10 ஆண்டு முன்பு வரை ஒரு படம் 4 அல்லது 5 திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் நன்றாக ஓடும் பட்சத்தில் அதற்க்கு 100வது நாள் விழா வெள்ளி விழா என கொண்டாடி அதன் வெற்றிக்கு துனை புரிந்த மக்கள், பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து அதில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், அப்படத்தை விநியோகித்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரையிட்ட திரையரங்குகளுக்கு மறியாதை செய்யும் பொருட்டு கேடயங்களை வழங்கி வந்தனர். 2005 பிறகு மல்டிப்ளெக்ஸ்களின் வரவால், பெரிய நகரங்களில் 25 – 35 என்றும், சிற்றூர்களில் 5 – 10 என்றிருந்த திரையரங்ங்கு நுழைவு சீட்டின் விலை 100 ரூபாயை தாண்டியது. இதனால் முன்னனி நடிகர்களின் படத்தின் முதலீட்டை விரைவில் எடுக்க சராசரியாக அனைத்து திரையரங்குகளிலும் திரையிட்டு முதல் வாரத்திலேயே அவர்களின் முதலீட்டை திரும்ப பெற்று வந்தனர்.
பின்னர் அது ஒரு வாரமென்று மாறி முதல் 3 நாட்கள் வசூல் என்னும் காலகட்டத்தை எட்டியது. கடந்த சில வருடங்களாக அனைத்து படங்களுக்கும் இவ்வகையிலேயே திரையிட்டும் வருகின்றனர். சரசரியாக 1.5 கோடி முதலீட்டில் எடுக்கப்படும் ஓர் படத்தினை 50 லட்சத்தில் விளம்பரம் செய்து சுமார் 100 அரங்குகளில் திரையிட்டு 60 சதவீதம் கூட்டம் வந்தால் முதலீட்டை திரும்பபெற்று விடலாம் என்பதே உண்மை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக படம் வெளிவந்த இரண்டாம் நாளே வெற்றி சந்திப்பு என ஒன்றை நடத்தி வருகின்றனர். முன்னனி நடிகர்களின் படத்திற்க்கு கண்டிப்பாக பெரிய திரையரங்ககுளில் முதல் மூன்று நாட்களுக்கு முன்பதிவிலேயே நுழைவுசீட்டுகள் விற்று தீர்ந்துவிடுகின்றன. அதை அடிப்படையாக கொண்டு படம் வெளிவருவதற்க்கு முன்பே வெற்றி விழா கொண்டாடிவிடலாமே? பின்பு ஏன் ஒரு நாள் தாமதமாக கொண்டாட வேண்டும்?
இதை பற்றி விநியோகஸ்தர் ஒருவர் கூறியபோது, நாம் தமிழ் சினிமாவின் மிக் நெருக்கடியான கால கட்டத்திலிருக்கிறோம். ஒரு படம் என்பது தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர் ஆகிய மூவருக்குமே நட்டம் ஏற்படுத்தவில்லை என்றால் மட்டுமே அது வெற்றி படமாகும். இவர்கள் ஆரவார வெற்றி, ஆர்பரிக்கும் வெற்றியென விளம்பரம் செய்து வருமானவரித்துறை ஆய்வுக்குண்டான நகைச்சுவையெல்லாம் சமீபத்தில் அரங்கேறியது. இன்று இருக்கும் விலைவாசியில் மக்களை திரையரங்கிற்க்கு கொண்டு வருவது மிகவும் கடினமாக இருக்கிறது. இன்று முன்னனி கதாநாயக்ர்கள் பட்மே தள்ளாடும் நிலையில், படம் வெகு பிராமதமாக இருந்து குறைந்த முதலீட்டில் எடுத்தால் மட்டுமே இவர்கள் கூறுவதை போல் அது வெற்றி படமாக அமையும், மற்ற படி இவர்கள் வெற்றியென கூறிக்கொள்வது விளம்பரத்துக்காகவும், கவுரவத்துகாகவும் மட்டுமே. அப்படி விழா எடுப்பவர்கள் படத்தின் முதலீடு, வசூல் ஆகியவற்றை பகிரங்கமாக வெளியிடாதது ஏன். ஒரு படம் ஒரு வாரம் நன்றாக ஓடினால் மட்டுமே அதன் வெற்றியை தீர்மானிக்க முடியும். சமீபத்தில் மிகப்பெரிய வெற்றி என கூறிக்கொண்ட படம் விநியோகஸ்தருக்கும், திரையரங்க உறிமையாளருக்கும் 15 கோடி வரை நட்டம் ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் தவிர்த்து அனைவரும் லாபமீட்டுமாரு படத்தை தயாரிப்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என முடித்து கொண்டார்.
இவ்வாறான வெற்று விழாக்கள் யாரை திருப்தி படுத்தவென நமக்கு விளங்கவில்லை.

No comments:
Post a Comment