Friday, May 8, 2015

ஆராய்ச்சியாளராக சூர்யா , டீச்சராக அமலா பால்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால், பிந்துமாதவி நடிக்கும் குழந்தைகள் சார்ந்த படம் ‘ஹைக்கூ’. படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.

சூர்யா, அமலா பால், இரு குழந்தைகள் என மேலும் சில படங்களும் இணைந்து இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் கசிந்துள்ளது. சூப்பர் பவர் அறிவாளிகளாக இருக்கும் குழந்தைகளை இந்த சமுதாயம் எப்படி பார்க்கிறது. அவர்களுக்கு நடக்கும் பிரச்னை என்ன என்பதே படத்தின் கதையாம்.

இதே பாணியில் அமீர்கானின் ‘தாரே ஸமீன்பர்’ படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் சூர்யா தமிழ் நாடன் என்ற பெயரில் குழந்தைகளின் மனநலம் மற்றும் குணங்களை ஆராய்ந்து தீர்வு காணும் ரோலில் நடிக்கிறார்.

அமலா பால் டீச்சராக நடிக்கிறாராம். குழந்தைகளின் மனநிலையை புரிந்துகொண்டு நடக்கும் நல்ல டீச்சராக வெண்பா என்ற பாத்திரத்திலும், தன் குழந்தையின் பிரச்னை என்ன என தெரியாமல், தவிக்கும் அம்மா கேரக்டரில் பிந்துமாதவியும் நடிக்கின்றனர்.

இப்போதைய சமுதாயத்திற்கான படமாக உருவாகும் இதில் குழந்தைகள் சார்ந்த நிறைய சிறப்பம்சங்கள் உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment