சிம்புவின் நிலைமை அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். சுமார் 2 வருடங்களாக ஒரு படம் கூட வெளிவரவில்லை. தனது நண்பர்களின் படத்தில் கெஸ்ட் ரோலில் தலை காட்டி வந்தார்.நேற்று சந்தானம் நடித்த ’இனிமே இப்படித்தான்’ படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டு பேசிய சிம்பு, ’2 வருஷமா படமே நடிக்கல, எனக்கு துணையா இருந்த காதலியும் என்னை விட்டுட்டு போய்ட்டா. படம், பணம், காதலி என்று அனைத்தையும் இழந்து தனியா இருந்தேன்.
அப்போது என் தந்தைக்கு அஜித் ஃபோன் செய்து கவலைபடாதீங்க உங்க பையன் நிச்சயம் ஒரு பெரிய நிலைக்கு வருவான் என்று ஆறுதல் சொன்னார்.’ என்று கூறினார்.
அதே சமயத்தில் தான், சிம்பு கௌதம் மேனன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அஜித் தன்னை இயக்க அழைக்கவும், கௌதம் மேனனும் உடனே சென்று விட்டார். இதனால், சிம்பு படம் பாதியிலேயே நின்று போனது.
அவர் அதில் நடித்திருந்தால், சென்ற வருட இறுதியிலேயே அந்த படம் வெளியாகியிருக்கும். தற்போது அந்த படத்தில் நடித்த ஹீரோயின் என்னுடைய கால்ஷீட்டை வீணாக்கி விட்டீர்கள் என்று கூறி படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். என்பதெல்லாம் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment