Tuesday, May 5, 2015

இவரா ரஜினியை இயக்குகிறார்..!!! வாயை பிளக்கும் கோடம்பாக்கம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்று பாடியதில் இருந்து இன்று வரை ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினி. சிங்கத்துக்கு வயசானலும் அதோட கர்ஜனையை கேட்க கோடம்பாக்கமே காத்துக்கொண்டு தான் இருக்கிறது.

அப்படிப்பட்ட நிலைமையில் தான் எந்திரன் பார்ட் – 2 தயாராகவுள்ளது, ஷங்கர் இயக்குகிறார், லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்று தகவல் பரவியது. அடுத்த சில தினங்களில் கோடம்பாக்கமே வாயை பிளக்கும் அளவிற்கு ஒரு செய்தி வெளியானது.

அது தான் அட்டக்கத்தி, மெட்ராஸ் என இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் சூப்பர் ஸ்டார் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் என்றும், அதை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைபுலி எஸ்.தாணு தயாரிக்கிறார் என்று உறுதியானது.

இந்த செய்தியை கேட்டதும் பல முன்னாள் இயக்குனர்களே வாயை பிளந்துள்ளனர், பின்ன இருக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்கினால் அந்த இயக்குனருக்கும் கிடைக்கும் மரியாதை என்ன..?? வரவேற்ப்பு என்ன..??

நீங்க கலக்குங்க ரஞ்சித் சார்…

No comments:

Post a Comment