Wednesday, May 6, 2015

நீங்க தான் என்னை வளர்த்து விடணும் - அழாத குறையா கேட்ட மனோஜ் (தாஜ்மஹால்)

வாரிசு நடிகர்களில் ‘தேறாத கேஸ்’ என்று சொல்லக்கூடிய லிஸ்ட்டில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ‘தாஜ்மஹால்’ என்ற படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்குள் அவரை அறிமுகம் செய்தார் பாரதிராஜா

படம் ரிலீசான ரெண்டே நாளில் ரிலீசான சுவடே தெரியாமல் போய் விட்டது. இருந்தாலும் விஜய்யை வைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் அடுத்தடுத்து சொந்தமாக தயாரித்து இயக்கியது போல பாரதிராஜாவும் அடுத்தடுத்து ‘கடல் பூக்கள்’, ‘அன்னக்கொடி’ என படங்களை தயாரித்து இயக்கினார்.

அப்பா இயக்கிய மூன்று படங்களுமே படுதோல்வி தான். இடையே ‘சமுத்திரம்’, ‘அல்லி அர்ஜூனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என மேலும் சில படங்களிலும் நடித்தார். இருந்தாலும் இன்று வரை ஒரு சோலோ ஹீரோவாக மனோஜால் ஜெயிக்க முடியவில்லை.

இந்த நிலையில், தற்போது மீண்டும் சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள வாய்மை படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் மனோஜ்.

மனோஜ் என்றாலே எல்லோரும் தாஜ்மஹால் படத்தைத் தான் அடையாளமாகச் சொல்வார்கள். இதை அறிந்த மனோஜ் ‘வாய்மை’ பிரஸ்மீட்டில் ‘தாஜ்மஹால்’ படத்தையெல்லாம் மனோஜை மறந்திடுங்க. நான் இப்பவும் போராடிக்கிட்டுத்தான் இருக்கேன். அதனால் தயவு செஞ்சு என்னை நீங்க தான் வளர்த்து விடணும் என்று வேண்டுகோள் வைத்தார்.

நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் என்கிற பிடிவாத மனநிலையிலிருந்து மனோஜ் திரும்பி வந்து விட்டார் என்பதையே இது காட்டுகிறது.

No comments:

Post a Comment