Monday, May 4, 2015

கார்ப்பரேட் நிறுவனத்தின் கடனை அடைக்க படாதபாடுபடும் சூப்பர் ஸ்டார்.... காரணம் இதுதானா...?

கத்தி படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கப்போகிறார் என்றும் அந்தப்படம்தான் விரைவில் தொடங்கப்படவிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது.

அதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதலில் வெளிவரும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க அதற்கு முந்திக்கொண்டு  ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் செய்தி வெளிவந்துவிட்டது. அப்படியானால் அந்தப்படம்? அதுவும் இருக்கிறதாம்.

ஒருபடம் முடித்துவிட்டுச் சில வருடங்கள் கழித்து அடுத்தபடத்தைப் பற்றி யோசிக்கும் ரஜினி ஒரே நேரத்தில் இரண்டுபடங்களை ஒப்புக்கொண்டிருப்பது எப்படி? என்கிற பெரிய கேள்வி மக்கள் மத்தியில் மட்டுமல்ல திரையுலகினர் மத்தியிலேயே வந்திருக்கிறது.

அதற்கும் விடை இருக்கிறதாம். ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ரஜினி பெரும்தொகையொன்றை இந்த மாதத்துக்குள் கொடுக்கவேண்டியிருக்கிறதாம். அதற்காகத்தான் இரண்டு படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறாராம். ஒப்புக்கொண்டதையடுத்து அதில் கிடைக்கும் அட்வான்ஸை வைத்து அந்தக்கடனை அடைக்கவிருக்கிறாராம். அவர் ஒரேநேரத்தில் இரண்டுபடங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதன் ரகசியம் இதுதான் என்று திரையுலகில் பேச்சு.

No comments:

Post a Comment