எலியைப் பார்த்தாலே துரத்தி அடித்து அட்டகாசம் செய்யும் வடிவேலு இப்போ எலி படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தெனாலிராமன் படத்தைத் தொடர்ந்து யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவாகிவரும் படமே எலி.
அரசியல் கடையை மூடிவைத்துவிட்டு இந்தக் கடையைத் திறந்திருக்கிறேன். அரசியலுக்கு வந்தாலும் வரலாம் வராமலும் போகலாம் என்று எலி படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் எலியாகவே மாறி குறும்புடன் பேச ஆரம்பித்தார் வடிவேலு.
ஏன் இவ்வளவு இடைவெளி என்று கேட்டதற்கு, “ என்ன எல்லோரும் திட்டுகிறார்கள். எது இவ்வளவு இடைவெளி என்று அதற்காகவே முழுசா படத்தில் இறங்கிவிட்டேன். தெனாலி ராமன் படத்துக்கும் இந்தப்படத்துக்கும் இடையே உள்ள கேப் அடுத்தப்படத்திற்கான பொதுவான இடைவெளிதானே. அதற்கு முன்பு விட்ட கேப் பற்றி தெனாலிராமன் படம் வெளியிடும் போதே சொல்லிவிட்டேனே. இனி இறங்கி நடிக்க வேண்டியதுதான்.
பெரிய நடிகர்கள் படத்தில் எல்லாம் காமெடி டிராக்கில் இனி நடிக்கமாட்டீர்களா என்று கேட்டதற்கு, “ அப்படியெல்லாம் இல்லை. இடைவெளி விட்டு நடிக்கிறோம். உடனே காமெடி டிராக் மட்டும் நடித்தால் நல்லா இருக்காது என்பதற்காகவே முழு படமும் காமெடி ஹீரோவாக நடித்திருக்கிறேன். இனி காமெடி டிராக் நடிக்க ரெடி. ரஜினியின் அடுத்தப் படத்தில் காமெடியனாக நடிக்க கூப்பிட்டாலும் நடிக்க தயார்.
“பழசுதாங்க எப்போதுமே பெஸ்ட். பழச மறக்க கூடாது. ஜெஸ்ட் 60களில் நடக்குற கதை தான் எலி. மேரே சப்னோ கி ராணி' என்ற ஹிந்தி பாடலுக்கும் வாயசைத்து டூயட் பாடியிருக்கிறேன். சரி எலி இந்தாயிருக்கு. அப்போ பூனையை எங்கனு தான கேக்குறீங்க, கஜினிபட வில்லன் பிரதாப் தான்.
சதாவுக்கும் எனக்கு டூயட்லாம் அதிகமா கிடையாது. நம்ம எப்போதுமே ஒன்சைடு காதல் தான். பாடல்ல கூட ரேடியோ பாடும். ரேடியோக்குள்ள போய் மலைல டூயட் பாடிட்டு மறுபடியும் ரேடியோ வழியா வெளிய வந்துருவோம். இவ்வளவுதாங்க டூயட்டுடுடு... லோக்கேஷனுக்காக வெளிநாட்டுக்கு கூட போகல. மூணாறுலயே முடிச்சாச்சு.
எலி புலியோட போட்டிப்போடுமா என்றதற்கு, “ எலி, புலி அடுத்து கரப்பான்பூச்சினு கூட படம் எடுக்கலாம். படத்தோட தலைப்புதாங்க இப்படி. யாரோடையும் போட்டிலாம் கிடையாது. நான் சிக்ஸ் பேக் ஹீரோ கிடையாது. ஒன்லி சிங்கிள் பேக் தான்.
மொத்தம் நாளு பாட்டுல ஒரு பாடல் நானே பாடியிருக்கிறேன். அதுவும் ஜெயில்ல வச்சு பாடுகிற மாதிரி படமாக்கியிருக்கிறேன். அதுக்குனு மெசேஜ்லாம் சொல்ல வரவில்லை. முழுக்க முழுக்க காமெடிக்காக மட்டுமே இந்தப் படம். கடைசியா ஒரு மெசேஜ் மட்டும் சொல்லிருக்கேன். படம் வந்ததும் பாருங்கள் என்று ட்விஸ்ட் வைத்தார் வடிவேலு.
பஞ்ச் டைலாக்ஸ் இருக்குதுனு சொன்னீங்க. அது அரசியல் சார்ந்து இருக்குமா என்றதற்கு, “ விஷயம் இருக்கு. காமெடியா சொல்லிருப்பேன். படத்தில் பார்த்துவிட்டு ரசிகர்கள் சிரிப்பதற்கு எலி படம் ஃபுல் கேரண்டி என்று கூறினார் வடிவேலு.
நல்லவர்கள் கூட்டத்துல கெட்டவன் நுழைஞ்சா அவனை கருப்பு ஆடுனு சொல்லுவோம். கெட்டவர்கள் கூட்டத்தில் நல்லவன் போனா அவன் தான் எலி. அந்த எலியோட அட்டகாசமே படத்தின் கதை என்றார் இயக்குநர் யுவராஜ். அதுமட்டுமில்லாமல் டாக்கிங் டாம் போலவே டாக்கிங் எலி என்று அப் ஒன்றையும் லாஞ்ச் செய்திருக்கிறார்கள் எலி டீம்.

No comments:
Post a Comment