Sunday, May 3, 2015

வை ராஜா வை – எந்த உப்பு சப்பில்லாமல் படத்தை எடுத்திருக்கிறார்.

21 என்ற ஆங்கிலப்படத்திலிருந்து திருடப்பட்ட கதை.

திருடியதை மறைக்க ஒரிஜினல் கதையில் ‘அய்யர் தி கிரேட்‘ மலையாளப் படத்தையும், அதிலிருந்து திருடப்பட்டட ‘அழகிய தமிழ்மகன்’ படத்தையும் அள்ளிப்போட்டு கலக்கி இருக்கிறார்கள்.

சாம்பாரில் சிக்கன் பீசைப் போட்டதுபோல் 21 படத்திலிருந்து சுட்ட காட்சிகள் தனியாகத் தெரிகின்றன.

அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே அறியும் இ.எஸ்.பி. என்கிற எக்ஸ்ட்ரா சுப்ரீம் பவர் என்கிற அபூர்வ சக்தி கௌதம் கார்த்திக்குக்கு இருப்பதை தெரிந்து கொள்ளும் விவேக், அவரை வைத்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்.

கௌம் கார்த்திக்கின் அபூர்வ சக்தியினால் ஒரே மேட்ச்சில் ஒரு கோடியை ஜெயிக்கின்றனர்.

சூதாட்டத்தில் ஜெயித்த பணத்தை வைத்து ஜாலியாக இருக்க கோவா செல்கின்றனர்.

சூதாட்டம் நடத்தும் டேனியல் பாலாஜிக்கும் கௌதம் கார்த்திக்கின் பவர் தெரிய வருகிறது.

கௌதம் கார்த்திக்கை வைத்து, கோவாவில் நடுக்கடலில் கப்பலில் நடக்கும் கேசினோவில் பல கோடி சம்பாதிக்க திட்டமிடுகிறார் டேனியல் பாலாஜி.

கௌதம் கார்த்திக் மறுக்க…

எல்லா ஆங்கிலப்படங்களையும்போல் காதலியை கடத்தி வைத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்கிறார்.

டேனியல் பாலாஜியின் திட்டம் பலித்ததா?

அவரிடமிருந்து கௌதம் கார்த்திக் தப்பித்தாரா இல்லையா? என்பது பாக்கி கதை.

3 என்ற முதல் படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷுக்கு இரண்டாவது படத்திலேயே சரக்கு தீர்ந்துபோனதில் ஆச்சர்யமில்லை.

டிவிடியைப் பார்த்து கதையை சுட்டவர், திரைக்கதைக்காகவும் வேறு டிவிடியைப் பார்த்திருக்கலாம்.

விறுவிறுப்பு… பரபரப்பு…சுறுசுறுப்பு… என எந்த உப்பும் இல்லாமல் உப்பு சப்பில்லாமல் வை ராஜா வை படத்தை எடுத்திருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் அபூர்வ சக்தி நிஜத்திலும் கௌதம் கார்க்கிக்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அல்லது ரசிகர்களுக்காவது.

No comments:

Post a Comment