இப்போது அறிமுக இயக்குனர் அக்ஷயப் பிரியன் இயக்கும் 'கட்டம் போட்ட சட்ட' என்ற படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார். 'நாடோடிகள், தரணி' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அஜய் கிருஷ்ணா இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அக்ஷயப் பிரியன் தனியார் தொலைக்காட்சியில் 'ஊர்வம்பு' என்ற நிகழ்ச்சியை பல வாரங்கள் இயக்கியவர்.
பெரிய மனிதர் ஒருவரின் வாழ்வியலைப் பற்றிய இந்தக் கதையைக் கேட்டதும் இயக்குனரை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் இளையராஜா. அதோடு உடனே ஐந்து பாடல்களுக்கும் இசையமைத்துக் கொடுத்துள்ளார். அதில் இளையராஜா இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார். பழனிபாரதி, நா.முத்துக்குமார், முத்துலிங்கம் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

No comments:
Post a Comment