Tuesday, May 5, 2015

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் பிபியை எகிற வைத்த பட விளம்பரம்…!

வெற்றி பெற்ற முன்னணி இயக்குநர்களின் உதவியாளர் என்று சொல்லிக் கொண்டு பட வாய்ப்பு கேட்டால் சினிமா கம்பெனிகளின் கதவு விரியத்திறக்கும்.

தயாரிப்பாளர்களின் இந்த பலவீனத்தைப் புரிந்து கொண்டு முன்னே பின்னே ஷூட்டிங் கூட பார்க்காதவர்கள் எல்லாம்…. ‘நான் ஷங்கரின் அஸிஸ்டெண்ட்….’ ‘மணிரத்னத்தின் அஸோஸியேட்’ என்றெல்லாம் பொய் சொல்லி படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெறுவது படத்துறையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்படி பொய் சொன்னதும்…. அதை நம்பி தயாரிப்பாளர்கள் படம் கொடுத்ததும்… சம்மந்தப்பட்ட இயக்குநருக்கு தெரியாதவரை பிரச்சனை இல்லை.

தெரிந்தால்….?

பிரச்சனைதான்…. பஞ்சாயத்துதான்…!

இப்படி ஒரு பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறது – இருவர் ஒன்றானால் என்ற படம்.

இப்படி ஒரு படம் தயாரானது நேற்று காலை வரை எவருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நேற்றைய நாளிதழில் வந்த இந்தப் படத்தின் விளம்பரம்தான்… வில்லங்கத்தை கூட்டி வந்துவிட்டது.

FROM ASSOCIATES OF A R MURUGADOSS – என்று இருவர் ஒன்றானால் படத்தின் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த வாசகம்தான் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் பிபியை எகிற வைத்து அவரை அநியாயத்துக்கு டென்ஷனாக்கிவிட்டது.

அந்தப் படத்தை இயக்குபவர் அவரிடம் எந்தக்காலத்திலும் உதவியாளராக வேலை பார்த்ததில்லையாம்.

தன்னிடம் வேலை பார்க்காத ஒருவர் தன் பெயரை பயன்படுத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாத ஏ.ஆர்.முருகதாஸ் இது பற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

சம்மந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளரை அழைத்து ஏ.ஆர்.முருகதாஸ் பெயரை மிஸ்யூஸ் பண்ணக்கூடாது என்று எச்சரித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.

No comments:

Post a Comment