Wednesday, April 29, 2015

6 மாசமா ‘பிச்சை’ எடுத்தேன்! : ஓப்பனாக பேசிய விஜய் ஆண்டனி

‘சலீம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தை ரிலீஸ் செய்ய தயாராகி விட்டார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

சலீமில் தானே இசையமைத்த அவர் இப்படத்தில் முதல்முறையாக தனது உதவியாளர் தீனா தேவராஜனை இசையமைப்பாளராகியிருக்கிறார்.

ஏன் இந்த மாற்றம்?

“இந்தப்படத்துக்கு கண்டிப்பா புதுசா ஒரு இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தனும்னு முடிவு பண்ணிருந்தேன். அதனால என்னோட உதவியாளர் தீனாவை இசையமைப்பாளராக்கி விட்டேன். இயக்குனர், சக தயாரிப்பாளர் ரெண்டு பேருமே அதுக்கு சம்மதம் சொன்னாங்க… பாடல்கள் நல்லா வந்திருக்கு என்றவரிடம், இந்தியா – பாகிஸ்தான் என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் அந்த இரண்டு நாடுகளோட பைனல் மேட்ச்சை நீயா? நானா?ங்கிற ரேஞ்சுல பார்ப்பாங்க.. இந்தப்படத்துல யார் இந்தியா? யார் பாகிஸ்தான்? யார் ஜெயிக்கிறாங்க?… என்கிற கேள்வி பாய்ந்தது.

‘எப்பவுமே நாம தெரியாதவங்க கிட்ட அதிகமா சண்டை போட மாட்டோம். நம்ம வீட்ல உள்ளவங்ககிட்ட தான் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கூட கோபப்பட்டுப்போம்.அதேமாதிரி தான் பாகிஸ்தானும். பாகிஸ்தான் வேற நாடே இல்லை. நம்ம நாடு தான். இங்கேருந்து பிரிஞ்சு போன நாடு தான். அங்க வாழ்ற எல்லா மக்களும் நம்ம ஜனங்க தான். அந்த பாசம் இருக்கிறதுனால தான் இந்தியா – பாகிஸ்தான் விளையாடுறப்போ நாம சீரியஸாயிடுறோம். மத்தபடி இந்தப்படத்துல யார் ஜெயிப்பாங்கன்னு கேட்டதுக்கு படம் பதில் சொல்லும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… என்றார்.

இந்தியா – பாகிஸ்தானை தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தில் பிஸியாகப் போகிறார் விஜய் ஆண்டனி. அதைப்பற்றிய ஒரு கேள்வி வந்தது.

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான்னு கொஞ்சம் டீஸன்ண்ட்டா டைட்டிலா வெச்ச நீங்க இப்போ திடீர்னு பிச்சைக்காரன், சைத்தான்னு இறங்கிட்டீங்களே? இது சரியா என்றார் ஒரு நிருபர்.

நாம் ரோட்டு சிக்னல்ல நின்னுக்கிட்டிருந்தப்போ நம்ம கார் பக்கத்துல வந்து நின்னு பிச்சை கேட்பாங்க. கொடுத்தா வாங்கிக்குவாங்க, இல்லேன்னா போயிடுவாங்க. நான் ஒரு 10 வருஷத்துக்கு முன்னாடி பல புரொடக்‌ஷன் கம்பெனியில போயி அய்யா சான்ஸ் தாங்க சான்ஸ் தாங்கன்னு 6 மாசம் தொடர்ந்து பிச்சை கேட்டுருக்கேன்.

நமக்காக நம்ம அம்மா, அப்பா பல பேர்கிட்ட இறங்கி போயிருப்பாங்க. அதைத்தான் மடிப்பிச்சைன்னு சொல்வாங்க. இப்படி பல பேரோட பிச்சை தான் நம்மளை வாழ வெச்சுக்கிட்டிருக்கு.

ஒரு கெட்டவன், ஒரு பொறுக்கி, இன்னொருத்தனை கெடுக்கிறவன் அவங்களை எல்லாம் தாண்டி ‘பிச்சைக்காரன்’கிறவன் எவ்வளவோ மேல். அவங்க என்ன காரணத்துக்காக பிச்சை எடுக்குறாங்கன்னு தெரியாது. அவங்க கூட இந்தப்படத்துக்காக பிச்சை எடுத்தப்ப தான் அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சது. படத்தோட கதைக்கு பொருத்தமா இருந்ததால அடுத்த படத்துக்கு ‘பிச்சைக்காரன்’னு டைட்டில் வெச்சேன். படத்தை பார்க்கிறப்போ நீங்க டைட்டிலுக்காக காரணத்தை தெரிஞ்சுக்குவீங்க என்றார்.

No comments:

Post a Comment