Monday, April 27, 2015

லிங்குசாமிக்கே படத்தைக் காட்டமுடியாது - கமலின் அட்டகாசம்...!

ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லிங்குசாமி படிப்படியாய் வளர்ந்து இன்றைய உயரத்தைத் தொட்டிருக்கிறார்.

அவருடன் இயக்குநரான பலர் காணாமலே போய்விட்டனர்.

லிங்குசாமியோ தன் பாதையை மிகச்சரியாய் திட்டமிட்டு அடுத்த இலக்கை அடைந்தார்.
அதாவது தயாரிப்பாளராக.

தீபாவளி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார் லிங்குசாமி.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதுபோல் தன் தம்பி சபாஷ் சந்திரபோஸ் துணையுடன் வெற்றிகரமான படத் தயாரிப்பாளராகவும் விளங்குகிறார்.

அஞ்சான் படத்துக்கு முன்புவரை லிங்குசாமி தயாரித்த அத்தனை படங்களும் வெற்றிப் படங்கள்.

அஞ்சான் படம் தோல்வியடைந்ததினால் பல கோடிகள் வரை நஷ்டம் ஏற்பட்டது அவருக்கு.

பட்ட காலிலேயே படும் என்பதுபோல் உத்தமவில்லன் படத்திலும் அவருக்கு இழப்புதான்.

உத்தமவில்லன் படத்தை ஆரம்பிக்கும்போது கமல் சொன்ன பட்ஜெட் வேறு.

படம் முடியும்போது படத்தின் பட்ஜெட் இரண்டு மடங்காகிவிட்டிருந்தது.

ஆனாலும் உத்தமவில்லன் படத்தின் பணிகள், பணப்பிரச்சனையால் தடைபடக்கூடாது என்று எண்ணி பல இடங்களில் அநியாய வட்டிக்கும் கடன் வாங்கி உத்தமவில்லன் படத்தை தடை இல்லாமல் முடிக்க வைத்தார் லிங்குசாமி.

ஒருவழியாய் உத்தமவில்லன் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டநிலையில், விஸ்வரூபம் படம் தொடர்பாக கமலுக்கும் தியேட்டர் அதிபர்களுக்கும் இடையிலான ஒரு பிரச்சனையில் உத்தமவில்லன் படத்துக்கு பாதிப்பு வந்தது.

அதற்கும் லிங்குசாமிக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. ஆனாலும் கமல்ஹாசனால் தியேட்டர் அதிபர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தானே தருவதாகச் சொல்லி உத்தமவில்லன் படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனையை சமாளித்தார்.

கமலை வைத்து படம் எடுத்ததால் இத்தனை பிரச்சனைகளில் சிக்கினாலும், அதற்காக கவலைப்படாத லிங்குசாமியை ஒரேயொரு விஷயம் நிச்சயம் கவலையில் ஆழ்த்தி இருக்கும்.

என்ன விஷயம்?

உத்தமவில்லன் படம் ரெடியாகி மாதக்கணக்காகிறது.

கமலும், ரமேஷ் அரவிந்தும் பலதடவை உத்தமவில்லன் படத்தைப் பார்த்துவிட்டனர்.

ஆனால் அந்தப் படம் உருவாக பல கோடி பணத்தைப் போட்ட லிங்குசாமிக்கு இதுவரை உத்தமவில்லன் படத்தை கமல் காட்டவில்லை.

லிங்குசாமி தரப்பில் உத்தமவில்லன் படம் பார்க்க வேண்டும் என்று சொன்னபோது, ரிலீஸ் வரை யாரையும் படம் பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்று சொல்விட்டாராம் கமல்.

உத்தமவில்லன் படம் அண்மையில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

படத்தைப் பார்த்துவிட்டு தணிக்கைக்குழுவைச் சேர்ந்தவர்கள் லிங்குசாமிக்கு போன் செய்து படம் நன்றாக இருப்பதாக பாராட்டினார்களாம்.

எந்தவொரு தயாரிப்பாளருக்கும் இப்படி ஒரு கொடுமை நேரக் கூடாது

No comments:

Post a Comment