Friday, May 15, 2015

வியட்நாம் வீடு சுந்தரம் நடிச்சா பேட்டை ரவுடியாதான் நடிப்பாராம்...?

சிவாஜி நடித்த வியட்நாம் வீடு படத்தை இயக்கியவர் சுந்தரம். அதையடுத்து அவர் பெயருக்கு முன்னால் வியட்நாம் வீடு என்பது ஒட்டிக்கொண்டது. பின்னர் கெளரவம் உள்பட சில படங்களை இயக்கிய அவர், பல படங்களுக்கு ஸ்கிரிப்டும் எழுதியுள்ளார். சமீபகாலமாக டிவி சீரியல்களிலும் பிசியாக நடித்து வரும் அவர், இகோர் இயக்கியுள்ள வந்தாமலை என்ற படத்தில் பேட்டை ரவுடியாக ஒரு கேரக்டரில் நடித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,

இந்த படத்தில் எனக்கு நடிக்க சான்ஸ் கொடுத்ததே பெரிய விசயம். அதிலும், என்னை ஒரு பேட்டையின் ரவுடியாக வித்தியாசமான கெட்டப்பில் காண்பித்திருக்கிறார் இயக்குனர் இகோர். அதற்கே நான் அவருக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும்.

நான் சிவாஜியை வைத்தே படமெடுத்தவன். ஆனால் இன்றைக்கு எனது முகவரியை தொலைத்து விட்டு நிற்கிறேன். மேலும், சிவாஜி நடித்த காலத்தில் யாரேனும் புதுமுகங்கள் நடிக்க வந்திருந்தால், அவர்களை அழைத்து நடிக்க வந்திருக்கியா? என்றொரு கேள்வி கேட்பார்.

அதைக்கேட்டாலே அந்த புதுமுகம் அப்புறம் நடிக்கவே மாட்டான். அப்படியிருக்கும் அவரது கேள்வி. ஆனால், எம்.ஆர்.ராதா வேறு மாதிரியாக சொல்வார். அதாவது, ஒரு நடிகனை இப்படி நடி என்று சொல்வதைவிட இந்த காட்சியை உனது ஸ்டைலில் நடித்து காட்டு என்று வேலை வாங்குவதுதான் சிறந்தது என்பார்.

அதேபோல் இந்த படத்தில் அவரவர் திறமைக்கேற்ப வித்தியாசமான கோணத்தில் வேலை வாங்கியிருக்கிறார் இகோர். குறிப்பாக, அந்த காலத்தில் ஸ்ரீதர் இயக்கிய காதலிக்க நேரமில்லை படம் எவ்வளவு சிறப்பாக இருந்ததோ, அதற்கு இணையாக இந்த வந்தாமலை படத்தை காதல், காமெடி, செண்டிமென்ட், கருத்து என அனைத்தையும் கலந்து ஒரு ஜாலியான படமாக கொடுத்திருக்கிறார் இகோர். இப்படியொரு படத்தில் நானும் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்றார் வியட்நாம் வீடு சுந்தரம்.

No comments:

Post a Comment