Monday, May 4, 2015

‘காஞ்சனா – 2′ பார்த்தாச்சா..? : அடுத்து வர்றா பாருங்க ‘கோப்பெருந்தேவி’!

கோவை சரளா, ஊர்வசி, மனோபாலா, வி.டிவி.கணேஷ், சிங்கம்புலி, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இளவரசு, லொள்ளு சாமிநாதன், மனோகர், பாண்டு, வெண்ணிற ஆடை மூர்த்தி, வடிவுக்கரசி இவங்கெல்லாம் ஒரு படத்துல நடிச்சா அது கண்டிப்பா ஒரு காமெடிப் படமாத்தான் இருக்கணும்னு நியதி இருக்கா என்ன?

பேய் படங்களுக்கு பயந்த காலம் போய் அதெல்லாம் இப்போது குழந்தைகள் விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய காமெடிப் படங்களாகி விட்டது.

அதனால் தான் காஞ்சனா 1, காஞ்சனா 2, அரண்மனை என தொடர்ந்து வசூலை அள்ளுகிறது. அப்படிப்பட்ட இந்த மூன்று ஹிட்டான பேய்ப்படங்களிலும் நடித்த அத்தனை நடிகர், நடிகைகளையும் ஒரே படத்தில் அள்ளிபோட்டு ‘கோப்பெருந்தேவி’ என்ற பிரம்மாண்டமான படத்தை இயக்கி முடித்திருக்கிறார் சங்கர் பழனிச்சாமி.

வழக்கமான பேய் படம் போல இல்லாமல் காமெடி, த்ரில், ஹிஸ்டாரிக்கல், என எக்கச்சக்க ஏரியாக்களையும் டச்சப் செய்து பேய் படங்களுக்குள் ஒரு புதுமையான ரசனையை ரசிகர்களுக்கு தர வேண்டுமென்கிற எண்ணத்தில் படத்தை இயக்கியிருக்கிறார்.

”லடாக்ல ஆரம்பிச்சு விழுப்புரத்துல ஒரு பெரிய கிராமம், பொள்ளாச்சியில கொஞ்ச நாள் ஷூட்டிங்னு கிட்டத்தட்ட 100 நாள் படப்பிடிப்பு நடத்தியிருக்கோம், படத்துல கிராபிக்ஸ் காட்சிகள் எக்கச்சக்கம் உண்டு, அதனால தான் ரெண்டு வருஷமா இந்தப்படம் தயாரிப்புல இருந்துச்சு. இப்போ படத்தை முடிச்ச கையோட இந்த மே மாசம் ரிலீஸ் பண்ற ப்ளான்ல இருக்கேன்” என்றார் சங்கர்.

படத்தில் ஹீரோ என்று யாருமில்லை. ஆனால் ஆராத்யா என்கிற புது கேரளத்து புட்டு ‘ராத்திரி நேரத்து பூஜையில்…’ பாடலுக்கு முட்டிக்கால் போட்டு குத்தாட்டம் போட்டதோடு படத்தில் பேயாகவும் மிரட்டியிருக்கிறார்.

காத்து வாங்கிட்டு இருந்த தியேட்டர்கள் எல்லாம் இப்போ காஞ்சனா2 கலெக்‌ஷன்ல திக்கு முக்காடிப் போயிருக்கிறது. அதனாலேயே கோப்பெருந்தேவி ட்ரெய்லர், போஸ்டர்களையும் பார்த்த வினியோகஸ்தர்கள் ஏரியாக்களை வாங்கிக்குவிக்க  நீ, நான்னு தேடி வந்துக்கிட்டிருக்காங்களாம்.

அப்புறமென்ன? இனிமே ‘கோப்பெருந்தேவி’ இனிமே கலெக்‌ஷன் தேவி தான்!

No comments:

Post a Comment