திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு 45 கோடி ரூபாய் செலவில் கமல்ஹாசன் தயாரித்துக் கொடுத்த படம் ‘உத்தம வில்லன்’.
இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையைத் தவிர தமிழ்நாட்டில் எந்த ஏரியாவும் எம்.ஜி.அடிப்படையில் போணியாகவில்லை.
லிங்குசாமி தரப்பின் முந்தைய கடன்கள், ‘உத்தம வில்லன்’ படத்திற்கு வாங்கப்பட்ட நெகட்டிவ் பைனான்ஸ் என சுமார் 70 கோடி ரூபாய் கடனை கொடுத்தால் மட்டுமே படம் வெளிவரும் என்ற நிலை இருந்தது.
கமல்ஹாசனுக்குப் பேசிய 45 கோடியில் 41 கோடி மட்டுமே லிங்குசாமி கொடுத்திருந்தார். இருப்பினும் மீண்டும் 30 கோடி பட்ஜெட்டில் திருப்பதி பிரதர்ஸ்க்கு ஒரு படம் பண்ணித்தர கமல் தரப்பிலிருந்து உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.
சூர்யா, கார்த்திக் நடிக்கும் படங்களை முதல் பிரதி அடிப்படையில் ஞானவேல்ராஜா வாங்கிக் கொள்வதாகக் கூறி 15 கோடி அட்வான்ஸ், கமல்ஹாசன் படத்திற்கு முதல் பிரதி அடிப்படையில் 10 கோடி அட்வான்ஸ், ‘ரஜினி முருகன்’ படத்திற்காக 10 கோடி அட்வான்ஸ் ‘உத்தம வில்லன்’ படத்தின் வினியோக உரிமைக்காக 9 கோடி என 44 கோடி ரூபாய் கடனுக்கு ஞானவேல்ராஜா பொறுப்பேற்றுக் கொண்ட பின்னும் ‘உத்தம வில்லன்’ வெளியாவதில் இருந்த சிக்கல் முடிவுக்கு வந்தது.
பைனான்சியர் ஜஸ்வந்த் பண்டாரிக்குத் தரவேண்டிய 22 கோடியில் 6.5 கோடி மட்டும் ரொக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பாக்கியுள்ள கடன்களை பட ரிலீசுக்குப் பின் தருவதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு விஷயங்களும் இடைவிடாமல் நடந்த பேச்சு வார்த்தையின் பலனாக நடந்து முடிந்தது. அதற்குப் பிறகு ஒன்றரை நாள் கழித்தே ‘உத்தம வில்லன்’ படம் திட்டமிட்டபடி மே 1ம் தேதி வெளியாகாமல், மே 2ம் தேதி மதியக் காட்சிக்கு வெளியானது.

No comments:
Post a Comment