Saturday, May 9, 2015

அஜித் தன் மன்றத்தை கலைத்ததற்கு ’அசல்’ படம் தான் காரணமா?

அஜித்தின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, ஆனால், இத்தனை ரசிகர்கள் இருந்தும் தன் ரசிகர் மன்றம் முழுவதையும் அஜித் கலைத்தார்.

மன்றங்களை கலைத்தும் ரசிகர்கள் மனதில் இருந்து அவரை கலைக்க முடியவில்லை, இன்னும் தல..தல என்று தங்கள் அன்பை காட்டி வருகின்றனர்.

அரசியல் போஸ்டர்களில் தன் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று தான் அஜித் மன்றங்களை கலைத்தார் என்று கூறுவார்கள். ஆனால், உண்மை அது இல்லை, அசல் படத்தின் படப்பிடிப்பின் போது ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் வந்து மிகவும் தொந்தரவு செய்து விட்டார்களாம்.

இதை பொறுமையாக பார்த்த அஜித் இவர்கள் அன்பை இப்படி தேவையில்லாத வழியில் பயன்படுத்து கூடாது என்று தான் மன்றத்தை கலைத்தாராம்.

No comments:

Post a Comment