Saturday, May 9, 2015

அவுங்க ரெண்டுபேருக்கும் போட்டி...நடுவுல மக்கள் பலிகடா..?

தனுஷ்-சிவகார்த்திகேயன் நீண்ட நாட்களாக நாங்கள் நல்ல நண்பர்கள் என்று கூறி வருகின்றார்கள். ஆனால், இவர்களுக்குள் முன்பு போல் சுமுகமான உறவு இல்லை என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு காரணம் காக்கி சட்டை படத்தில் சிவகார்த்திகேயன் செய்த சேட்டை என்றும் சிவகார்த்திகேயன் வளர்ச்சி தனுஷிற்கு பிடிக்கவில்லை என்றும் பல விதமாக வதந்திகள் பரவி வந்தது.

தற்போது தனுஷ், காஜல் அகர்வால் நடித்த “மாரி”, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த “ரஜினி முருகன்” ஆகிய படங்கள் ஒரே நாளில் (ஜுன் 17) ரிலிஸாகவுள்ளது. இரண்டும் பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் கண்டிப்பாக ஏதாவது ஒரு படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதே உண்மை. தனுஷ் தன் பலத்தை காட்ட தான் இந்த முடிவை எடுத்துள்ளார் என சிலர் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment