தொலைக்காட்சிப்பெட்டியைத் திறந்தால் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள்…
அவற்றில் பார்வையாளர்களை கவர்ந்தது ஒரு சில நிகழ்ச்சிகள்தான்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சி அவற்றில் ஒன்று.
சீசன் 1 தொடங்கி சீசன் 10 வரை சுமார் 500 எபிசோட்களாக… பல வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
என்னா விஷயம்?
திரைப்பட நடன இயக்குனர் கலா மாஸ்டர் இயக்கி வரும் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் 10வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இதுவரை 100க்கும் மேற்பட்ட செட்களில் படமாக்கப்பட்டு வந்த ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியை, ‘அமெஸ் ரூம் இல்யூஷன்’ (Ames Room Illusion), அடிப்படையில் அமைந்த மிகப் பெரிய அரங்கினுள் ‘மானாட மயிலாட’ குழுவினர் நடத்திக்காட்டி கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளார்கள்.
இந்த நடனப் போட்டியில் பங்கு கொண்ட 6 நடன ஜோடிகள் அந்த அரங்கினுள் நடனமாட இந்த சாதனையை புரிந்திருக்கிறார்கள்.
அதென்ன அமெஸ் ரூம் இல்யூஷன்?
‘அமெஸ் ரூம் இல்யூஷன்’ என்பது வெவ்வேறு அளவுகளில், கோணங்களில் ஒரு அறைக்குள் உருவாக்கப்படும் அரங்க அமைப்பு.
ஒவ்வொரு பக்கங்கள், முனைகள் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத அளவுகளில் அந்த அரங்கம் இருக்கும்.
‘மானாட மயிலாட’ சாதனைக்காக 4000 கன சதுர அடியில் ஒரே ஒரு கதவு மூலம் நுழைந்து, ஒரே ஒரு சாதாரண லென்ஸ் கொண்ட காமிரா மூலம் படம் பிடிக்கப்பட்டு, சுமார் 40 நிமிடம் நடனமாடி அந்த சாதனையை படமாக்கியிருக்கிறார்கள்.
எந்த ஒரு அளவும் மிகவும் துல்லியமாக, சிறிதும் மாறாமல் இருந்தால் மட்டுமே அது சாதனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். நடனமாடுபவர்கள் யாரும் சிறு தவறு கூட செய்யக் கூடாது, என்ற பல்வேறு சவால்களுடன் இந்த கின்னஸ் சாதனையை ‘மானாட மயிலாட 10’ குழுவினர் கலா மாஸ்டர் இயக்கத்தில் நிகழ்த்தி சாதனை புரிந்திருக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் 18ம் தேதி சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் இதற்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் லண்டனிலிருந்து வந்த கின்னஸ் குழுவினரின் முன்னிலையில் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இப்படி ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது உலகத்திலேயே இதுதான் முதல் முறை. (ஜோரா ஒரு தடவை கைதட்டுங்கப்பா)
வரும் மே 3ம் தேதி இரவு 7.30 மணிக்கு இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
கின்னஸ் சாதனை நிகழ்த்தியது பற்றி விவரித்த கலா மாஸ்டரிடம், அவருடைய ஃபேவரைட் கமெண்ட்டான ‘கிழிகிழின்னு கிழிச்சுட்டே’ டயலாக்கை சில சேனல்களில் கிண்டல் செய்யப்படுவது பற்றி கேட்டோம்.
“மத்தவங்க நம்மளை இமிடேட் பண்றாங்க என்றாலே நாம் வளர்ந்துட்டோம்னுதான் அர்த்தம். பிரபலமானவங்களைத்தான் இமிடேட் பண்ண முடியும். அந்த வகையில் என்னை இமிடேட் பண்றதை நானும் ரசிக்கிறேன். அதே சமயம் எல்லை மீறிவிடக்கூடாது.”
அட்டென்ஷன் விஜய் டிவி..!

No comments:
Post a Comment