உத்தம வில்லன் படம் ரெடியாகி பல மாதங்களாகியும் புதையலைக் காக்கும் பூதத்தைப்போல் பொத்திப் பொத்தி வைத்திருந்தார் கமல்.
கொஞ்சம் அசந்தாலும் திருட்டு டிவிடி அல்லது திருட்டுவிசிடி.காம் என படம் களவுபோய்விடும் அளவுக்கு காலம் கெட்டுக்கிடப்பது என்னவோ உண்மைதான்.
அதற்காக, கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி உத்தமவில்லன் படத்தை தயாரித்தவருக்கே படத்தைக் காட்ட மாட்டேன் என்று சொன்து எல்லாம்…. டூ மச் அல்ல, டூ தவுசன்ட் மச்.
இந்த விவகாரத்தைத்தான்…”தயாரிப்பாளர் லிங்குசாமிக்கே உத்தமவில்லன் பார்க்க அனுமதி இல்லை! ஒரிஜினல் வில்லனாக மாறிய கமல்..!” என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் ‘பெரிய மனசு பண்ணி’ உத்தமவில்லன் படத்தை தன் அலுவலகத்தில் உள்ள மினி தியேட்டரில் லிங்குசாமிக்குப் போட்டுக்காட்டி இருக்கிறார் கமல்.
உத்தமவில்லன் படத்தைப் பார்த்ததும் லிங்குசாமிக்கு உச்சி குளிர்ந்துவிட்டதாம்.
கமல்ஹாசனால் பட்ட காயம் எல்லாம் பறந்துபோய்விட்டதாம்.
படம் எப்படி பாஸ்? என்று கேட்ட தன் நண்பர்களிடத்தில் லிங்குசாமி என்ன சொன்னார் தெரியுமா?
”நான் தயாரிச்ச படங்கிறதால சொல்லலை பாஸ்… எக்ஸ்ட்ராடினரியா பண்ணி இருக்கார் கமல் சார். குறிப்பாக க்ளைமாக்ஸ் சீன்….வார்த்தைகளால விவரிக்கவே முடியாது. என்னால உறுதியா சொல்ல முடியும். உத்தமவில்லன் படத்துக்கு ஆனந்தவிகடன்ல நிச்சயமா 60 மார்க் தருவாங்க…”
என்று புளகாங்கிதப்பட்டிருக்கிறார்.
அடிப்படையில் எழுத்தாளரான லிங்குசாமிக்கு ஆனந்தவிகடன் தரும் மார்க்தான் ஆஸ்கார் அவார்ட்.
அந்த வகையில் ஆனந்த விகடனின் 60 மார்க்கும் லிங்குசாமியைப் பொருத்தவரை ஆஸ்கார் அவார்ட்தான்.
உத்தமவில்லன் படம் பற்றி லிங்குசாமியின் சிலாகிப்பு இப்படி என்றால் தணிக்கைக்காக படத்தைப் பார்த்தவர்கள், ”கமல் ஸார் நடிச்ச படங்கள்லேயே இந்தப் படம்தான் மாஸ்டர்பீஸ்.” என்று போன் போட்டு பாராட்டித்தள்ளுகிறார்கள்.
இவங்க சொல்றதை நம்பலாமா?
இல்லே…பப்ளிசிட்டிக்காக சும்மா அடிச்சு வுட்றாங்களா?

No comments:
Post a Comment