தாறுமாறான வசூலோடு ஓடிக்கொண்டிருக்கிறது ‘காஞ்சனா 2′.
லாரன்ஸ் இயக்கி நடித்த இப்படம் வெறும் 12 கோடியில் தயாராகி இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது.
இன்னும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, வெளிநாடுகள் என கணக்கிட்டால் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் படமாக ‘காஞ்சனா 2′ அமையும் என்பது மட்டும் உறுதி.
இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் லாரன்ஸுக்கு நடிகர், விஜய், இயக்குனர் ஷங்கர் என திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினியோ படம் ரிலீசாவதற்கு முன்பாகவே படத்தில் 7 வயது சிறுமி கெட்டப்பில் லாரன்ஸின் போட்டோவைப் பார்த்து வியந்து இந்தப்படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என்று வாழ்த்து தெரிவித்தார்.
அவர் சொன்னது நடந்து விட்டது என்பது தெரிந்ததும் ரஜினியை சில தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து பேசினார் லாரன்ஸ். அப்போது இருவரும் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று முடிவெடுத்ததாக தெரிகிறது.
ஏற்கனவே ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போகும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் அதில் விக்ரம் வில்லனாக நடிக்கப் போகிறார் என்றும் பட்ஜெட் 200 கோடியைத் தாண்டும் என்றும் சொல்லப்பட்டு வந்த நிலையில் லைக்கா நிறுவனம் அந்த செய்தியை மறுத்தது.
ஆக ஷங்கரும் இல்லை, லைக்காவும் இல்லை என்று உறுதியான நிலையில் இப்போது ரஜினியுடன் லாரன்ஸ் இணைகிறார் என்பதே கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு.
குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த படமாக அமைந்து விட்ட ‘காஞ்சனா 2′ ரஜினியை ரொம்பவே கவர்ந்து விட்டதாம். அதற்காகவே லாரன்ஸுக்கு ஸ்பெஷல் பாராட்டுகளை தெரிவித்த ரஜினி கூடவே நாம ரெண்டு பேரும் சேர்ந்து பண்ற மாதிரி ஒரு கதை இருந்தா சொல்லுங்க… பண்ணலாம் என்று கேட்டிருக்கிறார்.
இதுபோதாதா லாரன்ஸுக்கு…?
ரஜினிக்கேற்ற கதை ஒன்றை தயார் செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்கும் அவர் ‘காஞ்சனா 2′ வைப்போலவே எல்லா வயதினரையும் கவரும் விதமாக படத்தை தரப்போகிறார்.
‘காஞ்சனா 2′ படத்தை லாரன்ஸுடன் இணைந்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இந்த புதிய படத்தையும் தயாரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்னும் சில தினங்களில் இந்த புதிய படம் குறித்தான அறிவிப்பு வெளியாகலாம்.
வெயிட் அண்ட் ஸீ……….

No comments:
Post a Comment