Wednesday, April 29, 2015

கவுண்டமணிக்கு பில்டப் பாடல்!

கவுண்டமணி கேரவன் உரிமையாளராக நடித்து வரும் படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இந்த படத்தில் படப்பிடிப்புகளுக்கு கேரவன்களை வாடகைக்கு விடுபவராக நடிக்கிறார் கவுண்டமணி. அந்த வகையில் ஏற்கனவே சந்தடி சாக்கில் சினிமாக்காரர்களை கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டு வரும் அவர், இந்த படத்தில் இன்னும் ஜாஸ்தியாக பின்னி எடுக்கிறாராம். அதைக்கேட்டு யார் யாரெல்லாம் பொங்கி எழப்போகிறார்கள் என்பது படம் திரைக்கு வரும்போதுதான் தெரியும். அதோடு, இப்படத்தில் தனது வயதுக்கேற்ற வேடத்திலேயே நடிக்கும் கவுண்டமணிக்கு கதைப்படி கல்யாண வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறாராம். அவரது கல்யாண நேரத்தில் நடக்கும் பிரச்சினைகளும் கதையில் இடம்பெறுகிறதாம். ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் இப்படத்தில் உள்ளதாம். முக்கியமாக, மகளின் காதல் பிரச்சினையை அவர் எப்படி சமூகமாக தீர்க்கிறார் என்பதும் சுவாரஸ்யமாக சொல்லப்படுகிறதாம்.

அதேசமயம், படத்தின் ஓப்பனிங்கில் இன்றைய இளவட்ட ஹீரோக்களுக்கு இணையாக கலர் கலர் டிரஸ்களில் என்ட்ரி கொடுக்கும் கவுண்டமணிக்கு ஒரு செமத்தியான பில்டப் பாடலும் உள்ளதாம். கோலிசோடா படத்துக்கு இசையமைத்த எஸ்.என்.அருணகிரிதான் இந்த படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். கவுண்டமணியின் பில்டப் பாடல் சூப்பராக வந்துள்ளது. அவரது வயதை மனதில் கொள்ளாமல் அவர் யூத்தாக இருந்தால் எப்படியிருக்கும் என்பதை முன்வைத்து இந்த பாடலை உருவாக்கியிருக்கிறேன் என்று சொல்லும் அவர், இந்த பாடல் கட்டாயம் எனது ஹிட் பாடல் வரிசையில் இடம்பெறும் என்கிறார்.

No comments:

Post a Comment