கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநரான பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் சூர்யா. இந்தப் படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பதாக இருந்தது. இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மூலம் ரஜினிக்கு கதை சொன்னார் பா.ரஞ்சித். அவர் சொன்ன கதை ரஜினிக்குப் பிடித்துப்போக, அவரது இயக்கத்தில் நடிக்க சம்மதித்துவிட்டார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார்.
இப்படத்துக்கான ஆரம்பக்கட்டபணிகள் நடைபெற்று வருகிறது. பா.ரஞ்சித்துக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி அவரது குருவான வெங்கட்பிரபு உட்பட திரையுலகில் உள்ள பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஒரேஒருவர் மட்டும்...எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம். அவர் வேறு யாருமல்ல..தயாரிப்பாளர் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாதான்! மெட்ராஸ் படத்தை அடுத்து நீங்கள் ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்துக்கு படம் இயக்குவதாக அக்ரிமெண்ட் இருக்கிறது. அப்படி இருக்கும்போது என் அனுமதி இல்லாமல் ரஜினி படத்தை இயக்க சம்மதித்தது ஏன்? சூர்யா நடிக்கும் படத்தை முடித்துவிட்டு ரஜினி படத்தை இயக்கப்போங்கள்... என்று ரஞ்சித்துக்கு கண்டிஷன் போட்டிருக்கிறார் ஞானவேல்ராஜா. தன் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாவின் இந்த கண்டிஷனைக் கேட்டதும் பா.ரஞ்சித் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.

No comments:
Post a Comment