Friday, May 8, 2015

ரிசர்வ் பேங்கில் திருட்டுப்போனால் மம்முட்டியால் கண்டுபிடிக்க முடியுமா..?

ரிசர்வ் பேங்கில் திருட்டா..? அப்படி எதுவும் பேப்பர்களில் செய்தி வந்ததாக தெரியலையே என குழம்புவதற்கு முன்னால் அகில் பால் என்பவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் பிருத்விராஜ் நடித்த 'செவன்த் டே' படம் வந்தது தெரியும் தானே.. அதில் கூட நாற்பது வயதான கேரக்டரில் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் பிருத்விராஜ் கலக்கினாரே, அந்தப்படத்தின் கதாசிரியர் தான் இந்த அகில் பால்.. அந்தப்படத்தில் யாருமே எதிர்பாராத வகையில் இரட்டை க்ளைமாக்ஸ் வைத்து ரசிகர்களை பிரமிக்க வைத்தவர்.

ஆனால் பிரமித்தது ரசிகர்கள் மட்டுமல்ல.. மலையாள மெகாஸ்டார் மம்முட்டியும் தான்.. அதனால் தான் தன்னிடம் கதை சொல்ல அகில் பால் நேரம் கேட்டதும் உடனே வரச்சொன்னார்.

ரிசர்வ் பேங்கில் நடக்கும் கோடிக்கணக்கான ரூபாய் திருட்டையும் அதனை கண்டுபிடிக்கும் அதிகாரியையும் வைத்து அவர் எழுதியிருந்த கதை மம்முட்டியை அசரவைத்துவிட்டது.

இந்தப்படத்தை யார் இயக்குவது என பேச்சு வந்தபோது நீங்களே இயக்கிவிடுங்கள் என அகில் பாலிடம் மம்முட்டி சொல்லிவிட அவருக்கோ இன்ப அதிர்ச்சி.. தன்னுடன் கதை விவாதங்களில் கலந்து கொள்ளும் தனது நண்பர் அனாஸ் கானுடன் சேர்ந்து இந்தப்படத்தை இயக்குகிறார் அகில் பால்.

மலையாள இன்வெஸ்டிகேசன் படங்களின் சித்தப்பா (தந்தை வேறு ஒருவர் இருக்கிறார்) என அழைக்கப்படும் இயக்குனர் மது தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

No comments:

Post a Comment