Sunday, May 10, 2015

ரஞ்சித் வாங்கிய கடனால் தான் சூப்பர் ஸ்டார் படம் கிடைத்தது?

இந்திய திரையுலகமே தற்போது எதிர்ப்பார்த்து கொண்டிருப்பது சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் தான். இந்நிலையில் இவரின் அடுத்த படத்தை அட்டக்கத்தி ரஞ்சித் தான் இயக்கவுள்ளார் என்பது 90% உறுதியாவிட்டது.

இந்நிலையில் ரஞ்சித் வெங்கட் பிரவுவிடம் உதவியாளராக இருந்தது அனைவரும் அறிந்ததே. இவர் கோவா படம் இயக்கும் போது, கொஞ்சம் கஷ்டத்தில் இருந்த ரஞ்சித், அப்படத்தின் தயாரிப்பாளரான சௌந்தர்யா ரஜினிகாந்திடம் கடன் வாங்கியுள்ளார்.

இந்த பணத்தை கொடுக்க வரும் போதெல்லாம் அவரிடம் ஒரு சில கதைகளை கூற, சௌந்தர்யா தான் ரஞ்சித்தை நேராக தன் அப்பாவிடம் கூட்டி சென்றுள்ளார். ரஜினிக்கும் மெட்ராஸ் படம் பிடித்து போக, பொறுமையாக இவர் கூறிய கதையை கேட்டு, சூப்பர் கண்ணா கண்டிப்பா இந்த படம் நம்ம பண்றோம், என கூறினாராம்.

No comments:

Post a Comment