இது என்ன கூத்தா இருக்குது.. சிம்ரன் எவ்வளவு பெரிய சீனியர்.. இனியாவோ இப்ப வந்த ஆளு.. அவர்கூட சண்டை போடுற அளவுக்கு என்ன நடந்துச்சு என சிம்ரனின் ரசிகர்கள் கொந்தளிக்கவேண்டாம்.
சிம்ரனுடன் இனியா சண்டை போட்டுள்ளார்.. இதற்காக சண்டைப்பயிற்சியாளர் ஒருவரிடம் ட்ரெய்னிங்கும் எடுத்துள்ளார். இதெல்லாம் இருவரும் நடித்துவரும் 'கரையோரம்' படத்திற்காகத்தான்.
இதில் சிம்ரன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இனியா கேரக்டர் என்ன என்பது சஸ்பென்சாம்.. இதுபோதாதா சண்டை போடுவதற்கு..? இந்த சண்டைக்காட்சியை மட்டும் ஐந்து நாட்கள் படமாக்கினார்களாம்.
இனியா ஏற்கனவே டேக்வாண்டோ கலையில் கொஞ்சம் கொஞ்சம் கற்றுள்ளாராம்.. இவர்கள் இருவருமே அவர்களது சினிமா வாழ்க்கையில் நடிக்கும் முதல் சண்டைக்காட்சி இதுதான்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் தயாராகும் இந்தப்படத்திற்கு கன்னடத்தில் 'அலோன்' என்றும், தெலுங்கில் லீலா என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் தவிர நிகிஷா படேல், கன்னட இளம் நடிகர்களான வசிஷ்டா மற்றும் கணேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

No comments:
Post a Comment