Tuesday, April 28, 2015

பிரபல தொலைக்காட்சி விருது விழாவிற்கு செக்?

தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று வருடா வருடம் தமிழ் சினிமாவை கௌரவிக்கும் விதத்தில் விருதுகள் கொடுத்து வருகிறது. ஆனால், இந்த வருடம் நடந்த விருது விழாவில் ஏகப்பட்ட பிரச்சனைகளுடன் தான் முடிந்தது.

விருது வழங்கப்பட்டத்தில் முறைக்கேடு, பின் வந்த பார்வையாளர்களை மதிக்கவில்லை என பல குற்றச்சாட்டு இருக்க, இந்த விழாவிற்கு முந்தைய நாளே நடிகர் சிலர் வரக்கூடாது என்று முடிவெடுத்தார்களாம்.

இதில் விருது விழாவிற்கு நடிகர்கள் வந்தால், அவர்களை பயன்படுத்திக் தங்கள் TRPயை ஏற்றிக்கொள்ளும் இந்த தொலைக்காட்சிக்கு, சங்கத்தில் ரூ 1 கோடி கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். அவர்களும் சம்மதிக்க, இறுதியில் எந்த நடிகரும் வரவில்லை என்பது தான் கொடுமை.

No comments:

Post a Comment