Saturday, May 9, 2015

ரஞ்சித்தும் தன் கடனை அடைக்கத்தான் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குகிறார்..!

இயக்குநர் ரஞ்சித், ரஜினி படத்தை இயக்கப்போகிறார் என்பது திரையுலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டது. அவருக்கு அந்தப்படம் கிடைத்தது எப்படி? என்பது பற்றி இப்போது பேசப்பட்டுக்கொண்டிருக்கும் செய்தி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.

சௌந்தர்யா தான் ரஞ்சித்தை ரஜினியிடம் ரஞ்சித்தை அழைத்துப்போனார், அவர் ஏன் அழைத்துப்போனார் என்பதில்தான் சுவாரசியம் இருக்கிறது. கோவா படத்தில் வெங்கட்பிரபுவின் உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தாராம் ரஞ்சித். அப்போது அவசரத் தேவைக்காக சௌந்தர்யாவிடம் சில லட்சங்கள் கடன் வாங்கியிருந்திருக்கிறார் ரஞ்சித். அந்தக்கடனைத் திருப்பிக்கொடுப்பதில் காலதாமதம் செய்து கொண்டிருந்தாராம்.

அதனால் அடிக்கடி சௌந்தர்யாவிடம் பேசி கடனை விரைவில் தந்துவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டிருப்பாராம். அந்தக் காலகட்டத்தில், புதிதாக உருவாக்கிக்கொண்டிருக்கும் கதைகளைப் பற்றியும் சௌந்தர்யாவிடம் சொல்வாராம் ரஞ்சித். அதனால் ரஞ்சித்திடம் இருக்கும் கதைகள் பற்றி சௌந்தர்யாவுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. அதில் ஒரு கதை அப்பாவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பது அவர் கணிப்பு.

இந்நிலையில் மெட்ராஸ் படத்தைப் பார்த்ததும் மிகவும் பிடித்துப்போய் ரஞ்சித்தை அழைத்துப் பாராட்டியிருக்கிறார் ரஜினி. அதன்பின்னர் ரஞ்சித்திடம் இருக்கும் கதைபற்றி  சொல்லி ரஜினியைக் கதைகேட்க வைத்திருக்கிறார் சௌந்தர்யா. ஆக அவசரத் தேவைக்காக வாங்கிய கடனே ரஞ்சித்துக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment