Sunday, May 10, 2015

அஜித், சூப்பர் ஸ்டார் என அனைவராலும் போற்றப்பட்ட அன்னையர்கள் தின சிறப்பு

உலகில் அன்பு என்ற ஒரு சொல் இல்லையென்றால் நம் வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லுமா? என்பதே கேள்விக்குறி தான், அந்த வகையில் இந்த அன்பின் முழு உருவமாய் இருப்பது நம் எல்லோருடைய தாய் தான் என்றாக் மிகையாகாது.

நண்பர்கள், உறவினர்கள், மனைவி, காதலி என எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டும் நாம், நம் அம்மாவிடம் மட்டும் தான் நம் கோபத்தை எப்போதும் காட்டுவோம்.

ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், நாம் அர்னால்ட் மாதிரி இருந்தாலும் நம் அம்மாவின் கண்ணீற்கு ஐ பட விக்ரம் போல் தான் தெரிவோம், அஜித் கலரில் போய் நின்றாலும், அவர்கள் கண்களுக்கு பரதேசி அத்ர்வா போல் தான் தெரிவோம்.

எப்போதும் நம் நல்லதை மட்டும் கண்காணித்து வரும் இவர்களின் பெருமைய திரையில் காட்டிய சில படங்களின் தொகுப்பு தான் இந்த பகுதி.

மன்னன்

எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிக தாய் குலங்கள் ரசிகராக இருப்பது சூப்பர் ஸ்டாருக்கு தான். ஏனெனில் தன் ஒவ்வொரு படங்களிலும் தாய்மை பெருமை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க படம் மன்னன். இப்படத்தில் கை, கால் சரியில்லாத தாயை தன் மடியில் வைத்து பார்த்து கொள்வார். இன்றும் இல்லை என்றுமே இப்படத்தில் இடம்பெற்ற ‘அம்மா என்று அழைக்காத உயிரில்லையே’ என்ற பாடலை யாரும் மறக்க மாட்டார்கள்.

வரலாறு

அஜித் படங்கள் என்றாலே பெரும்பாலும் சண்டை, மாஸ் என தான் எதிர்ப்பார்ப்பார்கள், இதில் வரலாறு படம் என்றுமே அவருக்கு ஸ்பெஷல் தான். முதன் முதலாக மூன்று வேடங்களில் நடித்த இவர், இதில் ஒரு வேடத்தில் தன் அம்மாவின் மீது சைக்கோ தனமான அன்பு வைத்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தன் அம்மாவின் நிலைமைக்கு தன் அப்பா தான் காரணம் என்று சொந்த அப்பாவையே கொலை செய்ய துணிவார். அந்த அளவிற்கு தன் அம்மாவின் மீது அன்பு கொண்டவர்.

எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

ஜெயம் ரவி- ஜெயம் ராஜா வெற்றி கூட்டணி உருவாக்கிய இரண்டாவது படம் தான் எம்.குமரன். நீண்ட இடைவேளைக்கு பிறகு நதியா அம்மாவாக இப்படத்தில் களம் கண்டார்.

இதில் இந்த கால அம்மாவாக புது ட்ரண்டிற்கு ஏற்றார் போல் நடித்து கலக்கியிருப்பார் நதியா. இப்படத்தில் இடம்பெற்ற நீயே நீயே பாடல் பல பாசமுள்ள மகன்களின் ரிங்டோன்.

தளபதி

ரஜினியின் சினிமா பயணத்தில் யாராலும் மறக்க முடியாத படம் தளபதி, இதில் தன் தாய் தன்னை வேண்டாம் என்று கூறி தூக்கி எறிந்து விட்டால் என்று தவறாக கணித்து ரவுடியாக வலம் வருவார்.

ஒரு கட்டத்தில் தன் தாய் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் தன்னை தூக்கி எறிந்துள்ளார், என புரிந்து கொண்ட அவர் அழும் காட்சி ரஜினியின் நடிப்பில் ஒரு மைல் கல் தான்.

தென்மேற்கு பருவகாற்று

தற்போது தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றாலே கண்களை மூடிக்கொண்டு சரண்யா பொண்வண்ணனை கமிட் செய்யுங்கள் என்று கூறி விடலாம். அந்த அளவிற்கு அஜித், சூர்யா, உதயநிதி, ஜெயம் ரவி, ஜீவா, விஜய் சேதுபதி, தனுஷ் என அனைத்து நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து விட்டார்.

இதில் தென்மேற்கு பருவகாற்று படத்தில் தன் மகனுக்காக தன் உயிரையே கொடுத்து அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தார். இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இதேபோல் பல படங்களில் தாய் குலங்களின் பெருமையை தமிழ் சினிமா பேசியுள்ளது. நம்மை இத்தனை ஆண்டு கஷ்டப்பட்டு ஆளாக்கிய நம் தாயை அவர்கள் கடைசி காலத்தில் முதியோர் இல்லத்திற்கு தள்ளாமல், நம் இல்லத்தில் ஒருவராக அன்பாக பார்த்து கொண்டாலே போதும், நம் வாழ்வின் பிறவிப்பலனை அடைந்து விடலாம். அனைவருக்கும் அன்னைய்ர் தின வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment