தமிழ் சினிமாவில் உதவி இயக்குநர்களின் வாழ்க்கை இன்றும் மிக மோசமாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் போக்கும் விதமாக இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் இணைந்து பலரிடம் நிதியை திரட்டி அதை உதவி இயக்குநர்களின் எதிர்கால வாழ்க்கைக்காக திட்டம்போட்டு பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்கள். இதில் தற்போது உதவி இயக்குநர்களின் பிள்ளைகளின் கல்வி செலவுக்கான திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்கள்.இந்த திட்டத்துக்கு பெரும் உதவி புரிந்த திரு.ஏ.சி.சண்முகம், ஜெகத்ரட்சகன், கே.கணேஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக சென்னை கமலா திரையரங்கில் இன்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இயக்குநர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
இதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், நான் இயக்குநர் சங்க தலைவராக இருக்கும்போது என்னால இந்த மாதிரி நல்ல திட்டங்களை செய்ய முடியலைன்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு, ஆனால் விக்ரமன் தலைமையில் இதெல்லாம் சாத்தியமாகியிருக்குன்னு நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கு.
என் மகன் விஜய்க்கு அழகும் இல்ல, திறமையும் இல்ல ஆனா இப்ப சினிமாவுல பெரிய ஸ்டாராக இருக்குறது அவன் செய்த நல்ல விஷயங்களால்தான், சுமார் 3 வருஷத்துக்கு முன்னாடி ராயப்பேட்டை மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போடும்போது அங்கிருந்த ஒரு பெண் என்னிடம் ”எனக்கு கல்யாணமாகி 5 வருஷமாகுது இதுவரைக்கு ஒரு பொட்டு தங்கம்கூட எனக்குன்னு இல்ல” ஆனா இப்ப உங்க பையனால அது என் குழந்தைக்கு அது நிறைவேறியிக்குன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்குன்னு சொன்னங்க, இந்த மாதிரி தர்மம்தான் என் மகன் விஜய்யை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கு.
தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்னு ஒரு பாட்டுல சொல்லியிருக்காங்க, அதேமாதிரி பைபிலிலும் ஏழைக்கு நீ உதவுவதால் இறைவனுக்கே நீ கடன் கொடுப்பதற்கு தகுந்தவனாகிறாய், நீ செய்யும் தர்மம் உனக்கு 10 மடங்கு அதிகமாக் திருப்பி உனக்கு கிடைக்கும்னு சொல்லியிருக்காங்க, இந்த கல்வி உதவி செய்த இந்த மூணு பேருக்கு என்னோட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment