’எலி’ படக்குழு ஆண்ட்ராய்டு போன்களுக்கான டாக்கிங் எலி’ என்ற புதிய அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளனர். யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு, சதா, பிரதீப் ராவத் நடித்து வரும் படம் ‘எலி’. படத்திற்கு இசை வித்யாசாகர்.சிட்டி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படம் 1960 முதல் 70களில் நடக்கும் படமாக உருவாகி வருகிறது. படத்தோடு இணைந்து சமூக வலைதளங்களான முகநூல், ட்விட்டரில் எலி படத்திற்கான சிறப்பான பக்கங்கள், எலி சமூக வலைகள் குறித்து சிறப்பு வீடியோ என படக்குழு படு அப்டேட்டாக உள்ளனர்.
இப்போது அடுத்த கட்டமாக 'டாக்கிங் எலி' என்ற புது ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனையும் உருவாக்கி உள்ளனர். இதில் வடிவேலு ‘எங்க என்ன தொடு , தொட்டுத்தான் பாரேன்’ என்றவுடன் அவரது உடலில் எங்கு தொட்டாலும் 'ஏய் கையத் தோடாத, என் லெக்கு, அப்படியே மஸாஜ் பண்ண மாதிரி இருக்கு 'என ரியாக்ஷனுடன், சிணுங்குகிறார்.
இது தவிர்த்து செல்ஃபி பிரியர்களுக்காக கூடவே அடுத்த ஆப்ஷன் செல்ஃபி எடுத்துக் கொண்டு நம் புகைப்படத்திற்கு வடிவேலுவின் மீசை, முடி, கண்ணாடி என சேர்த்து சமூக வலைகளிலும் பகிர்ந்துகொள்ளலாம். ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட அனைத்திலும் தற்போது செம பிரபலமாக சுற்றி வருகிறார் இந்த ’டாக்கிங் எலி’
No comments:
Post a Comment