பரபரவென ஆக்ஷன் காட்சிகளை கொட்டி ரசிகர்களை தன் பக்கம் திருப்புவதற்காகவே ஒரு முழுநீள சூதாட்டக்கதையை கையில் எடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ஆர்.தனுஷ்.
பின்னாடி என்ன நடிக்கும்கிறதை முன்னாடியே தெரிஞ்சிக்கிற ஒரு அபூர்வ சக்தியை கொண்டவர் தான் ஹீரோ கெளதம் கார்த்திக்.
அது எப்படின்னா? சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கிறப்போ பரீட்சையில வரக்கூடிய கேள்விகளை முன்கூட்டியே சக மாணவர்களுக்கு சொல்லி பெரும் பிரச்சனையை கெளப்புற அளவுக்கு!
இந்த அபூர்வ சக்தியால பையனுக்கு பிரச்சனைகள் வந்திடுமோன்னு சங்கடப்படும் அப்பா வஸந்த் சாய் இனிமே இந்த சக்தியை எந்த இடத்திலும் பயன்படுத்தக்கூடாது, யார்கிட்டேயும் இதைப் பத்தி சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிறார்.
அப்பாவோட சத்தியத்தை மீறாத கெளதம் கார்த்திக் கொஞ்ச நாள் அதை சுத்தமா மறந்து நண்பன் சதீஷ் தயவால ஒரு கம்பெனியில வேலைக்கு சேர்ந்து எந்த பிரச்சனையும் இல்லாமல்
போகிறது.
கொஞ்ச நாள் தான் மீண்டும் அதே சக்தி விஸ்வரூபமெடுக்கிறது. அங்க சமயத்தில் நண்பராக அறிமுகமாகிறார் விவேக். கம்பெனியில் ஒரு பிரச்சனை வர, அதை முன் கூட்டியே தெரிந்து சரி செய்ய உதவி செய்கிறார்.
கெளதமின் இந்த அபார சக்தியை தெரிந்து கொள்ளும் விவேக் ஒரு சூதாட்டக் கும்பலிடம் கூட்டிப் போகிறார். நான் 20 லட்சம் ரூபாய் கடன்ல இருக்கேன். நீ வந்து இந்த சூதாட்டத்துல ஜெயிச்சி கொடுத்தா நான் அந்த கடன்ல இருந்து மீண்டுடுவேன் என்று சொல்ல, கெளதமுக்கும் அக்கா கல்யாணத்துக்காக 20 லட்சம் தேவைப்பட 40 லட்சத்தை தாண்டி 1 கோடியை சுளையாக ஜெயித்து விடுகிறார்.
1 கோடியை விட்டுக் கொடுத்த வில்லன் கோஷ்டி சும்மா இருக்குமா என்ன? மீண்டும் விளையாட கெளதமை கூப்பிடுகிறார்கள். கெளதமோ இனிமேல் நான் விளையாடப்போவதில்லை என்று மறுக்கிறார்.
அதன்பிறகு நடப்பது என்ன என்பதை நீங்கள் ஓரளவுக்கு யூகித்து விடலாம் என்றாலும் சின்ன சின்ன ட்விஸ்ட்டுகளை வைத்து ரெண்டு மணி நேரத்தில் படத்தை முடிக்கிறார்கள்.
அப்பா கார்த்திக்கின் துறுதுறுப்பும், அழகும் அப்படியே ஒட்டிக் கொண்டிருந்தும் நடிப்பில் மட்டும் இன்னும் கொஞ்சம் தேற வேண்டும் போல இருக்கிறார் கெளதம் கார்த்திக். நல்ல உசரத்தோடு இருப்பவர் ஒரு ஆக்ஷன் படமென்றால் ஆக்ரோஷம் காட்ட வேண்டாமா? அது டோட்டலா மிஸ்ஸிங். எப்பவும் எதையோ பரிகொடுத்தவர் மாதிரி ஒரு முகபாவனை.
கெளதம் கார்த்திக் – ப்ரியா ஆனந்த் காதல் காட்சிகளில் எந்த பீலிங்க்ஸும் வரவில்லை. ’3′ படத்தில் காதலை உருக உருக சொன்ன ஐஸ்வர்யாவா இப்படி மொக்கையான காதல் காட்சிகளை யோசிப்பார்?
வில்லனாக வரும் டேனியல் பாலாஜி அச்சு அசல் வில்லனாகவே இருக்கிறார். படத்தில் அதிகபட்ச கை தட்டல்களை பெறும் ஒருசில கேரக்டர்களில் அவரும் ஒருவர்.
முதல் பாதி, காதல், கலகலப்பு, காமெடி என்று காட்சிகளை நகர்த்தியிருக்கும் ஐஸ்வர்யா சதீஷின் காமெடி காட்சிகளுக்குப் பதில் விவேக்கின் காமெடிக் காட்சிகளை அதிகமாக்கியிருக்கலாம்.
காமெடி என்ற பெயரில் சதீஷ் பேசும் மொக்கையான டயலாக்குகளுக்கெல்லாம் சிரிப்பு வருவேனா என்கிறது? நல்லவேளையாக அவ்வப்போது பஞ்ச் காமெடி டயலாக்குகளில் கலகலப்பூட்டி நம்மை ‘ரிலாக்ஸ்’ ஆக வைக்கிறார் விவேக்.
கிளைமாக்ஸில் சில நிமிடங்களே வந்தாலும் ரசிகர்களின் நான் – ஸ்டாப் கைதட்டல்கள் தனுஷுக்குத் தான். வேஷ்டி – சட்டையில் கெத்தோ கெத்து.
யுவனின் இசையில் அவரே பாடிய பாடல் என்றால் ஒன்ஸ்மோர் ரகமாகத்தான் இருக்கும். இதிலும் ‘பச்சை வண்ணப்பூவே…” பாடல் முதல் தடவை கேட்ட மாத்திரத்திலேயே காதுகளை ரீப்பிட்டட் பாடலாகிறது.
வேல்ராஜின் ஒளிப்பதிவில் சூதாட்டக் கிளப்பு மட்டுமல்ல, ஹெஸ்ட் ரோலில் வரும் டாப்ஸியும் 1000 வாட்ஸ் பல்பு போல ஜொலிக்கிறார். தேங்க்ஸ் வேல்ராஜ் சார்!
ஒரே ஒரு கானாபாட்டுக்கு எஸ்.ஜே.சூர்யா குத்தாட்டம் போட்டு விட்டுப் போகிறார்.
தமிழ்சினிமாவில் பெண் இயக்குனர்கள் மீது வைக்கப்படும் வழக்கமான ‘குடும்பப் பார்வை’யை மாற்றி பப்,நைட்பார்ட்டி, சூதாட்டம், போதை மயக்கம் என ரூட்டை மாற்றியிருக்கிறார் இயக்குனர் ஐஸ்வர்யா ஆர்.தனுஷ்.
’3′ யில் சீனுக்கு சீன் ஐஸ்வர்யாவின் அதிக மெனக்கிடலை திரையில் பார்க்க முடிந்தது. இப்படத்திலோ எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என்கிற பெருங்குழப்பத்தில் எந்த விறுவிறுப்பும் இல்லாமல், டேனியல் பாலாஜி மாதிரியான பெரிய வில்லன் கேரக்டரை கூட கிளைமாக்ஸில் டம்மியாக்கி தனது கணவர் தனுஷை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்.
ஆக மொத்த பணத்தையும் சூதாட்டத்தில் விட்ட கதை தான்! வேறென்ன சொல்ல..?

No comments:
Post a Comment