Tuesday, May 5, 2015

ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு மருமகனால் ஏற்பட்ட கடனை அடைக்கப்போகும் சூப்பர்ஸ்டார்..!

அண்மையில் தமிழ்சினிமாக்காரர்கள் மொத்தப்பேரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் விசயம், ஆஸ்கர்பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் சொத்துகளை வங்கி எடுத்துக்கொண்டதுதான். அவருடைய தயாரிப்பில் அண்மையில் வெளியான ஐ படத்தில்கூட அவருக்கு இலாபம்தான் அப்படியிருக்கும்போது எப்படி இவ்வளவு சிக்கலில் மாட்டினார் என்று எல்லோருக்கும் கேள்வி இருக்கிறது.

அவருடைய சறுக்கல் ஒருநாளில் நடத்தல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே நடந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். அவருடைய தயாரிப்பில் உருவான அந்நியன், தசாவதாரம், ஐ போன்ற பெரிய படங்கள் வெற்றி என்றாலும் மற்ற படங்களில் அவருக்கு நட்டமே எற்பட்டது என்று சொல்லப்படுகிறது.

தசாவதாரம் படத்தைத் தொடர்ந்து வெளியான வாரணம்ஆயிரம், ஆனந்ததாண்டவம், வேலாயுதம், மரியான், வல்லினம், திருமணம்எனும்நிக்கா ஆகிய எல்லாப்படங்களுமே தோல்வியடைந்தன என்று சொல்கிறார்கள். குறிப்பாக விஜய்யின் வேலாயுதம் தனுஷின் மரியான் ஆகிய படங்களில் பெரியஅளவில் அவர் நட்டத்தைச் சந்தித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அந்தப்படங்களுக்காக வாங்கிய கடன் மற்றும் வட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து அவருக்குக் கடும்நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் ஜெயம்ரவி நடித்த பூலோகம், கமலின் விஸ்வரூபம்2 ஆகிய படங்களிலும் பல கோடிகள் முடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இவை எல்லாம் ஒன்றுசேர்ந்துதான் அவரை இந்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது என்று சொல்லப்படுகிற அதேநேரம், அவர் எல்லாவற்றையும் ஒன்றுக்குப் பலமுறை கணக்குப்போட்டுத்தான் செய்வார், இப்போதும்கூட வங்கி எடுத்துக்கொண்ட சொத்து விசயத்திலும் அவருக்கு ஒரு கணக்கு இருக்கும் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். 

No comments:

Post a Comment