விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக அறிமுகமான படம் சகாப்தம். இந்த படத்தில் விஜயகாந்தும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதோடு, நேகா, சுப்ரதா அய்யப்பா, ஜெகன் உள்பட மேலும் பலரும் நடித்திருந்தனர். கார்த்திக்ராஜா இசையமைக்க, சுரேந்திரன் இயக்கியிருந்தார்.
சண்முகப்பாண்டியனின் முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருந்தது. அதோடு, மகனின் முதல் படத்தை வெற்றிப்படமாக்கி விட வேண்டும் என்று ஆடியோ விழாவையே பிரமாண்டமாக நடத்தினார் விஜயகாந்த். அப்போது, தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் வாரிசு நடிகர்களும் நேரில் சென்று சண்முகப்பாண்டியனை வாழ்த்தினர். இருப்பினும் சகாப்தம் படம் வெற்றி பெறவில்லை. இதனால் அப்பட வட்டாரம் பெரிய அதிர்ச்சியடைந்தது.
இந்நிலையில், தற்போது சண்முகப்பாண்டியனின் அடுத்த படம் குறித்து அறிய மீடியாக்கள் அவரை பேட்டி காண முயற்சித்து வருகின்றன. ஆனால், அதுசம்பந்தமாக தொடர்பு கொண்டால், இப்போது எந்த மீடியாவையும் சண்முகப்பாண்டியன் சந்திக்கும் நிலையில் இல்லை. அடுத்த படம் பற்றி முடிவெடுக்கும் போது தான் மீடியாக்களை சந்திப்பார் என்கிறார்கள். சரி அடுத்த படம் எப்போது தொடங்கப்படுகிறது? என்று கேட்டால், அது இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கட் பண்ணி விடுகிறார்கள்.

No comments:
Post a Comment