிய காதலியாகவும், பூஜாகுமார் மனநோய் பாதிக்கப்பட்ட இளவரசியாகவும், நாசர் முத்தரசனாகவும், ஜெயராம் ஜேக்கப் ஜக்காரியாகவும், பார்வதி ஜேக்கப்பின் வளர்ப்பு மகளாகவும், எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியாராகவும் நடித்துள்ளனர்.
பிரச்சனை
உத்தம வில்லன் படத்தின் முதல் முன்னோட்ட நிகழ்படத்தில் கேரள மாநிலத்தின் பண்டைய கலையான தேயத்தின் ஒப்பனையில் கமல்ஹாசன் காட்சியளிப்பார். இப்படத்தில் ஒப்பனை மற்றும் காட்சியாக்கம் பிரஞ்சு நாட்டின் புகைப்படக் கலைஞரான எரிக் லாஃபர்கியு என்பவரால் முதலிலேயே காட்சியாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதன் பின்னர் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பட ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக நாளை (மே1) படம் வெளியாகவுள்ளது.
இருவேறுபட்ட கேரக்டர்களை எப்படி கதையினுள் நுழைக்கிறார்கள் என்பதும், கதையில் நகைச்சுவைக்கான பங்களிப்பு எப்படியிருக்கும் என்பதுமே ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை விற்று தீர்ந்த முன்பதிவு டிக்கெட்டுகள் தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

No comments:
Post a Comment