Thursday, May 14, 2015

டண்டணக்காவை பார்த்த டி.ராஜேந்தர்...ரொம்ப பிடிச்சிபோச்சாம்...என்னெய்யா நடக்குது..?

 ரோமியோ ஜுலியட் படத்தில் டி.ராஜேந்தரை இமிடேட் செய்து வைத்த டண்டணக்கா பாடல் படத்தை பிரபலப்படுத்தியது. அதே பாடல்தான் இப்போது படம் வெளியாவதற்கும் தடையாக உள்ளது.

டண்டணக்காவை டி.ஆரை. பெருமைப்படுத்தும் விதமாக படத்தில் வைத்ததாக படம் சம்பந்தப்பட்டவர்கள் கூறினாலும், அந்தப் பாடலை வைத்து பப்ளிக் செய்த காமெடி டி.ஆரை ரொம்பவே வேதனைப்படுத்தியது. குறிப்பிட்ட பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும், நஷ்டஈடாக ஒரு கோடி தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார் டி.ஆர். படக்குழு பலவழிகளில் காம்ப்ரமைஸுக்கு முயன்றும் எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் பெரும் முயற்சிக்குப் பிறகு ரோமியோ ஜுலியட் படத்தை டிஆர் பார்த்துள்ளார். படம் அவருக்குப் பிடித்திருப்பதாகவும் தகவல் உள்ளது. ஆனால், வழக்கை அவர் திரும்பப் பெறுவாரா? டண்டணக்கா பாடலை அனுமதிப்பாரா?

விடை தெரியாமல் தவிக்கிறது ரோமியோ ஜுலியட் யூனிட்.

No comments:

Post a Comment