Monday, May 4, 2015

பைசா நகர கோபுரமும் , தஞ்சை பெரிய கோயிலும்...நீங்களே சொல்லுங்கள் மக்களே...?

உலகின் அதிசயம் என்று கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டங்களாக, 177 வருடங்கள் கட்டப்பட்டது. பைசா   கோபுரத்தின் முதல் தளம் கட்டும் போது, கட்டிடத்தில் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை  விதிகளைக் கூட கடைபிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர். இதனால் கட்டிடம் சரியத் தொடங்கியது.

இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் கட்டுமானப் பணி சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் தொடங்கிய போது,  ஓரளவிற்கு கட்டிடத்தின் அடித்தள மண் ஒத்துழைத்தது. இதனால் மூன்றாவது தளத்தை அமைத்து கொண்டது. ஆனாலும் சாய்ந்த நிலையிலேயே கட்டிடம் இருந்ததால் உலக அதிசயப்பட்டியலில் இன்னும் உள்ளது.

ஆனால் தஞ்சாவூரில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலகையே வியக்க வைக்கும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. கோயிலின் 216 அடி உயரமும், மேலும் கோயில் கோபுரத்திலுள்ள ஒரே ஒரு பாறையின் எடை 80 டன்னும் (80,000 கிலோ) இன்று வரை டிஸ்கவரி சேனலில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு தஞ்சை கோயிலின் கட்டிடக்கலை தொழில்நுட்பம் புரியாத புதிராகவே உள்ளது. 1000 ஆண்டுகளுக்கு முன் எந்த தொழில் நுட்பமும் இல்லாத காலத்தில், எப்படி இப்படியொரு கட்டிடக்கலை என்று வெளிநாட்டினர் தஞ்சை பெரிய கோயிலை சுற்றி சுற்றி வந்து ஆராய்ச்சி செய்த வண்ணம் இருக்கின்றனர். ஆனால் நாமோ உலக அதிசயங்களை எல்லாம் வியந்து பார்க்கும் சமயத்தில்,உள்ளூரின் அதிசயங்களை கவனிக்கத் தவறுகிறோம். அதனால் தான் உலக நாடுகள் சில சமயங்களில் நம்மையும், நம் கலைகளையும் அங்கீகரிக்காமல் அலட்சியப்படுத்தி விடுகின்றன.

No comments:

Post a Comment