ரீ-என்ட்ரியில் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ள 49ஓ படம் இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனால் அதையடுத்து அவர் ஒரு கேரக்டரில் நடித்துள்ள வாய்மை படம் விரைவில் திரைக்கு வருகிறது. மேலும், 49ஒ படத்தில் விவசாயி வேடத்தில் வேஷ்டி அணிந்து கிராமவாசியாக நடித்துள்ள கவுண்டமணி, வாய்மை படத்தில் கோட்சூட் அணிந்து டிப்டாப்பாக நடித்திருக்கிறார். இதே படத்தில் பல சீனியர் நடிகர்கள் இருந்தபோதும், கவுண்டமணி அவர்களை விட முக்கியமான ரோலில் நடித்துள்ளாராம்.
அதனால், படத்தின் டீசரிலும் அவர் சம்பந்தப்பட்ட ஷாட்களை இணைத்திருப்பவர்கள், சில தியேட்டர்களில் வாய்மை படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார்களாம். அதில் கவுண்டமணி தோன்றி ஐ எம் பேக் -என்று ஒரு டயலாக் மட்டுமே பேசுகிறாராம். அதைக்கேட்டு தியேட்டர்களில் இருக்கும் ரசிகர்கள் கைதட்டி பெரிய ஆரவாரம் செய்கிறார்களாம். இந்த சேதி கவுண்டமணியின் காதுக்கு சென்றதை அடுத்து, நமக்கான ரசிகர்கள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறார்கள் என்று உற்சாகத்தில் உள்ளாராம்.

No comments:
Post a Comment