தமிழ் சினிமாவில் பல காமெடி ஹீரோக்கள் வந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகர் கவுண்டமணி. இன்றைக்கும் தமிழ் சினிமாவில் கவுண்டமணியின் காமெடியை பின்பற்றாதவா்களே இல்லை என்று சொல்லாம்.இவா் வயதானதால் இளைஞர்களுக்கு வழிவிட்டு கொஞ்சம் காலமாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். இருந்தாலும் அவரை தேடிச்சென்று பல இயக்குநா்கள் மீண்டும் நீங்கள் சினிமாவில் நடிக்க வாருங்கள் என்று அழைத்தனர். ஆனால் கவுண்டமணி முடியாது என்று கூறி தட்டி கழித்து வந்தார்.
அந்த சமயத்தில்தான் 49 ஓ கதையை அவரிடம் சொன்னார் இயக்குநர் பி.ஆரோக்கியதாஸ். கவுண்டமணிக்கு கதை மிகவும் பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பும் நடந்தது. திட்டமிட்டபடி நடக்காமல் கொஞ்சம் காலதாமதமாக படம் முடிவடைந்தது என்று சொல்கிறார்கள். படப்பிடிப்பு மற்றும் அதற்கு பிறகான வேலைகளும் முடிவடைந்து படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம்.
ஆனாலும் அந்தப்படத்தை வெளியிடாமல் அப்படியே வைத்திருக்கிறாராம் தயாரிப்பாளர். என்ன காரணம்? வானவராயன் வல்லவராயன் படத்தை வாங்கி வெளியிட்டாராம் இந்தப்படத் தயாரிப்பாளர். அதில் நஷ்டம் ஏற்பட்டு கொஞ்சம் கடனாகிவிட்டதென்றும் அதனால் அதைச் சரிசெய்துவிட்டு இந்தப்படத்தை வெளியிடுகிறேன் என்று சொன்னாராம்.
ஆனால் எப்போது படத்தை வெளியிடப்போகிறோம் என்பது பற்றி எதுவும் சொல்லாமல் இழுத்துக்கொண்டேயிருப்பதால் தயாரிப்பாளர் மீது கவுண்டமணி மிகவும் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதோடு ஏன்யா 49 ஓ ன்னு ஒரு நல்ல படத்தை எடுத்து வச்சுகிட்டு ? அதை ரிலீஸ் பண்ணாம வானவராயன், வவுத்துவலி ராயன்னு எறங்கி காச தொலைக்கிறீங்க என்று தாயாரிப்பாளருக்கு அட்வைஸும் செய்துள்ளாராம் கவுண்டர்..
No comments:
Post a Comment