Saturday, May 16, 2015

36 வயதினிலே - 36 வயதை ஏதோ 86 வயதுபோல சித்தரிப்பதும் நல்லாவாயிருக்கு...?

கல்லூரி காலத்தில் மற்றவர்களுக்கு எல்லாம் முன்னுதாரண மாணவியாக இருந்தவள், திருமணத்துக்குப் பிறகு கணவன், குழந்தை, குடும்பத்துக்காக தன்னையே தொலைத்துவிட்டு, 36 வயதில் தன்னை மீட்டெடுக்கும் கதைதான் – 36 வயதினிலே.

ஜோதிகாவின் மறு பிரவேசத்துக்கு இதைவிட சிறந்த கதை அமையுமா என்பது சந்தேகம்தான்.

ஜோதிகாவுக்காகவே எழுதப்பட்டதோ என்கிற அளவுக்கு  அப்படியொரு பொருத்தமான கதை, அதைவிட…. வசந்தி கதாபாத்திரம்.

கணவன், மகளால் புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் வலியை, வேதனையை இதைவிட அழுத்தமாக..  ஆழமாக வெளிப்படுத்த முடியுமா?

வசந்தி தமிழ்செல்வன் என்கிற வருவாய்த்துறை ஊழியராக, நடுத்தர வர்க்கத்துப் பெண்ணின் வாழ்க்கையை வாழ்ந்து காட்டி இருக்கிறார் ஜோதிகா.

தன் மீது கட்டமைக்கப்பட்ட கதை என்ற கடமையை உணர்ந்து.. புரிந்து.. வெகு யதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

ஜனாதிபதியை சந்திக்கப்போவதற்கு முன் அவர் காட்டும் கெத்து… நச்.

சந்திப்பு சொதப்பியதும் அவமானத்தில் பதுங்குவதும்… ஒடுங்குவதும்…பின்னர் அதிலிருந்து மீண்டு சாதனை மனுஷியாக உருவெடுப்பதும்….

ஜோதிகா என்கிற அசாதாரண நடிகைக்கு படம் முழுக்க ஏகப்பட்ட தீனிகள்.

படத்தில் ஹீரோ என்று யாரும் இல்லை என்றாலும், வசனகர்த்தா விஜியை கதாநாயகன் என கௌரவிக்கலாம்.

மிக அண்மையில் இப்படியொரு கருத்துச்செறிவான வசனத்தை கேட்டதாக நினைவில்லை.

பெண்ணை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்களை வரவேற்பது என்பது தமிழ்சினிமாவை புனரமைக்கும் காரியங்களில் ஒன்று.

அந்த வகையில் நாம் அனைவரும் வரவேற்க வேண்டிய படம் – 36 வயதினிலே.

ஜோதிகா? வாடி ராசாத்தி….

 

No comments:

Post a Comment