முன்னணி படத்தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆஸ்கார் ரவி என்கிற ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரன், ஐடிபிஐ, ஐஓபி உட்பட பல வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய்களை கடன் பெற்று படத்தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
அன்னியன், தசாவதாரம், ஐ என பல கோடி பட்ஜெட்டில் படு பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்து கோடம்பாக்கத்தையே வியக்க வைத்தார்.
ஐ படத்தைத் தயாரித்தபோது, அந்தப்படத்தின் பேரில் ஐஓபி வங்கியில் சுமார் 84 கோடி கடன் வாங்கி இருந்தார் ஆஸ்கார் ரவி.
கடன் தொகையை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தாதினால் வட்டி குட்டி போட்டதில் 97 கோடியாக கடன் தொகை அதிகரித்தது.
ஆஸ்கார் ரவியிடமிருந்து 97 கோடியை வசூலிக்கும்பொருட்டு நடவடிக்கையில் இறங்கியது ஐஓபி வங்கி.
இந்நிலையில், ஆஸ்கார் ரவியின் அசையா சொத்துகளான, சென்னை அசோக் நகரில் உள்ள ஆஸ்கார் ரவியின் அலுவலகம், அபிராமபுரத்தில் அவர் வசிக்கும் வீடு, மற்றும் வேலூரில் உள்ள தியேட்டர்கள், சேலத்தில் உள்ள அவரது சந்தோஷ், சப்னா, சாந்தம் என மூன்று தியேட்டர்கள் ஆகிய சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது ஐஓபி வங்கி.
இந்நிலையில், இந்த வழக்கின் தொடர்ச்சியாக ஆஸ்கார் ரவி கைது செய்யப்பட்டிருப்பதாக நமக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
சென்னை அசோக் நகரில் உள்ள ஆஸ்கார் பிலிம்ஸ் அலுவலகத்துக்கு சற்று முன் சென்று நேரடி விசாரணையில் இறங்கினோம்.
காலையில் அலுவலகம் வந்த ஆஸ்கார் ரவி சற்று நேரத்தில் கிளம்பிச் சென்றுவிட்டதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
கைது தகவல் பற்றி கேட்டதற்கு, பொய்யான தகவல் அது என்று மறுத்தனர்.
ஆஸ்கார் ரவியின் கைது பற்றி நமக்கு தகவல் தெரிவித்த சோர்ஸ் என்ன சொல்கிறார்?
97 கோடி கடன் பாக்கிக்காக ஐஓபி வங்கி பறிமுதல் செய்த ஆஸ்கார் ரவியின் சொத்துக்களின் மதிப்பு சுமார் 25 கோடிதான்.
அந்த சொத்துக்களின் பேரில்தான் ஆஸ்கார் ரவி வங்கியில் கடன் வாங்கி இருக்கிறார்.
தற்போது அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளநிலையில், பத்திரிகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பத்திரிகை அறிவிப்பு வெளியான பிறகுதான் ஐஓபி வங்கிக்கு ஒரு அதிர்ச்சித் தகவல் கிடைத்திருக்கிறது.
குறிப்பிட்ட அந்த சொத்துக்களின் பேரில் ஏற்கனவே வேறு சில வங்கிகளில் ஆஸ்கார் ரவி பல கோடிகளை கடன் வாங்கி இருக்கிறார் என்பதே அந்த அதிர்ச்சித் தகவல்.
அடமானம் வைக்கப்பட்ட சொத்து என்பது கடன் கொடுத்தவருக்கு சொந்தமானது.
அந்த வகையில், ஏற்கனவே அடமானம் வைக்கப்பட்டதால் வேறு ஒருவருக்கு சொந்தமாகிவிட்ட சொத்தை வைத்து மீண்டும் வேறு வங்கியில் கடன் பெற்றது என்பது மிகப்பெரிய மோசடி.
எனவேதான் ஆஸ்கார் ரவியை சீட்டிங் கேஸில் கைது செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அவர் மீது எந்த காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது?
கைது செய்யப்பட்டு எங்கே வைத்திருக்கிறார்கள்? என்ற தகவல்கள் உறுதியாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், ஆஸ்கார் ரவி இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், அவர் மோசடி செய்த 25 கோடியை வங்கியில் செலுத்திவிட்டால்.. கைது நடவடிக்கையில் இருந்து அவர் தப்பிவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
அதே நேரம் குறுகிய நாட்களில் 25 கோடியை அவரால் செலுத்த முடியாது என்பதால் ஆஸ்கார் ரவி விரைவில் கைது செய்யப்படுவது நிச்சயம் என்றும் சொல்கிறார்கள்.
உறுதி செய்யப்பட்ட தகவல்களுக்காக காத்திருக்கிறோம்.
களத்தில் இருக்கிறோம்.

No comments:
Post a Comment