Thursday, May 7, 2015

எப்படித் தெரிந்தது? - சூப்பர் ஸ்டார் டென்ஷன்!

அட்டக்ததி மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போகிறார் என்கிற செய்தி காட்டுத் தீயாய்ப் பரவிவிட்டது. இதனால் கடும் டென்ஷனாகிவிட்டாராம் ரஜினி.

திரைக்கதையை முழுமையாக முடித்துவிட்டு படப்பிடிப்புக்குக் கிளம்புகிற நேரத்தில் அறிவித்திருக்கலாம் அதற்குள் எப்படி வெளியில் தெரிந்தது? என்று கேட்டுக் கோபப்பட்டதாகத் தெரிகிறது. இப்போது எந்தச் செய்தியையும் மறைத்து வைக்க முடியாது உங்கள் சம்பந்தப்பட்ட செய்தி என்றால் கேட்கவும் வேண்டுமா? என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தியிருக்கிறார்களாம். இருந்தாலும் இயக்குநர் ரஞ்சித் உட்பட அந்தப்படம் சம்பந்தப்பட்ட எல்லோரும் பயத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் கூட, பேசிக்கொண்டிருக்கிறோம் இன்னும் உறுதியாகவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறாராம் இயக்குநர். ஆனால் இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் தாணு மிகவும் உற்சாகமாக இந்தப்படத்தின் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment