Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, August 8, 2018

ஜெயலலிதா இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்: சசிகலா உறவினர் கிருஷ்ணப்ரியா பரபரப்பு டுவீட்

ஜெயலலிதா இருந்திருந்தால் கருணாநிதிக்கு மெரினாவில் நிச்சயம் இடம் ஒதுக்கியிருப்பார் என்று சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.

கருணாநிதி உடல்நல குறைபாடுகளால் இன்று மறைந்தார். அவரது உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் அண்ணாவின் நினைவிடத்துக்கு பக்கத்தில் இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுகவினர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தது.

இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மாறாக சட்ட ரீதியான காரணங்களை தெரிவித்தது. இதையடுத்து திமுக நீதிமன்றத்தை நாடியுள்ளது. தமிழக அரசின் செயலை அனைத்து கட்சியினரும் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா டுவிட்டரில் இரு பதிவுகளை இட்டுள்ளார்.

அதில் அம்மா உயிருடன் இருந்திருந்தால், கண்டிப்பாக , திரு கலைஞர் அவர்களுக்கு அறிஞர் அண்ணாவிற்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம்.

அம்மாவை அரசியல்வாதியாக மட்டுமே, தள்ளி நின்று பார்த்தோர்க்கு இது தெரியவும் வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Sunday, May 17, 2015

சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆகலையா? கவலைய விடுங்க !

நாம் உட்கொள்ளும் உணவு எப்போதும் நமக்கு ஜீரணமாகும் என கூற முடியாது.சில நேரங்களில் அது நமக்கு வயிற்றில் தொல்லைகளையும் ஏற்படுத்தலாம், அதுபோன்ற இன்னல்களை எளிதாக குணப்படுத்தகூடியது தான் குப்பைமேனி.

இதை யாரும் வளர்ப்பதில்லை என்றாலும் காடுமேட்டில் தானே வளரும் தன்மை உடையது.


சிறு செடியாக வளரும், இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். 


இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும்.


வசீகரப்படுத்தும் இயல்புடைய இந்த குப்பைமேனி ஒரு மாந்திரீக மூலிகையாகும்.



குப்பைமேனியின் மகத்துவங்கள்
 
இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலைவலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.

வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை போக்கவல்லது. இதன் வேரை கிராம் 200 மி.லி நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.
குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.


குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.


குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து, அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.


குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும்.
குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் அழகு கொடுக்கும்.



 
குப்பைமேனி துவையல்
 
முதலில் குப்பைமேனி இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு வாணலியில் எண்ணைய் விட்டு கொஞ்சம் கடுகு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.


பின்பு நறுக்கிய இலைகளை வாணலியில் போட்டு நன்கு தாளித்து பின்பு சிறிது நீருடன் மிக்சியில் அடித்தால் குப்பைமேனி துவையல் ரெடி.



பயன்கள்
 
இதை சாப்பிட்டு வந்தால் தீராத தலைவலியும், பக்கவாத நோய்களும் பறந்துவிடும்.

மூல நோயிற்கு இந்த துவையல் ஒரு சிறந்த மருந்து. மேலும் நாளடைவில் மூலம் குறைய வாய்ப்பு உண்டு.



 
குப்பைமேனி கஷாயம்
வாணலியில் குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக் கரைத்து வைத்து, சுண்டக் காய்ச்ச வேண்டும்.

இதில் உப்பு 'பூர்த்து' மிகுந்து விடும். இந்த உப்பை தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.


இதன் பிறகு குப்பைமேனியில் இருந்து வடிந்த நீருடன் சிறிது மிளகு சேர்த்து கொதிக்க விட்டால் குப்பை மேனி கஷாயம் தயார்.



பயன்கள்
 
இந்த கஷாயத்தை தினசரி இரு வேளை சாப்பிட்டு வந்தால், வாயு மற்றும் அஜீரண கோளாறுகள் நீங்கும்.

நெஞ்சுக்கோழையை நீக்கும், இருமலைக் கட்டுப்படுத்தும், மேலும் விஷக்கடி போன்ற நோய்களை குணப்படுத்தும்.



வீட்டில் அடிக்கடி சுத்தம் செய்ய மறந்துவிடும் 12 பொருட்கள்..!!

1. தலையணைகள்: படுக்கையின் போர்வைகளை சீரான முறையில் நீங்கள் துடைக்கவே செய்வீர்கள். ஆனால் நம்மில் பலரும் தலையணைகளை துவைக்க மறந்து விடுவோம்.

2. வாஷர் மற்றும் ட்ரையர்: டிடர்ஜென்ட்டை கொண்டு நீங்கள் உங்கள் ஆடைகளை சீரான முறையில் துவைப்பதால் உங்கள் வாஷரும் ட்ரையரம் கூட சுத்தமாக இருக்கும் என நீங்கள் நினைப்பீர்கள். சரி அது ரொம்பவும் அழுக்காகாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் வாஷரும் ட்ரையரும் நல்ல நிலையில் இருக்க ஒவ்வொரு 3 மாதமும் அதை சுத்தப்படுத்தவும்.

3. சமையலறை: பாத்திரம் கழுவும் தொட்டி ரசாயன துடைப்பான்கள் ஒரு தேர்வாக இருந்தாலும் கூட அவை தொட்டி மற்றும் அதன் குழாய்களுக்கு நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதனால் அதனை சுத்தப்படுத்துவதற்கு அரை கப் பேக்கிங் சோடாவை தொட்டியில் ஊற்றவும். பின் அரை கப் வினிகர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி கழுவவும். சிறிது நேரத்திற்கு அதனை அப்படியே விட்டு விடுங்கள். பின் வெந்நீரை ஊற்றி அலசவும்.

4. படுக்கையின் போர்வைகள் கண்டிப்பாக இதனை சீரான முறையில் துவைப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம். அதனை சுலபமாக்க, கூடுதலாக ஒரு செட் விரிப்பை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் துவைத்த விரிப்பு காயவில்லை என்றால் இரவு நேரத்தில் அவதிப்பட வேண்டியதில்லை பாருங்கள்.

5. குளியலறை கால் மிதிகள் தினசரி அடிப்படையில் பயன்படுத்தப்படும் பொருட்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் அதனை தேவையான அளவு நாம் துவைப்பதில்லை. தினமும் அது சேகரிக்கும் கிருமிகளின் அளவை சற்று எண்ணிப் பாருங்கள். அதனை மிகவும் சூடான தண்ணீரில் போட்டு துவைக்கவும். பின் அதனை காய வையுங்கள். தேவைப்பட்டால் ப்ரஷை கொண்டும் அதனை சுத்தப்படுத்தலாம். கூடுதல் செட் கால்மிதிகள் வைத்திருப்பதும் நல்லதே.

6. மேக்-அப் பிரஷ்கள்: பொதுவாக உங்கள் மேக்-அப் பிரஷ்கள், மிகுதியான அழுக்குகளுடன் உங்கள் மேக்-அப் பையின் அடியில் கிடக்கும். இதனால் சருமத்தில் பிளவுகள் ஏற்படுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. இந்த ப்ரஷை பயன்படுத்துவதால் எண்ணெய், அழுக்கு மற்றும் பாக்டீரியா ஆகியவைகள் மீண்டும் உங்கள் சருமத்திற்கே செல்லும். இந்த பிரஷ்களை சுத்தப்படுத்த, அதனை வெதுவெதுப்பான நீர் மற்றும் குழந்தைகளின் ஷாம்புவில் மென்மையாக கழுவவும். எளிய வழிமுறை தான்.

7. தரை விரிப்புகள்: சுத்தமில்லாத தரை விரிப்புகளை நினைத்தால் குமட்டல் தான் ஏற்படுகிறது. உங்கள் தரை விரிப்புகளில் தேங்கியிருக்கும் அனைத்து விதமான அழுக்குகளையும் யோசித்து பாருங்கள். ஷூ மற்றும் செருப்புகளில் இருந்து விழும் அழுக்கு, உன்னிகள், பாக்டீரியாக்கள், நாயின் ரோமங்கள், குழந்தைகளின் லீலைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். முதலில் அதனை வாக்யூம் கிளீனரைக் கொண்டு தூசி தட்ட வேண்டும். அதனை கொண்டு தூசிகளையும், அழுக்குகளையும் நீக்குங்கள். அதன் பின் மிகவும் சூடான நீரில் இருந்து வரும் ஆவியில் அதனை காட்டவும். முடிந்தால் தரை விரிப்புகளை சுத்தப்படுத்தும் நபர்களை வருடத்திற்கு இரண்டு முறை அழையுங்கள்.

8. மெத்தை: பொதுவாக நம்மில் பலரும் மெத்தைகளை தேவையான அளவிற்கு துவைப்பதே இல்லை. கண்டிப்பாக இதனை சரியாக செய்பவர் யாருமே இருக்க முடியாது. மெத்தையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை படித்து, அதற்கேற்ப அதனை துவைக்க வேண்டும். அல்லது அதனை ஒரு ட்ரை கிளீனரிடம் கூட எடுத்துச் செல்லலாம்.

9. சோஃபா சாய்விருக்கை மற்றும் அதன் மெத்தையை வாக்யூம் கிளீனரைக் கொண்டு வாரம் ஒருமுறை சுத்தப்படுத்தவும். ஏதேனும் கிளின்சரைப் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் தெளிவாகத் தோன்றாத ஒரு சின்ன இடத்தில் அதை பயன்படுத்தி பார்க்கவும். இதனால் மெத்தைக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை என்றால் பின் முழுவதுமாக பயன்படுத்தவும்.

10. கதவு கைப்பிடிகள்: இருமல், சளி மற்றும் ஃப்ளூ காலத்தின் போது கதவு கைப்பிடிகளை நீங்கள் அதிகமாக சுத்தப்படுத்துவீர்கள் என நாங்கள் நம்புகிறோம். ஆமாம் தானே? கிருமிநாசினி துடைப்பான்களை கொண்டு துடைப்பது தான் மிகவும் சிறந்த மற்றும் சுலபமான வழியாகும்.

11. தொலைப்பேசிகள்: வீட்டில் மற்ற சாதனங்களை விட நீங்கள் அதிகமாக பயன்படுத்துவது தொலைப்பேசியாக தான் இருக்கும். ஆனால் அதனை நம்மில் பலரும் சுத்தப்படுத்துவதே இல்லை. கிருமிநாசினி துடைப்பான்களை கொண்டு அதனை வேகமாகவும் சிறப்பாகவும் துடைத்து விடலாம். அதனை துடைக்க மற்றொரு வழியும் உள்ளது - பஞ்சுருண்டையை அல்கஹாலில் முக்கி, அதனை எண்கள் இருக்கும் இடம், தொலைப்பேசி கவர் ஆகிய இடங்களில் துடைக்கவும்.

12. ரிமோட் கண்ட்ரோல்:  உங்கள் வீட்டில் நீங்கள் அதிகமாக பயன்படுத்தினாலும் கூட துடைக்காமல் போட்டு வைக்கும் சாதனங்களில் இதுவும் ஒன்றாகும். பஞ்சுருண்டையை அல்கஹாலில் முக்கி எளிதாக நுழைய முடியாத இடங்களில் எல்லாம் துடையுங்கள். வீட்டில் நோய்வாய் பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி ரிமோட்டை பயன்படுத்தி வந்தால் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் தானே!

Saturday, May 16, 2015

இன்னா செய்தாரை அவர் நாண நன்னயம் செய்யும் அஜித்!

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்ன இயேசுவை வணங்குபவர் இல்லை – அஜித்.

ஆனால் தன்னை வஞ்சித்தவர்களுக்கு எல்லாம் வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இது அஜித்துக்கு ஏற்பட்ட பக்குவமா அல்லது இன்னா செய்தாரை அவர் நாண நன்னயம் செய்கிறாரா என்று தெரியவில்லை.

சில வருடங்களுக்கு முன் அஜித்திடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை, அவரது கழுத்தில் கத்தி வைக்காத குறையாக டார்ச்சர் செய்து திரும்ப வாங்கியவர் ஏ.எம்.ரத்னம்.

அதே ரத்னத்துக்கு… அவர் சிரமதிசையில் இருக்கிறார் என்பதை அறிந்து, தானே அழைத்து ஆரம்பம் என்ற படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார். அதோடு, என்னை அறிந்தால் படத்தையும் ஏ.எம்.ரத்னத்தையே தயாரிக்க வைத்தார். இதோ இப்போது மூன்றாவது படத்துக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார் அஜித்.

தன்னை அவமானப்படுத்தியவருக்கு ஜாக்பாட் பரிசு போல் கால்ஷீட்டை அள்ளிக் கொடுக்கிறாரே என்று திரையுலகில் அஜித்தை எண்ணி வியக்காத ஆளே இல்லை,

அடுத்த ஆச்சர்யமாக இன்னொரு காரியத்தையும் செய்திருக்கிறார் அஜித்.

சில வருடங்களுக்கு முன் அஜித்தின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி.

காவல்துறையில் அதிகாரியாக இருந்த எஸ்.எஸ்.சக்கரவர்த்தி, ஏதோவொரு பிரச்சனையில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு படத்தயாரிப்பாளர் ஆனார்.

அஜித்தை வைத்து ராசி என்ற படத்தைத் தயாரித்த எஸ்.எஸ்.சக்கரவர்த்தி, நாளடைவில் அஜித்தின் நண்பராக மட்டுமின்றி நம்பிக்கைக்குரியவராக மாறினார்.

அஜித்துக்கு ஆல் இன் ஆல் எஸ்.எஸ்.சக்கரவர்த்திதான் என்ற நிலை வெகு விரைவிலேயே உருவானது.

அஜித் – எஸ்.எஸ்.சக்கரவர்த்தி நட்பின் காரணமாக ராசி படத்தை அடுத்து வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சனேயா, ஜி, வரலாறு என ஏறக்குறைய எட்டு படங்களைத் தயாரித்தார்.
வரலாறு படத்தின் தயாரிப்பில் இருந்தபோது, அஜித் – எஸ்.எஸ்.சக்கரவர்த்தி நட்பில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

அஜித்தைப் பிரிந்த பிறகு எஸ்.எஸ்.சக்கரவர்த்திக்கு இறங்குமுகம் தொடங்கியது.

சிம்புவை வைத்து தயாரித்த காளை செமத்தியாய் உதையைக் கொடுத்தது.

அதன் பிறகு மீண்டும் சிம்பு உடன் இணைந்து வாலு, வேட்டை மன்னன் என இரண்டு படங்களைத் தயாரித்தார்.

இவற்றில் வேட்டை மன்னன் படத்தை ட்ராப் பண்ணிவிட்டார்.

வாலு படம் வருடக்கணக்கில் இழுத்துக் கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் சிம்புவை வைத்து படம் எடுத்ததால் சுமார் 50 கோடிக்கு கடனாளியாகி நிற்கிறார் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி.

தன் பழைய நண்பரின் இன்றைய நிலையை அறிந்த அஜித் துடித்துப்போய்விட்டாராம்.

பிறகு அவரை அழைத்துப் பேசி ஆறுதல் சொல்லி அனுப்பியது மட்டுமல்ல…. அடுத்து அஜித் செய்த விஷயம்தான் அற்புதம்.

எஸ்.எஸ்.சக்கரவர்த்திக்கு தன் அடுத்தப் படத்தை பண்ண தீர்மானித்துள்ளாராம்.

தற்போது யட்சன் படத்தை இயக்கி வரும் விஷ்ணுவர்தன்தான் இயக்குநராம்.

உறுதிப்படுத்தப்படாத இந்த செய்தி உண்மையாக  இருக்கும்பட்சம்… ஹாட்ஸ் ஆப் அஜித்!

தொட்டியில் வளர்க்கும் ரோஜா செடியை எப்படி பராமரிப்பது..? பூ அதிகமாக பூக்க என்ன செய்ய வேண்டும்..?

ரோஜா செடியை நேரடியாக  மண்ணில் நடும்பொழுது  தனக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக்கொள்ளும். ஆனால் தொட்டில் வளர்க்கும்  செடிகளுக்கு நாம்தான் உணவு கொடுக்க வேண்டும்.

Rosemix என்ற ரோஜாவின் உணவை 15 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தவேண்டும். அதோடு வேப்பம்  புண்ணாக்கு போட வேண்டும். இது  உணவாக  மட்டுமின்றி நோய் தடுப்பு மருந்தாகவும்  பயன்படுகிறது.

ரோஜர் என்ற மருந்தை ஒரு மூடி அளவு எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து மாதம் ஒரு முறை சூரிய உதயத்திற்கு முன்போ, அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகோ தெளிக்க வேண்டும். பகலில் பயன்படுத்தினால் மருந்தின் விஷ தன்மையால் செடி கருகிவிடும்.

இப்படி முறையாக வளர்த்தால் உங்கள் ரோஜா செடி  இரண்டு, மூன்று  வாரங்களில் பூத்து குலுங்கும்..

இந்த முறையில் அரிசி சாதம் செய்து சாப்பிட்டால் உடல் எடை கூடாது..

அரிசியை வேகவைக்கும் போது அதனுடன் சில கொழுப்பு நிறைந்த எண்ணை சேர்ப்பதால் அரிசியிலுல்ல மாவு மற்றும் கார்போஹைட்ரேட்  சாதுக்களால் உடல் எடை கூடுவதை குறைக்கலாம் என ஒரு புதிய ஆராய்ச்சியின் முடிவு சொல்கிறது.

வேக வைத்த ஒரு கப் சாதத்தில் 240 கலோரிகள் உள்ளன, சாதத்தில் உள்ள மாவு சத்தின் ஒரு பகுதியை சில என்சைம்கள்  சர்க்கரையாக மாற்றி நமது ரத்தத்தில் கலக்க செய்கிறது. இருந்த போதிலும் சாதத்தில் செரிமானம் ஆகக்கூடிய மற்றும் செரிமானமாக இயலாத மாவு பொருட்கள் உள்ளன. மனித உடலில் இந்த செரிமானமாக இயலாத மாவு பொருட்களை ஜீரணிக்க தேவையான என்சைம்கள் இல்லை இதனால் நாம் உண்ணும் சாதத்திலுள்ள செரிமானமாக இயலாத மாவு பொருளை ரத்தத்தில் சேரும் சர்க்கரையாக மாற்ற இயலாமல் அவை வெறும் கழிவுகளாக வெளியேறிவிடும், இவற்றால் நாமது உடலுக்கு கலோரிகள் சேருவதும் இல்லை, உடல் எடை கூடுவதுமில்லை.

சாதத்தில் உள்ள பெரும்பாலான மாவு சத்தை சர்க்கரையாக மாறாத செரிமானமாகத பொருளாக மாற்றக்கூடிய புதிய சமையல் முறையை இலங்கையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆராய்ச்சியின்படி செய்யவேண்டிய முறைகள்: கொதிக்கும் தண்ணீரில் ஒரு டீ ஸ்பூன் தேங்காய் எண்ணையை ஊற்ற  வேண்டும், பிறகு அதனுடன் அரை கப் அரிசி சேர்க்க வேண்டும். இதை 40 நிமிடம் சிம்மில் வைத்து வேக வைக்கலாம் அல்லது 20, 25 நிமிடம் அதிக சூட்டிலும் கொதிக்க வைக்கலாம், பிறகு வெந்த சச்தத்தை 12 மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

இப்படி செய்யும்பொழுது சாதத்தில் கலந்துள்ள எண்ணை அரிசியிலுல்ல மாவு பொருட்களுக்குள் சென்று ரத்தத்தால் உட்கிரகிக்க இயலாத பாதுகாப்பு படலத்தை உருவாக்குகிறது.

12 மணி நேரம் கூலிங் செய்யும் பொழுது சாதத்திலுள்ள மாவு பொருளான அமைலோசை ஜெல் போல மாற்றுகிறது. இந்த அமைலோசிர்க்கும் ஹைட்ரஜென் மூலக்கூறுகளுக்கும் வேதி வினை ஏற்பட்டு நமது ஜீரன மண்டலத்தால் உட்கிரகிக்க இயலாத மாவு பொருளாக மாறுகிறது.

இந்த முறையில் குளிரூட்டப்பட்ட சாதத்தை வெளியே எடுத்த பிறகு சுட வைத்தும் சாப்பிடலாம் என ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

மேலும் தேங்காய் எண்ணைக்கு பதிலாக வேறு எண்ணைகளை உபயோகிப்பது குறித்தும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

குழந்தைகள் காது அல்லது மூக்கில் சிறு பொருட்களை போட்டுக்கொண்டால் என்ன செய்வது ?

பட்டன், ஹூக், கடலை, பின் மற்றும் சிறு பயறு வகைகள், கீழே கிடக்கும் சிறு பொருட்கள் இப்படி எதையாவது மூக்கிலோ காதிலோ போட்டுக்கொண்டால், பயப்படவோ பதட்டப்படவோ வேண்டாம். பதட்டத்தில் செய்யும் செயல்கள் மேலும் விபரீதத்தை ஏற்படுத்தும். அந்த சிறு பொருட்கள் சில நிமிடம் உள்ளே இருப்பதால் ஒன்றும் நேர்ந்துவிடாது. டாக்டரிடம் சென்று காட்ட வேண்டும்.

மூக்கில் மாட்டியதை, தகுந்த உபகரணங்கள் இல்லாமல் நீங்களே எடுக்க முயற்சித்தல், அது அப்படியே பொய் நுரையீரலை அடையும் அபாயம் உள்ளது. அப்புறம் மூச்சு திணறல் ஏற்ப்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

காதில் போட்டதால் எடுக்கிறேன் என்று குடைந்தால் வெளிக்காது சேதமடையும். காதுக்குள்ளே இருக்கும் செவிப்பறை பாதிக்கப்படும். அப்படி சேதமடைந்தால் காதில் சீழ் வடிதலோ அல்லது நிரந்தர செவித்திறன் குறைவோ ஏற்ப்படும்.

Friday, May 15, 2015

எடையைக் குறைக்குமா கீரீன் டீ ?

இன்று க்ரீன் டீயை பலரும் நாட ஆரம்பித்திருக்கும் நிலையில், க்ரீன் டீயை யாரெல்லாம் குடிக்கலாம், இதைக் குடிப்பதனால் உடல் எடை குறையுமா, குடிக்கும் முறை என்ன என்பது பற்றி பார்ப்போம்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கிய, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்ல, குறைந்த கலோரிகளே கொண்ட க்ரீன் டீயை, எந்த வயதினரும் அருந்தலாம்.

குறிப்பாக, ஒபிஸிட்டி அதாவது அதிக எடை உள்ளவர்கள், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு க்ரீன் டீ தொடர்ந்து குடிக்கப் பரிந்துரைக்கத்தக்கது.

    இது, உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.
    தேவையில்லாத கொழுப்பு சேர்வைத் தடுப்பதால், மாரடைப்பு வராமல் காக்கும்.
    கான்சர் செல்களைக்கூட குறைக்கும்
    சருமத்தின் இறந்த மற்றும் பாதிப்படைந்த செல்களைப் புதுப் பிக்கச் செய்யும்.
    வயதான தோற்றத்தை தவிர்க்கச் செய்து புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
    முடி வளர்ச்சியையும்கூட தூண்டவல்லது.

ஒரு நாளில் மூன்று கப் வரை க்ரீன் டீ அருந்தலாம்.

அசிடிட்டியை உண்டு பண்ணும் என்பதால், இதை வெறும் வயிற்றில் அருந்த வேண்டாம். காலை 11 மணி, மாலை 5 மணி போன்ற உணவு இடைவெளிகளில் சாப்பிடலாம்.

க்ரீன் டீயில் பால், சர்க்கரை கலந்து சாப்பிடக் கூடாது, அது டீயின் தன்மையை மாற்றிவிடும்.
வைட்டமின்-சி, தாது உப்புகள் இருக்கும் இந்தக் டீயை கொதிக்க வைத்தால் அந்தச் சத்துகள் வெளியேறும்விடும் என்பதால், கொதிக்க வைத்த தண்ணீரில் தேயிலைத் தூளையோ, பையையோ (டீ பேக்) போட்டு, மூடி வைத்து, சாறு இறங்கியதும் பருகலாம்.

வைட்டமின்-சி வேண்டுகிறவர்கள், அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சேர்த்தும் பருகலாம்.
மொத்தத்தில், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் எடையைக் குறைக்க விரும்பு கிறவர்களுக்கான நல்ல பரிந்துரை,
க்ரீன் டீ. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய தாகத்தை குறைக்கும் வல்லமை படைத்தது!

‘36 வயதினிலே’ பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

   ஜோதிகா 36 வயது நிரம்பியும் அப்பாவியாகவும், ரொம்பவும் வெகுளித்தனமாகவும் இருக்கிறார். இது அவரது கணவரான ரகுமானுக்கு பிடிப்பதில்லை. அவளுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜோதிகா மீது எந்த மதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.

இதற்கிடையில் தான் பார்க்கும் வேலை பிடிக்காததால் அயர்லாந்து சென்று அங்கு வேலை பார்க்க எண்ணுகிறார். குடும்பத்துடன் அயர்லாந்து செல்ல விசாவுக்கு விண்ணப்பிக்கிறார்.

இந்நிலையில் ஒருநாள் ஜோதிகாவின் மகள் படிக்கும் பள்ளிக்கு குடியரசுத்தலைவர் வருகை தருகிறார். அப்போது அவரிடம் தன்னுடைய அம்மா, தங்களிடம் ஒரு கேள்வி கேட்கச் சொன்னார் என்று ஒரு கேள்வி கேட்கிறாள் அமிர்தா.

அந்த கேள்வியை கேட்டு வியக்கும் குடியரசு தலைவர், அவளிடம் உன் அம்மாவை என்னை வந்து பார்க்கச் சொல். அவரிடம் இதற்கு விடை கூறுகிறேன் என்று சொல்லி அனுப்புகிறார்.

உடனே ஜோதிகாவை சந்திக்க குடியரசுத்தலைவர் விருப்பப்படுகிறார் என்ற செய்தி நாடு முழுவதும் பரவிவிடுகிறது. ஜோதிகாவுக்கு இதில் கர்வம் இருந்தாலும் கொஞ்சம் பயமும் இருக்கிறது. அவ்வாறு பயம் கலந்த பீதியுடன் தன்னை சந்திக்கும் ஜோதிகாவை குடியரசுத்தலைவர் நலம் விசாரித்ததுமே, ஜோதிகா மயங்கி கீழே விழுந்து விடுகிறார்.

இது அங்குள்ள அனைவருக்கும் சிரிப்பலையை உண்டாக்குகிறது. இச்சம்பவம் நாடு முழுவதும் பரவிவிடுகிறது. சமூக வலைத்தளங்களில் ஜோதிகாவை கேலி செய்து, நிறைய கருத்துக்களை வெளியிடுகின்றனர். இதனால் ஏற்கனவே ஜோதிகா மீது மதிப்பு இல்லாமல் இருந்து வரும் கணவர் ரகுமானுக்கும், பள்ளியில் கிண்டலுக்கு உள்ளாவதால் மகள் அமிர்தாவுக்கும் ஜோதிகா மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்துகிறது.

பள்ளியில் தொடர்ந்து நண்பர்கள் கிண்டலடிப்பதால் பள்ளிக்கு செல்ல மறுக்கிறாள் அமிர்தா. இதற்குள் அயர்லாந்து வேலைக்காக விண்ணப்பம் செய்திருந்த ரகுமானுக்கு அங்கு செல்ல விசா கிடைத்துவிடுகிறது. கூடவே அரவது மகளுக்கும் விசா கிடைத்துவிடுகிறது.

ஆனால் ஜோதிகாவுக்கு மட்டும் விசா கிடைக்கவில்லை. ஜோதிகாவுக்கு 36 வயது ஆகிவிட்டபடியால் 36 வயது நிரம்பிய பெண் அயல்நாட்டில் வேலைக்கு செல்ல முடியாது என்ற விதிமுறையின் படி இவருக்கு மட்டும் விசா ரத்தாகிவிடுகிறது.

எனவே ஜோதிகாவை மட்டும் தனியாக விட்டுவிட்டு ரகுமானும், அவரது மகளும் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார்கள். இந்த நிலையில்தான் ஜோதிகாவின் கல்லூரி தோழியான அபிராமி ஜோதிகாவை சந்திக்கிறார். அவளது நிலைமையைக் கண்டு வருத்தமடைகிறாள்.

ஆனால் உண்மையில் ஜோதிகா கல்லூரி பருவத்தில் புரட்சிகரமான, துடிதுடிப்பான பெண்ணாகவும், மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் பெண்ணாகவும் இருந்திருக்கிறார். ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு கணவன், குழந்தை என ஆனபிறகு அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அடக்க ஒடுக்கமாக மாறிவிட்டாள். ஆனால் அது அவளை எந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பதை அபிராமி அவளுக்கு புரிய வைக்கிறார்.

மேலும், அவளுடைய தூண்டுதலான வார்த்தைகளால்தான் தான் பெரிய நிலையில் இருப்பதையும் அபிராமி, ஜோதிகாவிடம் எடுத்துக் கூறுகிறார். மீண்டும் பழைய ஜோதிகாவாக மாற வேண்டும் என்று அவளை வற்புறுத்துகிறார்.

இறுதியில் ஜோதிகா பழைய ஜோதிகாவாக மாறினாரா? பிரிந்துபோன இவரது குடும்பம் இவருடன் மீண்டும் சேர்ந்ததா? குடியரசுத்தலைவரிடம் இவர் கேட்ட கேள்வி என்ன? என்பதே மீதிக்கதை.

36 வயது நிரம்பிய பெண்ணாக ஜோதிகா பளிச்சிடுகிறார். தலையில் சிறிது நரைத்த முடியை வைத்து இவரை மற்றவர்கள் கிண்டலடிக்கும் காட்சிகளில் அழகான முகபாவணைகளை கொடுத்திருக்கிறார்.

மேலும், தான் குடியரசுத்தலைவரை சந்திக்கப் போவதை மற்றவர்களிடம் சொல்லி பந்தா செய்யும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வந்தாலும், அதே பளபளப்பு, துள்ளலான நடிப்பு, வித்தியாசமான முகபாவணைகள் என எதையும் மறந்துவிடாமல் அதே இளமையுடன் நடித்து அனைவரையும் ஈர்த்திருக்கிறார்.

படம் முழுக்க ஜோதிகாவுக்குத்தான் நடிக்க வாய்ப்பு அதிகம் என்றாலும், அவ்வப்போது சிறுசிறு காட்சிகளில் வந்துபோகும் ரகுமான், நாசர், அபிராமி, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, டெல்லி கணேஷ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை செவ்வனே கொடுத்திருக்கிறார்கள். ஜோதிகாவின் மகளாக நடித்திருக்கும் அமிர்தாவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் என்றாலும், தமிழுக்கு ஏற்றார்போல் அழகான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரோஜன் ஆண்ட்ரூவ்ஸ். ஆனால், படம் மெதுவாக செல்வதுதான் படத்திற்கு சற்று தொய்வைத் தருகிறதே தவிர, காட்சிகள் ஒவ்வொன்றையும் ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘வாடி ராசாத்தி’ பாடல் அசத்தல். பின்னணி இசையிலும் கோலோச்சியிருக்கிறார். படத்திற்கு மற்றொரு பெரிய பலம் திவாகரனின் ஒளிப்பதிவு. இவரது கேமரா கண்கள், ஒவ்வொரு காட்சியையும் நம்மை படத்தோடு ஒன்றும்படி செய்திருப்பது சிறப்பு.

மொத்தத்தில் ‘36 வயதினிலே’ பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

ஜோதிகா அரசு பணியில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ரகுமான் எப்.எம். வானொலியில் முக்கிய பொறுப்பில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகளான அமிர்தா பள்ளியில் படித்து வருகிறாள்.

ஆசனவாய் தசையை வலுவடைய செய்யும் அஸ்வினி முத்திரை


அஸ்வினி என்றால் குதிரை என்று அர்த்தம். நீங்கள் குதிரையின் பின்புறத்தை(மலம் கழிக்கும் இடத்தை) பார்த்தீர்கள் என்றால் அது சுருங்கும்... விரியும்.... சுருங்கும் .....விரியும்.....  அதை தான் நாம் அஸ்வினி முத்திரை என்று கூறுகிறோம்.

குதிரையை பார்த்தீர்களா, அது எவ்வளவு வலுவாக உள்ளதென்று. அதற்கு காரணம் இரண்டு ஒன்று அதன் உணவான கொள்ளு. இன்னொன்று அஸ்வினி முத்திரை ஆகும். அதனால் தான் அது மிக ஆற்றலாக உள்ளது. மனிதர்களாகிய நாமும் இதை செய்து வந்தால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம். ஆண்கள் பெண்கள் இருபாலரும் செய்யலாம்.

இதை செய்தால் ஆண்மை அதிகரிக்கும். உடல் பலம் பெரும். இளமை நம்மிடமே தங்கும். ஆண்மையை பெருக்க வழி  என்ன என்று புலம்புபவர்களுக்கு இதை விட சிறந்த வழி வேறு இல்லை. உடலில் உள்ள முக்கிய நரம்புகள் எல்லாம் ஆசன வாயில்(சுருங்கும் இடத்தில) வந்து குவிகின்றன. அதை சுருக்கி விரிக்கும்போது அவை தூண்டப்பட்டு உடல் சக்தி பெறுகிறது. இந்த முத்திரை செய்வதால் மலச்சிக்கல், மூலம், பவுத்திரம், ஆசன வாயில் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் தீரும். ஆசனவாய்த் தசையும் வலுவடையும். பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும்.

செய்முறை : விரிப்பில் தியானம் செய்வது போல் அல்லது பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில்  வசதியாக அமர்ந்து கொண்டு குதம் வெளியேறும் பகுதியை மெதுவாகச் சுருக்கி இழுத்துப் பிடிக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும்.

Thursday, May 14, 2015

கூழாங்கல் பயிற்சியில் பாத அழுத்தத்தினால் ஏற்படும் ஆரோக்கியம்

சாதாரண நடைபயிற்சியைக் காட்டிலும், அதிக நன்மைகளை அள்ளித் தருகிறது இந்த (Pebble path) கூழாங்கல் நடைபாதை.கூழாங்கல்லில் நடப்பது உடலுக்குப் பயிற்சி மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் தருகிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன.

இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும். செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது.  முதன்முதலில் நடக்கும்போது சற்று கடினமானதாக இருந்தாலும், பின்னர் பழகிவிடும். முதலில் மெதுவாக நடக்க வேண்டும்.

ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். கூழாங்கல் பாதையில் ஒரு நாளைக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடந்தால் போதும்.

கைகளுக்கும் கூழாங்கல் பயிற்சி :

உள்ளங்கால்கள் போலவே உள்ளங்கைகளுக்கும் கூழாங்கல் மூலம் பலன் பெறலாம். கூழாங்கல்லை, இரண்டு உள்ளங்கைகளுக்கு நடுவே வைத்து, முன்னும் பின்னுமாக (clockwise and anti-clockwise) உருட்டலாம். தரையில் கல்லை வைத்து உள்ளங்கை முழுவதும் படுவதுபோல் உருட்டவும் செய்யலாம். உள்ளங்கையிலுள்ள உள்ள நரம்பு நுனிகளைத் தூண்டச் செய்யும் பிரஷராக இந்தப் பயிற்சி அமையும். தினமும் இதுபோல் ஐந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

பாத அழுத்தத்தினால் ஏற்படும் ஆரோக்கியம் :

உடலுக்கு ஒய்வு கிடைக்கும்.  ஆழ்ந்த தூக்கம் வரும்.  உள்ளங்காலில் உள்ள அக்குபிரஷர் புள்ளிகள் தூண்டப்படுவதால், உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படும்.  டென்ஷன், தசைவலி, தசைகளில் பிடிப்பு போன்றவை குணமாகும்.  மனம் அமைதி பெறும்.  ரத்த ஒட்டம் சீராகும்.  உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

பக்கவாதம், ஆற்றல் இழந்த நிலைமையில் உள்ளோர் கூழாங்கற்களின் மேல் நடந்தால், இழந்த ஆற்றலை மீண்டும் பெறலாம்.  உடல்பருமன் உள்ளவர்கள், கூழாங்கற்களின் மேல் நடந்தால், பலன் இரட்டிப்பாகும். கொழுப்பு உடலில் சேராது.  சர்க்கரை நோயாளிகள் கூழாங்கல்லின் மேல் நடந்து வந்தால், குணமாகும் வாய்ப்புகள் அதிகமாகும்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளளவர்களுக்கு டென்ஷனும் பதற்றமும் உடன் பிறந்தவை. இவர்கள் ஒய்வு எடுப்பது எவ்வளவு அவசியமோ, அதுபோல கூழாங்கற்களின் மேல் நடப்பதும் மன அழுத்தத்தை விரட்டி நல்ல மனநிலைக்கு மாற்றும்.  

கங்கை கரையில் வாழும் அகோரிகள் யார்?

இந்தியாவின் எண்ணற்ற மர்மங்களில் ஒன்றாக கங்கை கரைகளில் வாழ்ந்து திரியும் அகோரிகள் உள்ளனர். அகோரிகள் என்பவர்கள் வட இந்தியாவில் உள்ள கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய சாதுக்கள் ஆவர்.
காசி நகரத்தில் அதிகம் காணப்படும் இவர்கள் பெரும்பாலும் சிவனின் கோர ரூபமான பைரவரையும், வீரபத்திரரையும் வழிபடுகின்றனர்.
இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித வாழ்கைக்கு அப்பாற்பட்டவையாக உள்ளதால் இவர்கள் மக்கள் மத்தியில் தனித்து தெரிகின்றனர்.

அகோரிகள் யாரையும் துன்புறுத்தாத சாதுக்கள் என்று கூறப்பட்டாலும், இவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சிவபெருமானுக்கு சிறுவயதிலேயே நேர்ந்து விட்ட குழந்தைகளாக காசி, கயா, வாரணாசி, ரிஷிகேஷ் ஆகிய தலங்களில் உள்ள மடங்களில் விடப்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் கங்கை நதியில் விடப்படும் சடலங்கள், காசி உள்ளிட்ட இடங்களில் எரியூட்டப்படும் உடல்களிலிருந்து மண்டையோடுகளை சேகரித்துக் கொள்கிறார்கள்.


இந்தக் கபால ஓடுகளை தண்ணீர் அருந்தவும், திருவோடாகவும் பயன்படுத்துகின்றனர். இவர்களில் பெரும்பாலானர்வகள் 2 முதல் 20 பேர் கொண்ட குழுவாக வாழக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அகோரிகளில் 50 சதவிகிதத்தினர் நிர்வாணமாகவும், மீதமுள்ளவர்கள் அரை நிர்வாணமாகவும் வாழும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலும் 90 சதவிகிதம் பேருக்கு மதுப்பழக்கம், கஞ்சா புகைப்பது, மது அருந்துதல், போதைப் பழக்கம் ஆகியவை உள்ளது.
அகோரிகள் நெருப்பில் வேகும் மனித உடல் பாகங்களை எடுத்து உண்பதாக கூறுவதை பலரும் கேட்டிருப்போம்.


ஆனால் அகோரிகளில் 3 சதவிதத்தினருக்கும் குறைவானவர்களே இவ்வாறு மனித உடல் பாகங்களை உண்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


ஆடையணியும் அகோரிகளில் பலர் வெள்ளுடையும், கால பைரவர் என்பதைக் குறிக்கும் விதமான கருப்பு வண்ணம் மற்றும் காவி ஆகிய நிறங்களைப் பயன்படுத்துகிறார்கள்.


மேலும், அளவில் மிக குறைவாக உள்ள பெண் அகோரிகளை பார்வதியின் மறுஉருவமாக பக்தர்கள் கருதுவதால் ‘துர்க்கா ஜி” என்ற பெயரில் அழைக்கின்றனர்.


அகோரிகள் பெரும்பாலும், சுடுகாட்டுச் சாம்பலை பூசிக்கொண்டு, பிச்சை எடுப்பவர்களாக கருதப்பட்டு வந்தாலும் அவர்களை ”பாபாஜி” என்று அழைத்து அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதை வட இந்தியர்கள் வரம் போல கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அகோரிகள் பங்குபெறும் உலகின் மிகப்பெரிய மக்கள் ஒன்றுகூடலாக கருதப்படும் ”கும்பமேளா” என்ற பிரம்மாண்ட விழா ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் உள்ள ஆற்றுப்படுகையில் நடைபெறும்.


இந்த மாபெரும் திருவிழாவின்போது உடல் முழுவதும் திருநீறு பூசிய பல்லாயிரம் அகோரிகள், நதியில் புனித நீராடுவதை பார்க்கும் உலக மக்கள் இந்தியாவின் தொன்மையை பார்த்து வியப்பில் ஆழ்கின்றனர்.

Wednesday, May 13, 2015

பொதிகை மலையும் ஜப்பானும்:-

பொதிகை மலையும் ஜப்பானும்:-

தலைப்ப கேட்டவுடனே குழப்பம் வருமே, எனக்கும் அப்படி தான் இருந்திச்சி. பொதிகை திருநெல்வேலி பக்கம் இருக்கு, ஜப்பான் எங்கையோ இருக்கு, கப்பலும் கிடையாது, விமான சேவையும் கிடையாது அப்புறம் எதுக்கு இப்படி லிங்க் பண்றாங்கன்னு யோசிச்சிட்டே படிச்சேன் ரெண்டு வருஷம் முன்னாடி உள்ள தினத்தந்தி மாவட்ட சிறப்புகள் பகுதியை, அப்படியே ஷாக் ஆகிட்டேன், நீங்களும் பாருங்க ஷாக் ஆகி ஷேர் பட்டன் கிளிக் பண்ணுவிங்க.

பொதிகை மலைக்கு நிறைய சிறப்பு இருக்கு சொல்லனும்ன்னு நெனைச்சா விடிய விடிய சொல்லலாம், அதுல பெரிய போக்கிஷம்ன்னு பாத்தா ஒன்னு தமிழ் மொழி, ரெண்டாவது அங்க இருக்குற மூலிகை செடிகள், உலகிலேயே எங்கும் கிடைக்காத அரியவகை மூலிகைகள் பொதிகை மலையில் கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்.

அதே மாதிரி ஜப்பான் மேல அமெரிக்கா விசிய அணுகுண்டு நமக்கு தெரியும். ஹிரோஷிமா மற்றும் நாகசாகி இரண்டு நகரமும் அழிந்த நிலையில் தான் இரண்டாம் உலக போர் முடிவுக்கு வந்தது . இன்னும் 200 ஆண்டுக்கு ஜப்பான் மக்களால் அங்கு வாழ முடியாது, காரணம் காற்றில் நச்சு தன்மை இருபதாக கூறினார்கள் அவர்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படும் என்று அப்போது இருந்த விஞ்ஞானம் கூறியது, அனால் இப்போது இருக்கும் ஜப்பானை பாருங்கள், மக்கள் எப்போதும் இருபது போல் வாழ்கிறார்கள் முன்னேறுகிறார்கள், இப்போது ஆராய்ந்து பார்த்தல் காற்றில் நச்சு தன்மை இல்லை, அது எப்படி சாத்தியம் ஆயிற்று என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் குதித்தனர், அராய்ச்சி முடிவில் தெரிந்த அதிசய உண்மை தான் இது.

ஜப்பானியர்கள் நம் இந்தியர்களை விட சற்று வலிமையானவ்ர்கள் மற்றும் புத்திசாலிகள் ஆனது காரணமே நம் பொதிகை மலையும், அதன் மருத்துவ குணமும் தான் என்று ஆராய்ச்சி முடிவில் கூறினார்கள். தென் மேற்கு பருவகாற்று விசும் போது காற்று பொதிகை மலையை கடக்கும் போது பொதிகை மலையில் இருக்கும் மரங்களின் முலிகை பொருள்கள் காற்றில் கலக்கிறதாம், அந்த காற்று பல மைல்கள் தூரம் உள்ள ஜப்பான் கடக்கும் போது அந்த முலிகை காற்று மழையாய் பொழிக்கிறது.

Wednesday, May 6, 2015

உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும் ( பாலிவுட் நடிகர் சல்மான் கான் )

போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான், 2002ம் ஆண்டு செப்.,28ம் தேதி, போதையில் காரை அதிவேகமாக ஓட்டி, பந்த்ரா, அமெரிக்கன் பேக்கரி முன்பு சாலையோரத்தில் இருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் ஒருவர் பலியானார், நான்கு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு மும்பை கோர்ட்டில் கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. சல்மான் தான், அரசு தரப்பு என மாறி மாறி விவாதங்கள் நடந்து வந்தன. ஒருவழியாக ஏப்ரல் 20ம் தேதி வழக்கு விசாரணை முடிந்து மே 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

குற்றவாளி என தீர்ப்பு

இந்தசூழலில் ஸ்ரீநகரில், படப்பிடிப்பில் இருந்த சல்மான் கான், நேற்று(மே 5ம் தேதி) மாலை மும்பை வந்தடைந்தார். இன்று காலை 9.30 மணிக்கே தனது வீட்டை விட்டு கிளம்பிய சல்மான், கோர்ட்டில் ஆஜரானார். அப்போது சல்மான் கான், தான் காரை ஓட்டவில்லை என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். ஆனால் அவர் தான் காரை ஓட்டியுள்ளார் என பலர் சாட்சியளித்துள்ளனர். இதன்மூலம் சல்மான் கான், மது அருந்தி கார் ஓட்டியது உண்மை தான், அவர் தான் விபத்து ஏற்படுத்தியுள்ளார் எனவே அவர் தான் குற்றவாளி என நீதிபதிகள் அறிவித்தனர்.

5 ஆண்டு சிறை தண்டனை

சல்மான் குற்றவாளி என 11.10 மணியளவில் நீதிபதிகள் அறிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு மேல் இன்றே மதியத்திற்கு மேல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சல்மான் கான் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

மேல்முறையீடு செய்ய சல்மான் முடிவு

தனக்கு விதிக்கப்பட்டதை தண்டனையை எதிர்த்து சல்மான் கான் மேல் முறையீடு செய்ய இருக்கிறார். அதுமட்டுமின்றியும் தனக்கு ஜாமின் வேண்டியும் மனு தாக்கல் செய்தார். இதில் அவருக்கு இரண்டு நாட்கள் மட்டும் ஜாமின் வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.


ரூ.200 முதலீடு என்னவாகும்.?

சல்மான் கானை நம்பி சுமார் ரூ.200 கோடி முதலீட்டில் படங்கள் தயாராகி வருகின்றன. சல்மான் தான் குற்றவாளி என மும்பை கோர்ட் அறிவித்து, அவருக்கு சிறை தண்டனையும் வழங்கியுள்ளதால் தயாரிப்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, பாலிவுட் வட்டாரங்கள் கூறியதாவது: சல்மான் கான், தற்போது, பஜ்ரங்கி பாஜியானா, பிரேம் ரதன் தாங் பயோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். முதல் படத்தில், கரீனா கபூரும், இரண்டாவது படத்தில் சோனம் கபூரும், அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர். இந்த இரு படங்களின் படப்படிப்பும், 70 சதவீதத்துக்கு மேல் முடிவடைந்து விட்டன. இதுதவிர, தபாங் 3, என்ட்ரி மெய்ன் நோ என்ட்ரி உட்பட, நான்கு படங்களில் நடிக்க சம்மதித்து உள்ளார். சல்மான் கானை நம்பி, இந்த படங்களின் தயாரிப்பாளர்கள், 200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். அவர் மீதான குற்றம் நிரூபணம் ஆகி, சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே இனி தொடர்ந்து அவரால் படப்பிடிப்பில் பங்கு கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. தற்போதைய சூழலில் நாங்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சல்மான் வழக்கு கடந்து வந்த பாதை...

செப்., 28: சல்மான்கானின் ரத்த மாதிரி பரிசோதனை. குடித்து விட்டு கார் ஓட்டிய குற்றச்சாட்டில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் சல்மான்கான் உடன் ஜாமினில் வெளியே வந்தார்.

* அக்., 1: மோட்டார் வாகன சட்டம் 1988, மும்பை மதுவிலக்கு சட்டம் 1949ன் படி சல்மான் மீது வழக்குப்பதிவு.

* அக்., 2: வழக்கு ஐ.பி.சி., - 304 பிரிவுக்கு மாற்றம்.

* அக்., 7: சல்மான்கான் மீண்டும் கைது.

* அக்., 21: பந்த்ரா மேஜிஸ்திரேட் கோர்ட்டில் மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்.

* அக்., 24: சல்மான்கானுக்கு மீண்டும் ஜாமின்.   

2003 ஜூன்: ஐ.பி.சி., - 304 பிரிவு - இந்த வழக்குக்கு பொருந்தாது என சல்மான்கான் மும்பை ஐகோர்ட்டில் மனு.

* டிச., : இந்த வழக்குக்கு 304 பிரிவு பொருந்துமா என்பதை மேஜிஸ்திரேட் கோர்ட் முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

2006 அக்., : மேஜிஸ்ட்ரேட் கோர்ட் சல்மான்கான் மீதான குற்றச்சாட்டை ஏற்று வழக்கை பதிவு செய்தது.

2013 டிச., 23: 17 சாட்சியங்களிடம் விசாரணை நடத்திய மேஜிஸ்ட்ரேட், மும்பை செஷன்ஸ் கோர்ட்டுக்கு வழக்கை மாற்றி உத்தரவு.

2014 ஏப்., 27: செஷன்ஸ் கோர்ட்டில் புதிதாக விசாரணை துவக்கம்.

* ஜூலை: 63 சாட்சியங்கள் குறித்த கோப்புகள் காணவில்லை என புகார். கோப்புகளை கண்டுபிடிக்க கோர்ட் உத்தரவு.

* செப்., 12: கோப்புகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு.

2014 நவ., 24: வழக்கை விரைந்து முடிக்க கோர்ட்டுக்கு, அரசு வழக்கறிஞர் வலியுறுத்தல்.

2015 மார்ச் 25: 24 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.

* மார்ச் 27: சல்மான்கானின் வாதம் நீதிபதி முன் பதிவு செய்யப்பட்டது.

* மார்ச் 31: சல்மான்கான் கார் டிரைவர் "நான் தான் காரை ஓட்டினேன், சல்மான்கான் காரிலேயே இல்லை என வாதம்.

* ஏப்., 20: இரு தரப்பு விசாரணை முடிந்தது.

* ஏப்., 21: தீர்ப்பு மே 6ல் அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவிப்பு.

* மே 6: சல்மான்கான் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு. 5 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு. இரண்டு நாள் ஜாமின்.

விஜய்க்கு அழகும் இல்ல, திறமையும் இல்ல- அப்பாவே இப்படி சொன்னா எப்படி..?

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநர்களின் வாழ்க்கை இன்றும் மிக மோசமாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் போக்கும் விதமாக இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் இணைந்து பலரிடம் நிதியை திரட்டி அதை உதவி இயக்குநர்களின் எதிர்கால வாழ்க்கைக்காக திட்டம்போட்டு பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்கள். இதில் தற்போது உதவி இயக்குநர்களின் பிள்ளைகளின் கல்வி செலவுக்கான திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்கள்.

இந்த திட்டத்துக்கு பெரும் உதவி புரிந்த திரு.ஏ.சி.சண்முகம், ஜெகத்ரட்சகன், கே.கணேஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக சென்னை கமலா திரையரங்கில் இன்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இயக்குநர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

இதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், நான் இயக்குநர் சங்க தலைவராக இருக்கும்போது என்னால இந்த மாதிரி நல்ல திட்டங்களை செய்ய முடியலைன்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு, ஆனால் விக்ரமன் தலைமையில் இதெல்லாம் சாத்தியமாகியிருக்குன்னு நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கு.

என் மகன் விஜய்க்கு அழகும் இல்ல, திறமையும் இல்ல ஆனா இப்ப சினிமாவுல பெரிய ஸ்டாராக இருக்குறது அவன் செய்த நல்ல விஷயங்களால்தான், சுமார் 3 வருஷத்துக்கு முன்னாடி ராயப்பேட்டை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடும்போது அங்கிருந்த ஒரு பெண் என்னிடம் ”எனக்கு கல்யாணமாகி 5 வருஷமாகுது இதுவரைக்கு ஒரு பொட்டு தங்கம்கூட எனக்குன்னு இல்ல” ஆனா இப்ப உங்க பையனால அது என் குழந்தைக்கு அது நிறைவேறியிக்குன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்குன்னு சொன்னங்க, இந்த மாதிரி தர்மம்தான் என் மகன் விஜய்யை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கு.

தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்னு ஒரு பாட்டுல சொல்லியிருக்காங்க, அதேமாதிரி பைபிலிலும் ஏழைக்கு நீ உதவுவதால் இறைவனுக்கே நீ கடன் கொடுப்பதற்கு தகுந்தவனாகிறாய், நீ செய்யும் தர்மம் உனக்கு 10 மடங்கு அதிகமாக் திருப்பி உனக்கு கிடைக்கும்னு சொல்லியிருக்காங்க, இந்த கல்வி உதவி செய்த இந்த மூணு பேருக்கு என்னோட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குனர் மணிரத்னத்கதுக்கு நெஞ்சுலி - மருத்துவமனையில் அனுமதி

பிரபல திரைப்படஇயக்குனர் மணிரத்னம் (59), இன்று அதிகாலை புதுடில்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில்,மணிரத்னத்திற்கு லேசான நெஞ்சுலி ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும், ஓய்வில் இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேல் தகவல்கள் தெரிவிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Tuesday, May 5, 2015

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வாட்டர் தெரபி

>>காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.

>>இந்த வாட்டர் தெரிபியின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது.

>>தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம். வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும்.

>>தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.

வாட்டர் தெரபியின் நன்மைகள்:

1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.
5. உடல் சூட்டைத் தணிக்கிறது.
6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.
7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், அது
>1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்,
>2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும்,
>7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்,
>4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்,
>3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும்,
>10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும்,
>மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.
>மேலும் தலைவலி, உடல்வலி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.. - See

‘உத்தம வில்லன்’ - சமரசமில்லாத கலைப்படைப்பு!

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி ஒரு சில பிரச்சனைகளையும் தாண்டி வெளியாகியிருக்கும் கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா?

கதைக்களம்

பிரபல நடிகர் மனோரஞ்சனுக்கு (கமல்ஹாசன்) மூளையில் கட்டி ஏற்படுவதால் மரணத்தின் விளிம்பில் நிற்கிறார். அதனால், தான் இறப்பதற்கு முன் ரசிகர்கள் எல்லோரும் சிரிக்கும்படி ஒரு காமெடி படத்தை தந்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதற்காக தனது குருநாதரான மார்கதர்சியிடம் (கே.பாலச்சந்தர்) ஒரு படத்தை இயக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறார். இது கமல்ஹாசனை பெரிய ஹீரோவாக்கிய பூர்ணசந்திர ராவுக்கும் (கே.விஸ்வநாத்) அவரது மகளும், கமல்ஹாசனின் மனைவியுமான வரலட்சுமிக்கும் (ஊர்சவசி) பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் கமலை விட்டுப் பிரிந்து செல்கின்றனர்! முதலில் படத்தை இயக்கி தர மறுக்கும் பாலசந்தர், தனது சிஷ்யன் மரணத்தை நெருங்கி கொண்டிருப்பதை அறிந்து படத்தை இயக்க சம்மதிக்கிறார். அந்த படத்திற்கு ‘உத்தம வில்லன்’ என்று பெயர் சூட்டப்படுகிறது. ‘உத்தம வில்லன்’ படம் எடுக்கப்பட்டதா? கமலின் கடைசி ஆசை நிறைவேறியதா? பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு பெரிய நடிகரின் வாழ்க்கையில் நடக்கும் சந்தோஷம், கோபம், சோகம், அன்பு, இழப்பு ஆகியவற்றை திரைக்கதையாக்கியிருக்கிறார் கமல்ஹாசன்! அதை ரமேஷ் அரவிந்த் திறம்பட இயக்கியிருக்கிறார். அதில் மனோரஞ்சன் என்ற நடிகருக்கும், அவர் கூட நடித்த யாமினி என்ற நடிகைக்குமான காதல், யாமினி கர்ப்பம் தரிப்பது, மனோரஞ்சனை பெரிய ஹீரோவாக்கிய பூர்ணசந்திர ராவ் அந்த காதலுக்கு வில்லனாக செயல்பட்டு தன் மகள் வரலட்சுமியை மனோரஞ்சனுக்கு திருமணம் செய்து வைப்பது என செல்கிறது படத்தின் முன் கதை! நிகழ்கால கதையில் யாமினிக்கு பிறந்த மகள் மனோன்மணி, ஊர்வசிக்கு பிறந்த மகன் மனோகரன், டாக்டர் ஆன்ட்ரியாவுடனான திரைமறைவு காதல், யாருக்கும் தெரியப்படுத்தாத மனோரஞ்சனின் மூளை கட்டி நோய், மனோரஞ்சனுக்கு அந்த நோய் இருப்பது அனைவருக்கும் தெரிய வரும்போது ஏற்படும் பரபரப்பு, எதிர்பாராத கிளைமேக்ஸ் என திரைக்கதை பயணிக்கிறது! ஆனாலும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் விறுவிறுப்பும், வேகமும் படத்தில் கொஞ்சம் குறைவே!

தமிழகத்தின் வில்லுப் பாட்டையும், கேரளத்தின் தெய்ய கலையையும் இணைத்து எடுக்கப்படும் ‘உத்தமவில்லன்’ படம் சம்பந்தமான காட்சிகள் ரொம்பவும் நீளம். இருந்தாலும் கமல்ஹாசனின் உச்சகட்ட நடிப்புக்காகவே உத்தம வில்லனை பார்க்கலாம்! படத்தின் கதையோட்டத்திற்கு ஜிப்ரானின் பின்னணி இசையும், ஷம்தத்தின் ஒளிப்பதிவும் பெரிய பலம் சேர்த்துள்ள அம்சங்கள்!

நடிகர்களின் பங்களிப்பு!

மனோரஞ்சன் என்ற நடிகராக கமல்ஹாசன் வாழ்ந்திருக்கிறார். யாமினிக்கு பிறந்த மகள் பார்வதி மேனனை முதன் முதலாக பார்க்கும் போதாகட்டும், மகனுடன் பந்து விளையாடிக் கொண்டே தனது மரணத்தை அவனுக்கு தெரியப்படுத்தும் போதாகட்டும் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறார் கமல்ஹாசன்! மனோரஞசனுடன் நடிக்கும் நடிகையாக வரும் பூஜா குமார், ஸ்வீட் ராஸ்கல் என்று திட்டிக்கொண்டே கமலிடத்தில் அன்பு காட்டும் இயக்குனர் கே.பாலசந்தர், பூர்ணசந்திரராவாக வரும் கே.விஸ்வநாத், கமலின் மனைவியாக வரும் ஊர்வசி, யாமினியின் கணவராக வரும் ஜெயராம், கமலின் மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், டாக்டராக வரும் ஆன்ட்ரியா, கமலின் மகளாக வரும் பார்வதி மேனன், ராஜா வேடத்தில் வரும் நாசர் என படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் அந்தந்த பாத்திரங்களாக வாழ்ந்துள்ளனர்.

பலம்

1. கமல் ஹாசன்
2. முதல் பாதி திரைக்கதையும், கேரக்டருடன் ஒன்றிய அனைவரின் சிறந்த நடிப்பும்!
3. பின்னணி இசை, ஒளிப்பதிவு, செட், மேக்அப்
4. பாடல் காட்சிகள்

பலவீனம்

1. கொஞ்சம் குழப்பமான இரண்டாம்பாதி திரைக்கதை
2. எடுபடாத சிற்சில காமெடிகள்

மொத்தத்தில்...

இதுபோன்ற படங்களை கமல்ஹாசனால் மட்டுமே தைரியமாக எடுக்க முடியும். வியாபார நோக்கத்தையும் தாண்டி நல்ல சினிமாவை கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் அதற்கு கைகொடுத்துள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஜனரஞ்சக ரசிகர்களுக்கு இப்படம் முழுத்திருப்தியைக் கொடுக்காவிட்டாலும் உலகநாயகன் ரசிகர்களுக்கு இப்படம் ஓர் உன்னத கலை படைப்பாகவே இருக்கும்!

புதிதாக திருமணம் ஆன ஆண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!

புதிதாக திருமணம் ஆன ஆண்கள் சில வகையான உணவு களை சில காலம் தவிர்த்து விடுவது நல்ல‍து. காரணம் கீழ்க்காணும் உணவுகளை அவர்கள் உட்கொள்ளும் பொருட் டு அவர்களின் பாலியல் உணர்வினை சிதைத்து வீரியத்தையும் குறைத்து விடும்.

ஒரு சராசரி மனிதனுக்கு தேவையான புரதம், கார்போ ஹை டிரேட், கொழுப்பு, வைட்ட மின்கள், தாதுப்பொருட்கள் செறி ந்த உணவுகளை

தேவையான கலோரிகளில் எடுத்துக்கொள்ளாவிட்டால், உடல் ஆரோக்கியத்துடன் பாலி யல் திறனும் சிதைந்துவிடும்.

சர்க்கரை, மதுபானங்கள், காப் பியில் உள்ள காஃபின் முதலியவை, ஊட்டச்சத்து உணவை, உடல் உட்கிரகிக்க விடாது. இதனால் ஆரோக்கியம் குறைந்து ஆண்மையும் குறையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேசமயம் அதீத காதல் உணர்வு களால் கஷ்டப்படுபவர்கள் இனிப்பு, சோயா நிறைந்த உணவு களால் இச்சையை ஒரளவாவது கட்டுப் படுத்திக் கொள்ளலாம். என்கின்றனர் நிபுணர்கள்.

சோயா பால்

பாலியல் ஆசையை கட்டுப்படுத்த உதவும் உணவுகளில் ஒன்று சோயாவிலிருந்து தயாரிக்க ப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநா கத்தை கிரகிப்பதை தடுக்கிறது. அதேபோல் வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. இந்த உணவுகள் தைராய்டு செயல்பாடு களை குறைக்கும்.

பெருஞ்சீரகம்

மட்டன், சிக்கன் போன்ற உணவுகளை உண்ட உடன் சிலர் பெருஞ்சீரகத்தில் செய்த மிட்டாய்களை சாப்பிடுவார்கள். இனிப்பு சோம்புவை அதிகம் சாப்பிடுவார்கள். இதுவும் பாலுணர்வு சக்தியை குறைக்கு மாம். ஆண்களின் டெஸ்டோ ஸ்ட்ரோன் அளவை குறைக்கு ம் சக்தி சோம்புக்கு உண்டு என் கின்றனர் நிபுணர்கள்.

கான்ஃப்ளேக்ஸ்

தினசரி கான்ஃப்ளேக்ஸ் சாப்பிட் டால் அது நேரடி பாதிப்பை ஏற் படுத்துமாம். இது ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் சுரப் பினை குறைத்து விடும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். கான் ஃப்ளேக்ஸ் உணவை அறிமுகப் படுத்திய கெல்லாக் இது ஆண் களின் பாலுணர்வு சக்தியை கு றைக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் இது சிறந்த டயட் உண வு என்றும் அதீத பாலியல் உண ர்வை கட்டுப்படு த்தக்கூடிய உணவு என்றும் அவர் கூறியு ள்ளார்.

ஆல்கஹால்

ஆல்கஹால் குடிப்பதால் போதைதான் அதிகமாகுமே தவிர பாலுணர்வு சக்தி குறைந்து விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ஆல்கஹால் குடிப்பதன் மூலம் ஏற்படும் பின் விளைவினால் அதிக தலைவலி, தலைசுத்தல், எரிச்சல் போன்றவைகளினால் காதல் உணர்வுகள் ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

கொத்தமல்லி, புதினா இலைகள் அதிகம் சேர்த்துக் கொள்வதால் டெஸ்ட்டோ ஸ்ட்ரன் அளவு கட்டுப்படுத் தப்படுகிறதாம். ஆனால் குறைந்த அளவு இவைகளை சேர்த்துக்கொள்வதால் எந்த தவறும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

கணவனை கடுப்பாக்கும் மனைவியின் பழக்கங்கள்

பெண்களின் சில குணாதிசயங்கள் ஆண்களை தாறுமாறாக கடுப்படிக்கும். எத்தனை முறை கூறினாலும் சில பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள
மாட்டார்கள் பெண்கள். ஆண்களை கடுப்படித்துக் கொண்டிருக்கும் பெண்களின் குணாதிசயங்கள் பார்க்கலாம்..

காலை பத்து மணியளவில் தொடங்கினால் இரவு முடிய டி.வி. சீரியலை பார்த்துக்கொண்டிருப்பது. டிவி சீரியலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கும், அவர்கள் உடல் நலத்திற்கு கொடுப்பதில்லை. இதனால், மன சோர்வும், மன அழுத்தமும், இரத்தக்கொதிப்பும் அதிகரித்தது தான் மிச்சம். பெரும்பாலான ஆண்கள் பெண்கள் மீது கடுப்பாவதற்க்கு டி.வி சீரியல் தான் காரணம்.

தினமும் ஒரே சமையல் செய்து ஆண்களின் வயிறைக் கொலை செய்வது பெண்களின் குலவழக்கம். அதிலும் குறிப்பாக டிவியில் வரும் சமையலை பார்த்து புதுசு புதுசாக செய்வதாக நினைத்துகொண்டு தினமும் வித்தியாசமாக செய்து கணவரை கடுப்படிப்பது பெண்களுக்கு கைவந்த கலை.

ஆண்கள் நண்பர்களிடம் பேசும் போதோ, அல்லது அலுவலக அதிகாரிகளுடன் முக்கியமான விஷயங்கள் பேசி முடித்த பின்னர். அது என்ன, அது என்ன என ஆண்களை நச்சரிப்பார்கள். பெண்கள் அடிக்கடி நச்சரிப்பது ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காத வழக்கம்.

துணித் துவைகிறோம் என்ற பெயரில் கணவருக்கு பிடித்த ஆடைகளில் பெண்கள் சாயம் பிடிக்க வைப்பது. அதுவும் சரியாக, ஆண்களுக்கு பிடித்தமான ஆடைகளில் சாயம் பிடிக்க வைப்பது பெண்களுக்கு பிடித்த பழக்கம். ஆண்கள் இதனால் பல சமயங்களில் நொந்துப் போவார்கள்.

வாரம் ஏழு நாட்களும் விரதம் இருக்க பெண்களினால் மட்டும் தான் முடியும். இதனால் உடல்நல கோளாறுகள் வரும் என்று கூறினால் கேட்கமாட்டார்கள். அதிலும், புரட்டாசி, மார்கழி போன்ற மாதங்களில் சொல்லவே வேண்டாம். பெண்களின் இந்த பழக்கவழக்கங்கள் அவர்களின் உடல்நலத்தை பதிக்கிறது என்பதால் தான் ஆண்கள் கடுப்பாகின்றனர்.