கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்ட ஒரு மெகா ஸ்டாரின் நிஜ வாழ்க்கையில் நடக்கும் சந்தோஷம், கோபம், நெகிழ்ச்சி, தியாகம், இழப்பு, அன்பு என எல்லா உணர்ச்சிகளையும் திரைக்கதையாக்கி தந்திருக்கிறார் கமல்ஹாசன்.
மிகப்பெரிய நடிகனான மனோரஞ்சனுக்கு (கமல்ஹாசன்) அடிக்கடி தலைவலி வருகிறது. அடிக்கடி தலைவலி வருவது சரியில்லையே என்று தலையை ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறார் அவரது குடும்ப டாக்டரான அர்பணா (ஆண்ட்ரியா). அவருக்கு கள்ளக்காதலியும் கூட.
மூளையில் கட்டி. மரணம் நிச்சயம் என்கிற அதிர்ச்சி செய்தி மனோரஞ்சனுக்கு தெரிய வருகிறது.
தான் இறப்பதற்குள் தன் குருநாதரான மார்கதர்சியை(கே.பாலச்சந்தர்) வைத்து ரசிகர்கள் எல்லோரும் சிரிக்கும்படி ஒரு காமெடி படத்தை தந்து விட ஆசைப்படுகிறார்.
இந்த தகவலை தன்னை இந்த பெரிய ஹீரோ லெவலுக்கு கொண்டு வந்த தன் மாமனார் பூர்ணசந்தரராவிடம் (கே.விஸ்வநாத்), அவரது மகளும், கமலின் மனைவியுமான வரலட்சுமி (ஊர்வசி) மறைக்கிறார்.
இதனால் கோபப்படும் அவர்கள் கமலின் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். கமலின் குருநாதர் கே.பாலச்சந்தர் முதலில் இயக்க மறுத்தாலும் கமலுக்கு கேன்சர் என்கிற செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்து அவர் ஆசைப்படி ஒரு படத்தை இயக்க சம்மதிக்கிறார்.
அப்புறம் என்ன கமல் கடைசி ஆசை நிறைவேறியதா? பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா இல்லையா? என்பதே கண்களை குளமாக்கும் நெகிழ வைக்கும் காட்சிகளோடு முடியும் கிளைமாக்ஸ்.
தான் எப்போதுமே ‘உலக நாயகன்’ தான் என்பதை ஒவ்வொரு படத்திலும் ஒருபடி மேலே போய் நிரூபித்து வருகிறார் கமல். எத்தனை விதமான காட்சிகள், அதற்கேற்றாற்போல் எத்தனை விதமான முகபாவங்கள்? அப்பப்பா இதெல்லாம் கமல்ஹாசன் என்கிற ஒரே ஒரு ஆளுமையால் மட்டுமே திரையில் காட்ட முடியும்.
மானனாரின் மிரட்டலுக்காக தன் முன்னாள் காதலியை பிரிந்த வேதனையையும், அவளுக்கு பிறந்த தன் மகள் பார்வதியை சந்திக்கும் போது கலங்குவதும் என்ன ஒரு உணர்ச்சிமிக்க காட்சிகள்.
”நான் கண்டிப்பா உன்னை கொலை செய்வேன்” என்று கோபத்தோடு போகிற மாமனாரையே பின்னர் காலில் விழ வைக்கும் போதும், எப்போதுமே விளையாட்டாக இருக்கும் மகனிடம் தனக்கு வந்த நோயைப் பற்றி சொல்லும் போதும் அதைக்கேட்டு மகன் கமலை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுவதுமான காட்சிகளில் எப்பேர்ப்பட்ட ரசிகனும் கண்கலங்கிப் போவான். இப்படி படம் முழுக்க கமலின் நடிப்புக்கு வலு சேர்க்கும் காட்சிகள் அதிகம்.
படத்தில் ஹீரோயின் என்று யாருமில்லை. பூஜாகுமார், ஆண்ட்ரியா இருவருமே ஒவ்வொரு கேரக்டராக வருகிறார்கள். பூஜாகுமார் ஒரு நடிகையாக வருவதால் அவருக்கு மட்டும் ஓப்பனிங் டூயட் பாடல் உண்டு. இரண்டாம் பாகத்தில் கே.பாலச்சந்தர் எடுக்கும் உத்தம வில்லன் படத்தில் பூஜா குமார் நடிப்புக்கு செம தீனி. அவரும் சளைக்காமல் நடித்திருக்கிறார். ஆண்ட்ரியா கமலின் குடும்ப டாக்டராக வருகிறார். பூஜாகுமாரை கம்பேர் செய்யும் போது ஆண்ட்ரியாவுக்கான காட்சிகள் குறைவு தான்.
மார்கதர்சி என்ற இயக்குனர் கேரக்டரில் வருகிறார் மறைந்த இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர். நிஜத்தில் அவர் எப்படி கோபம் கலந்த கண்டிப்புடன் பேசுவாரோ அதை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். அவரும், கமலும் வரும் எல்லாக் காட்சிகளுமே ரகளையான ரசனை தான். தன் குருநாதர் என்கிற மரியாதையை அவர் சம்ந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியிலும் வெளிக்காட்டிய விதம் தான் ஒரு நல்ல சிஷ்யன் என்பதற்கு சான்று. இப்படத்தின் மூலம் கே.பி சாருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் கமல். அதோடு அவருடைய கடைசி படமாகவும் ‘உத்தம வில்லன்’ அமைந்தது கமல் செய்த பாக்கியம்.
கமலின் மாமனாராக வரும் கே.விஸ்வநாத், முன்னாள் காதலியின் கணவராக வரும் ஜெயராம், கமலின் மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் என மற்ற நடிகர்களும் தங்கள் கேரக்டர்களுக்கு சிறப்பான நடிப்பைக் கொடுத்து கைதட்டல்களை அள்ளுகிறார்கள். குறிப்பாக மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த குணச்சித்திர நடிகராக மிளிர்கிறார்.
கமலை வைத்து கே.பாலச்சந்தர் படத்துக்குள் எடுக்கும் படமான ‘உத்தம வில்லன்’ படத்தில் நாசர், முனைவர் கு.ஞானசம்பந்தம், சண்முகராஜன், வையாபுரி, அஜய்ரத்னம் என மற்ற நடிகர்கள் காமெடியுடன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த காட்சிகளில் வரும் புலி, எலி காட்சிகளை குழந்தைகள் விரும்பி ரசிப்பார்கள்.
மிகப்பிரம்மாண்டமான அரங்குகளில் ஆர்ட் டைரக்டர்கள் லால்குடி என்.இளையராஜா, மோகன் இருவரின் உழைப்பு வீண்போகவில்லை. கலர்புல்லான, இரண்டு டோன்களில் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷாம்தாத்.
ஜிப்ரானின் இசையில் அப்படி ஒரு முதிர்ச்சி. பாடல்கள் செவிகளை சேதப்படுத்தவில்லை. பின்னணி இசையில் நெகிழ வைக்கும் காட்சிகளில் தன்னையும் மறந்து ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரும்.
எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், அதில் தனக்கே உரிய நக்கல், நையாண்டி, காமெடியான வசனங்களோடு திரைக்கதையை அமைத்திருக்கிறார் கமல்ஹாசன். ஒரு மிகப்பெரிய நடிகனின் நிஜ வாழ்க்கை எத்தனை வலிகளும், வேதனைகளும் நிறைந்தது என்பதை நெகிழ்வாக தந்திருக்கிறார்.
கமலின் திரைக்கதைக்கு எந்த சேதாரமும் ஏற்படாத வண்ணன் மிக நேர்த்தியாக இயக்கி தந்திருக்கிறார் ரமேஷ் அரவிந்த்.
வெட்டு, குத்து, ரத்தம், வன்முறை, காதல், பேய் சீசன் என ஒரே மாதிரியான படங்களுக்கு மத்தியில் முதல் முறையாக எல்லா மனித மனங்களையும் அசைத்துப் பார்க்கும் விதமாக உணர்ச்சிகரமான திரைக்கதையுடன் கூடிய படத்தை தந்து ரசிகர்கள் மனதில் மீண்டும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்.

No comments:
Post a Comment