ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்ன இயேசுவை வணங்குபவர் இல்லை – அஜித்.
ஆனால் தன்னை வஞ்சித்தவர்களுக்கு எல்லாம் வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இது அஜித்துக்கு ஏற்பட்ட பக்குவமா அல்லது இன்னா செய்தாரை அவர் நாண நன்னயம் செய்கிறாரா என்று தெரியவில்லை.
சில வருடங்களுக்கு முன் அஜித்திடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை, அவரது கழுத்தில் கத்தி வைக்காத குறையாக டார்ச்சர் செய்து திரும்ப வாங்கியவர் ஏ.எம்.ரத்னம்.
அதே ரத்னத்துக்கு… அவர் சிரமதிசையில் இருக்கிறார் என்பதை அறிந்து, தானே அழைத்து ஆரம்பம் என்ற படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார். அதோடு, என்னை அறிந்தால் படத்தையும் ஏ.எம்.ரத்னத்தையே தயாரிக்க வைத்தார். இதோ இப்போது மூன்றாவது படத்துக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார் அஜித்.
தன்னை அவமானப்படுத்தியவருக்கு ஜாக்பாட் பரிசு போல் கால்ஷீட்டை அள்ளிக் கொடுக்கிறாரே என்று திரையுலகில் அஜித்தை எண்ணி வியக்காத ஆளே இல்லை,
அடுத்த ஆச்சர்யமாக இன்னொரு காரியத்தையும் செய்திருக்கிறார் அஜித்.
சில வருடங்களுக்கு முன் அஜித்தின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி.
காவல்துறையில் அதிகாரியாக இருந்த எஸ்.எஸ்.சக்கரவர்த்தி, ஏதோவொரு பிரச்சனையில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு படத்தயாரிப்பாளர் ஆனார்.
அஜித்தை வைத்து ராசி என்ற படத்தைத் தயாரித்த எஸ்.எஸ்.சக்கரவர்த்தி, நாளடைவில் அஜித்தின் நண்பராக மட்டுமின்றி நம்பிக்கைக்குரியவராக மாறினார்.
அஜித்துக்கு ஆல் இன் ஆல் எஸ்.எஸ்.சக்கரவர்த்திதான் என்ற நிலை வெகு விரைவிலேயே உருவானது.
அஜித் – எஸ்.எஸ்.சக்கரவர்த்தி நட்பின் காரணமாக ராசி படத்தை அடுத்து வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சனேயா, ஜி, வரலாறு என ஏறக்குறைய எட்டு படங்களைத் தயாரித்தார்.
வரலாறு படத்தின் தயாரிப்பில் இருந்தபோது, அஜித் – எஸ்.எஸ்.சக்கரவர்த்தி நட்பில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
அஜித்தைப் பிரிந்த பிறகு எஸ்.எஸ்.சக்கரவர்த்திக்கு இறங்குமுகம் தொடங்கியது.
சிம்புவை வைத்து தயாரித்த காளை செமத்தியாய் உதையைக் கொடுத்தது.
அதன் பிறகு மீண்டும் சிம்பு உடன் இணைந்து வாலு, வேட்டை மன்னன் என இரண்டு படங்களைத் தயாரித்தார்.
இவற்றில் வேட்டை மன்னன் படத்தை ட்ராப் பண்ணிவிட்டார்.
வாலு படம் வருடக்கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கிறது.
மொத்தத்தில் சிம்புவை வைத்து படம் எடுத்ததால் சுமார் 50 கோடிக்கு கடனாளியாகி நிற்கிறார் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி.
தன் பழைய நண்பரின் இன்றைய நிலையை அறிந்த அஜித் துடித்துப்போய்விட்டாராம்.
பிறகு அவரை அழைத்துப் பேசி ஆறுதல் சொல்லி அனுப்பியது மட்டுமல்ல…. அடுத்து அஜித் செய்த விஷயம்தான் அற்புதம்.
எஸ்.எஸ்.சக்கரவர்த்திக்கு தன் அடுத்தப் படத்தை பண்ண தீர்மானித்துள்ளாராம்.
தற்போது யட்சன் படத்தை இயக்கி வரும் விஷ்ணுவர்தன்தான் இயக்குநராம்.
உறுதிப்படுத்தப்படாத இந்த செய்தி உண்மையாக இருக்கும்பட்சம்… ஹாட்ஸ் ஆப் அஜித்!

No comments:
Post a Comment