Monday, May 4, 2015

PRIDE OF TAMIL CINEMA: 1931 to 2013 - கோ.தனஞ்செயன்.. தேசியவிருது கொடுக்கும் அளவுக்கு அப்படியென்னயிருக்கு...?

கோ.தனஞ்செயன் எழுதிய PRIDE OF TAMIL CINEMA: 1931 to 2013 என்ற ஆங்கில புத்தகத்திற்கு, சினிமா எழுத்திற்கான சிறந்த புத்தக (சிறப்பு பரிசு) விருது இந்திய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியால் தனஞ்செயனுக்கு வழங்கப்பட்டது.

தமிழ்சினிமாவை பெருமைப்படுத்திய திரைப்படங்கள்: 1931 முதல் 2013 வரை என்ற தலைப்பிட்ட இந்த புத்தகம் தேசியவிருது பெற்ற தமிழ்படங்கள் பற்றியும், இந்தியன் பனோரமா விழாவில் திரையிடப்பட்ட தமிழ் படங்கள் பற்றியும் ஆராய்ந்து, பல அரிய புகைப்படங்களுடன் 614 பக்கங்களில் விரிவாக எழுதப்பட்ட புத்தகம்.

வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடிப்படையில் நமது நாட்டின் கலாசார பெருமைகளை நிலைநாட்டிய படங்களை பற்றிய முக்கிய தொகுப்பு இந்த புத்தகம்.

எண்பத்தி மூன்றுஆண்டுகள் கோலோச்சும் தமிழ்சினிமாவின் பெருமை பற்றியும் தேசியஅளவில் தமிழ்படங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த நடுவர்களுக்கும் சமர்பிக்கபட்ட புத்தகம்இது.

இந்தபுத்தகத்தின்ஆசிரியர் கோ.தனஞ்செயன், எம்.பி.ஏ பட்டப்படிப்பு படித்த, வியாபார மேலாண்மை அதிகாரி. தற்போதுடிஸ்னி–யு.டி.வி நிறுவனத்தின் பிரதான பொறுப்பில் இருக்கும் இவர் சினிமாவை பற்றிய ஆய்வுகட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளில் எழுதி பிரபலம் பெற்றவர்.

ஆங்கிலத்தில் 2011 ஆம்ஆண்டு இவர்எழுதிய “பெஸ்ட் ஆப் தமிழ்சினிமா” சர்வதேசஅரங்கில் பெரும்பெயர் பெற்றது.

விருது பெற்றது பற்றி கோ.தனஞ்செயன் என்ன சொல்கிறார்?

“என் வாழ்க்கையில் ஒரு பொன்னான நாள். ஜனாதிபதியின் கையால் என் எழுத்துக்கு கிடைத்த விருது தமிழ்சினிமாவுக்கு உரித்தானது. தமிழ்சினிமாவின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைத்த என் புத்தகத்திற்கு கிடைத்த இந்தவிருதால், தமிழ்சினிமாவிற்கு மேலும் ஒரு பெருமையும் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இந்த விருது மேலும் எழுதவும் என்னை ஊக்குவிக்கிறது.”

தேசியவிருது பெறுவதற்காக டெல்லி சென்ற கோ.தனஞ்செயன் உள்ளிட்ட தமிழ்த்திரைப்படக் கலைஞர்களுக்கு டெல்லி தமிழ்ச்சங்கம் பாராட்டுவிழா நடத்தி உள்ளது.

No comments:

Post a Comment